Clause – part 2 தொடர்ச்சியை காணலாம்

Clause –  part 2 தொடர்ச்சி

Main Clause :

இதில்  Subject,  அதற்குரிய  Finite verb  –   ஆகிய  இரண்டும்  இருக்கும்.  பொருள்  நிறைவு பெற்றிருக்கும். தனி  வாக்கியமாக  பயன்படுத்தலாம்.

For  Ex :

At  sun  set,  the  children  returned  home.

இதில்   At  Sun set  என்பது  Phrase

The  children  returned  home  என்ற  சொற்சொடரை  தனி  வாக்கியமாக  பயன்படுத்த  முடியும்.  பொருள்  நிறைவு  பெற்றுள்ளது.  அதனால்  அதை  Main  clause  என்கிறோம்.

Sub ordinate  clause :

இதிலும்  Subject,  அதற்குரிய  Finite Verb – ஆகிய  இரண்டும்  இருக்கும்.
ஆனால்  நிறைவு  பெற்றிருக்காது.  தனி  வாக்கியமாக  பயன்  படுத்த  இயலாது.

Simple  sentence  – சாதாரண  வாக்கியம்

Complex  sentence  –  கலவை  வாக்கியம்

Compound  sentence  –  கூட்டு  வாக்கியம்

1)  Simple  Sentence :

இதில்  ஒரு  Finite  Verb  – ம்  ஒரு  Subject -ம்   இருக்கும்.  முழுமையனப்  பொருள்  இருக்கும்.

For  Ex  :

Arun  went  to  the  school

kamali  brought  a  pen

2)   Complex  Sentence :

இதில்  ஒரு  Main clause  -ம்  அதைச்  சார்ந்து  ஒன்று  அல்லது  அதற்கு  மேற்பட்ட  Subordinate  clause  இருக்கும்.

மற்றும்  இதில்  Main  Clause  தனித்து  பொருள்  கொடுக்கும்.  Sub-ordinative  Clause
Main Clause – ஐ  சார்ந்து  வரும்.

For  Ex :

If  you  work  hard  you  will  win

இதில்  you  will win  –  Main  clause  தனித்து  பொருள்  தரும்.

If  you  work  hard  என்பது  Sub-ordinative  clause  ..  இது  தனித்து  பொருள்  தராது.
Main Clause  – ஐ  சார்ந்து  இருக்கும்.

3)  Compound  Sentence  :

இரண்டு  அல்லது  அதற்கு  மேற்பட்ட  தனித்துப்  பொருள்  தருகிற  Main Clause  இருக்கும். இவை  And,  So,  Then  போன்ற  Conjunction – கொண்டு  இணைக்கப்பட்டிருக்கும்.

For  Ex :

The  hunter  saw  the  bird  and  he  shot  it

இவற்றில்  ‘And ‘  என்ற  conjunction  – ஆல்  இரண்டு  Main  Clause  இணைக்கப்பட்டிருக்கிறது.

It  rained,  So  the  examination  was  cancelled  இதில்  ‘So’  என்ற  Conjunction  – ஆல்  இரண்டு  Main  Clause  இணைக்கப்பட்டிருக்கிறது.

Related To…………

Clause – வகைகள் பற்றி பார்க்கலாம்

1 thought on “Clause – part 2 தொடர்ச்சியை காணலாம்”

  1. Basic English knowledge வேண்டும். இப்பதிவுகள் தெளிவாகவும் இலகுவாகவும் உள்ளது. ஆரம்பத்தில் இருந்த்து கற்று தரவும். English பேசுவதற்கு வழிகாட்டுன்ன்ங்கள்.

    Reply

Leave a Comment