மருந்தில்லா மருத்துவம்! மருந்தில்லா வாழ்வு, இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்தலாம்

மருந்தில்லா மருத்துவம்!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களின் கூட்டுக்கலவையே மனிதன். சதைப் பிண்டமாய் இவ்வுலகில் பிறந்து
நுகர்ந்து, கண்டு, கேட்டு, தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் மனிதன், சமூகத்தில் ஒரு வானாகிறான். இந்த உலகின் சுழற்சி, மனிதனின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு ஆகியவற்றை உள்ளடக்கியே உள்ளது.

மனிதனின் உடல் தத்துவங்கள் 96-ல் மூன்று தத்துவங்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது. வாதம், பித்தம், கபம் இவையே
அந்த மூன்று தத்துவங்கள். இவை மூன்றிலும் ஏற்படும் ஏற்ற இறக்கங்களே நோயாய்ப் பரிணமித்து மனிதனின் அழிவுக்குக்
காரணமாகிறது.

சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் ‘திரிதோஷம்’ என்பது மேற்சொன்ன விவரமே யாகும். திருவள்ளுவர்கூட,

‘மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’

என்று திரிதோஷத்தைக் குறிப்பிடுகிறார். வாதம். குறைந்தால் ஒரு நோய், கூடினால் ஒரு நோய் என்பது மனிதனை பிடித்துள்ள ஒட்டுண்ணி! அதிலிருந்து மீள்வது எப்படி?

வாருங்கள்! இயற்கை மருத்துவம் வழிகாட்டுகிறது. இயற்கை உணவுகளும் உங்களை நோயிலிருந்து மீட்க முயற்சிக்கிறது. நீங்கள் இயற்கையைக் கண்டு ஒதிங்கிப்  போகிறீர்கள்.

ஏன் இந்த முரண்பாடு?
வாத, பித்த, கபம், தன்னிலை மீறாமல் உடற்பேன்னும் கலையை நீங்களும் கற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

திரிதோஷமும் தன்னிலை மீறுவதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? இது உங்களுடைய கேள்வி. எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்பது எனது பதில்.

ஒருவர் வாத நோயால் அவதிப்படுவதாய்க் கொள்வோம். அவருடைய உணவுப்பழக்கத்தைப் பார்த்தோமானால் மிகவும் முரண்பாடாய். இருக்கும். ஏனெனில், வாத நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனம் வாத நோயை மிகுதிப்படுத்தும் உணவுகளையே பெரிதும் விரும்பும்.

என்னிடம் சிகிச்சை பெற அறுபது வயது முதியவர் ஒருவர் வந்தார். அவரால் சரியாக நடக்க முடியவில்லை, கால்மூட்டுகள் இரண்டும் வீங்கி, பளபளப்பாய் இருந்தது. மூட்டுக்குக் கீழ் மிகவும் வீக்கமுற்ற நிலை, இதில் மலச்சிக்கல் வேறு. உடம்பில் அங்கங்கு வாய்வு பிடித்துக்கொள்ளும். அவருக்கு இதய நோய் இருப்பதாகவும் கூறி, தான் எடுக்கும் மாத்திரைகளை என்னிடம்
காட்டினார்.

உடல் உபாதைகளை விலாவரியாக என்னிடம் ஒப்பித்தார். கடைசியில் என்னைப் பேசவிட்டார். உங்களுக்குப்  பிடித்த உணவுகளை ஒன்று விடாமல்
ஒளிவுமறைவில்லாமல் என்னிடம் சொல்லுங்கள்” என்றேன்  சிறிது யோசித்துவிட்டு பின் தொடர்ந்தார்.

“நான் அசைவம் விரும்பி உண்பேன். அதுவும் இறால் மீன், கோழி இவைகளை வறுத்துச் சாப்பிடுவதென்றால் அலாதிப்பிரியம். நொறுக்குத் தீனி ரொம்பவும் பிடிக்கும். மிக்ஸர், வடை அடிக்கடி சாப்பிடுகிறேன். என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. காராமணி, மொச்சைக் கொட்டை, உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு இவைகளையும் அடிக்கடி சேர்த்துக்கொள்வேன்.” என்றார்.

நான் சொன்ன ஒரே பதில். “உங்கள் நோய் குணமாக வேண்டும் என்றால், நீங்கள் இரண்டு விஷயத்தைக் கைவிட வேண்டும். ஒன்று நீங்கள் எடுக்கிற அத்தனை மாத்திரைகளையும் விட்டுவிட வேண்டும்
.
இரண்டாவது, நீங்கள் விரும்புகிற உங்கள் மனம் விரும்புகிற மேலே சொன்ன உணவுகள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும்” என்றேன். அடுத்து…. அவர் கேட்ட கேள்விதான் மிகவும் முக்கியமானது. “என்னுடைய நோயை மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாதா? என்னால் என்னுடைய
உணவுப்பழக்கத்தை மாற்ற முடியாது” என்றார்.

நான் சொன்னேன்…

“அப்படியானால் நீங்கள் ஆங்கில மருத்துவரைப் போய் பாருங்கள்!”
அதற்கு அவர், “அவர்களும் என்னுடைய உணவுப்பழக்கத்தைத்தான் மாற்றச் சொல்கிறார்கள்” என்றார்.

இன்றைய நிலை இதுதான். எந்த மருத்துவ முறை மருத்துவர்களாய் இருந்தாலும், அவர்களின் பார்வை உணவை நோக்கித் திரும்பியுள்ளது. ‘உணவே உடலுக்கு ஆதாரமான சக்தி’ என்பதை அனைத்து முறை மருத்துவர்களும் உணர. ஆரம்பித்துள்ளனர். ஆனால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் மருந்தால் குணமாகாதா? என்ற ஏக்க நிலையுடன்
விரும்பிய உணவை விட முடியாமல் வேதனை அடைகின்றனர். இந்நிலை மாறவேண்டும்.

மேற்சொன்ன நபரின் முழுமையான இசைவிற்குப்பின், “கீழ்கண்டவாறு சிகிச்சையளிக்கப்பட்டது.

பச்சை உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிது அரிந்து  அத்துடன் ஐந்து மிளகு சேர்த்து, சிறிது புளிப்பு மோர் சேர்த்து  மிக்ஸியில் இட்டு அரைத்து சாற்றினை வடிகட்டி, ஒரு தம்: வீதம் காலை மாலை- இரவு மூன்று வேளைய
கொடுக்கப்பட்டது.

மாலை 4 மணி அளவில், சிறுபசலைக் கீரையை சிறிதாக .
அரிந்து, அத்துடன் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், ம
தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து 200 மி.லி. அளவி
தரப்பட்டது.

இதேபோல் ஒரு வாரம் தொடர்ந்து கொடுக்கப்பட்டதில்
இவருடைய மூட்டு வீக்கம் முழுதாய் மறைந்தது.
அழுத்தத்தினால் பள்ளம் விழும் வீக்கம் முற்றிலும் மறைந்தது.
இங்கே நான் மருந்தே தரவில்லை. அவருடைய மனதைத்
தயார்படுத்தி நல் உணவைத் தந்திருக்கிறேன். அவர்
முழுவதுமாய்க் குணமடைந்துவிட்டார். அவர் இயற்கைக்குத்
திரும்பிவிட்டார்.

இயற்கை உணவை மூன்று வேளையும் உட்கொள்வது
அனைவருக்கும் சாத்தியமில்லை, தினமும் ஒரு வேளையாவது
சாப்பிடலாமே!

வாரத்தில் இரண்டு நாட்கள் காலை உணவாக வெறும் மாதுளை ஜூஸ் மட்டும் அருந்திப் பாருங்கள். உங்கள் உடம்பில் பித்தம் தன்னிலை மீறாமல் இருக்கும்.

மாதுளை ஜூஸ் செய்யும் முறை:
நன்கு முதிர்ந்த மாதுளை ஒன்று
பசும்பால் 100 மி.லி.
சுத்தமான பன்னீர் 100 மி.லி.
ஊறவைத்த வெந்தயம் 10 கிராம்.
னததையும் ஒன்று சேர்த்து அரைத்து
பருகிப்பாருங்கள். 110 வெப்பம் கூட உங்களைப் பாதிப்பது
ஜில்லென்று இருப்பீர்கள் வயது வாழலாம்.

வாரத்தில் இரண்டு நாள் மதிய உணவை இப்படிப்
பழகுங்கள்.
சீரகம் 10 கிராம்.
தண்ணீர் அரை லிட்டர்
கைக்குத்தல் அவல் 125 கிராம்,

சீரகத்தைத் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பின்
அதில் அவலை ஊறவைக்கவும். பின்னர் சிறிது சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து சாப்பிடவும். இத்துடன் இதமாய் ஒரு
இளநீரும் சாப்பிட்டுப் பாருங்கள். அல்சரா..? வரவே வராது.
கை, கால் வலி பறந்தே போகும்.

ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள். மருந்தால்
முடியாதது, உணவால் முடியும். உணவைத் தேர்ந்தெடுத்து
உண்பதில்தான் உடற்பேணுதல் முழுமையாய் இருக்கும்,
பாட்டி வைத்தியம் சொல்கிறேன். குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

சுக்கு 100 கிராம்.
மல்லி விதை (தனியா) 100 கிராம்.
பனைவெல்லம் கால் கிலோ

மூன்றையும் ஒன்றாய்  இடித்துப் பத்திரப்படுத்துங்ள் பித்த, கபம் மூன்றையும் கட்டுப்படுத்தி, நோயைக் குணப்படுத்
மூன்றையும் ஒன்றாய் இடித்துப் பத்திரப்படுத்துங்கள். வாத,
தும், நன்கு ஜீரணமாகவும், கபத்தைக் கரைக்கவும் இது ஒரு
நன்மருந்து.
மூட்டுவலியைக் குணமாக்கும் ‘முடக்கத்தான் தோசை
செய்துபாருங்கள்,

முடக்கத்தான் இலை ஒரு கைப்பிடி
சீரகம் 10 கிராம்.
தோசைமாவு 7 கரண்டி (நடுத்தரமானது.

முதலில் முடக்கத்தான், சீரகம் இரண்டையும் விழுதை அரைத்து, பின்னர் தோசை மாவுடன் கலந்து தோசை சுடவும், சுவைக்கச் சிறந்தது. வாத நோய்க்கு வாகான உணவு .

பித்தம் தணிக்கும் சீரகப்பொடி செய்து பாருங்கள்.
சீரகம் 100 கிராம்.
எலுமிச்சம் பழச்சாறு 50 மி.லி
இஞ்சிச்சாறு 50 மி.லி.
மல்லிச்சாறு 50 மி.லி.
நெல்லிச்சாறு 50 மி.லி.
சீரகத்தை, ஒவ்வொரு சாற்றிலும் இரண்டு நாள் வெயிலில்
ஊறவைத்து, சீரகம் நன்றாகக் காய்ந்த பிறகு தூள் செய்து
பத்திரப்படுத்தவும், பித்தம் தணிக்கும் அற்புதமான மருந்து.

கபம் தணிக்கும் முசுமுசுக்கை தோசை செய்துபாருங்கள்,
1. முசுமுசுக்கை ஒரு கைப்பிடி
2, சீரகம் 10 கிராம்
3. மிளகு 5 எண்ணிக்கை
4. தும்பைப்பூ 20 எண்ணிக்கை
5. தோசை மாவு 7 கரண்டி
ஒன்று முதல் நான்கு வரை உள்ள அனைத்தையும் ஒன்றாய்க்
கலந்து விழுதாய் அரைத்து, மாவுடன் கலந்து, தோசை
வார்க்கவும். சளி, இருமல், இரைப்பு, ஆஸ்துமா போன்றவற்றை
இவை குணமாக்கும்.

Related To :

கண் அழகை மெருகேற்றும் வகையில் கண் இமை முடிகளின் அடர்த்தியையும், ஆரோக்கியத்துக்கும் மற்றும் வளர்ச்சிக்கும் சில குறிப்புகள்.

0.00 avg. rating (0% score) - 0 votes