When – ( எப்போது ) பயன்பாடுகள் பற்றி பார்க்கலாம்

When  –  எப்போது,  என்ற  வார்த்தையை  எப்படியெல்லாம்  பயன்படுத்தலாம்னு  பார்க்கலாம்.

When  –  ( எப்போது )

When  do  you  get  up  in  the  morning?
நீ  காலையில்  எப்போது  எழுகிறாய்?

I  get  up  at  5 o’  clock  in  the  morning.
நான்  காலை  5  மணிக்கு  எழுகிறேன்.

When  do  you  take  your  breakfast?
நீ  எப்போது  உன்னுடைய  காலை  உணவை  சாப்பிடுகிறாய்?

I  take  my  breakfast  at  8 AM.
நான்  என்னுடைய  காலை  உணவை  8 மணிக்கு  உட்கொள்கிறேன்.

When  do  you  play?
எப்போது  நீ  விளையாடுவாய்?

I  play  in  the  evening.
நான்   மாலை நேரத்தில்  விளையாடுவேன்.

When  is  your  lunch  time?
எப்போது   உனது  மதிய  உணவு  நேரம்?

My  lunch  time  is  between  1 p.m  to  2 p.m.
எனது  மதிய  உணவு  நேரம்  1 மணிக்கும்  2  மணிக்கும்  இடையில்.

When  is  your  friend  expected  to  come ?
எப்போது  உன்னுடைய  நண்பர்  வருவாரென  எதிர்  பார்க்கிறாய்?

My  friend  is  expected  to  come  at  4 pm.
என்னுடைய  நண்பர்  4  மணிக்கு  வருவாரென  எதிர்  பார்க்கிறேன்.

When  are  you  going  to  library?
எப்போது நீங்கள் நூலகத்திற்குப் போகிறீர்கள்?

I  am  going  to  the  library  generally  at  5 ‘o  clock  in  the  evening.
நான்  பொதுவாக   மாலை 5 மணிக்கு  நூலகத்திற்கு செல்கிறேன்.

When  can  you  complete  the  work?
எப்போது  உன்னால்  வேலையை  முடிக்க  முடியும்?

I  can  complete  the  work  before  next  week.
 அடுத்த  வாரத்திற்கு  முன்னதாகவே  என்னால்  வேலையை  முடிக்க  முடியும்.

When  can  you  come  to  my  house?
எப்போது  நீ  என்னுடைய  வீட்டிற்கு  வர  முடியும்?

I  can  come  to  your  house  at  7 pm.
இரவு  7  மணிக்கு  என்னால்  உன்னுடைய  வீட்டிற்கு  வர  முடியும்.

When  did  you  come  to  office?
நீ  அலுவலகத்திற்கு  எப்போது  வந்தாய்?

I  came  to  office  in  the  morning  itself.
நான்  அலுவலகத்திற்கு   காலையிலேயே   வந்துவிட்டேன்.

When  did  you  meet  my  father?
நீ  எப்போது  என்னுடைய  அப்பாவை  சந்தித்தாய்?

I  met  your  father  one  hour  before.
 ஒரு  மணி  நேரத்திற்கு  முன்னதாகத்தான்  நான்  உன்னுடைய  அப்பாவை  சந்தித்தேன்.

When  will  you  come  here?
எப்போது  நீ  இங்கு  வருவாய்?

I  will  not  come  today.
இன்று  நான்  வரமாட்டேன்.

When  will  you  go  to  office?
எப்போது  நீ  அலுவலகத்திற்கு  போவாய்?

I  will  go  to  office  at  9 o clock
நான்  அலுவலகத்திற்கு  9  மணிக்கு  போவேன்.

 

   

Leave a Comment