இயற்கையான முறையில் உடல் பருமனைக் குறைத்திட புதிய வழி முறைகள்

உடல் பருமனை உணவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமே எளிதில் குறைக்க முடியும். முதலில் நாவின் ருசியைக் கட்டுப்படுத்த வேண்டும். இயற்கை உணவுகள், மற்றும் குறைந்த வெப்பசக்தி (கலோரி) கொண்ட
உண வுகளைத் தேர்ந்தெடுத்தல் மூலம் உடல் பருமனிலிருந்து விடுபடலாம். நவீன மருத்துவத்தில் உடல் எடையைக் குறைக்க, மூன்று வழிகளில் மருந்தைத் தேர்ந்தெடுக் கிறார்கள்.

அவை:
1. பசியைக் குறைக்கும் மருந்துகள்
2. நீரைப் பிரிக்கும் மருந்துகள்
3, ஹார்மோன் மருந்துகள்

பசியைக் குறைக்கும் மருந்துகளை, உடல் எடையைக் குறைக்கப் பயன்படுத்தினால், உடல் பலவீனப்படுகிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டு பித்தி!
நோய்கள் உண்டாகிறது.

நீரைப் பிரிக்கும் மருந்துகளை உட்கொண்டால் உடல் எடையானது குறைந்ததுபோல் தோற்றமளிக்கும். மீண்டும் உடல் எடை பழைய நிலைக்குத் திரும்பிவிடும். ஏனெனில்  நமது உடலானது 70% நீரின் தன்மையுடையது.

ஹார்மோன் மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால், பல பின்விளைவுகள் (Side effects) உண்டாகிறது. ஹார்மோன் மருந்துகளின் தொடர் உபயோகத்தினால் புற்றுநோய்கள் (Cancer) உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது.
ஆக முறையற்ற உணவுப்பழக்கத்தினால் உண்டாகும் அதிக உடல் எடையை முறைப்படுத்தப் பட்ட உணவுகளைக் கொண்டே எளிதில் குறைக்க முடியும். அதுவும் வேகவைக்காத பச்சை உணவுகளில், குறைந்த அளவு வெப்பசக்தி (கலோரி) காணப்படு வதால், உடல் பருமனைக் குறைப்பதில் இயற்கை
உணவுகளே மிகச் சிறந்த மருந்தாகும்.

மருந்தில்லா மருத்துவம்! மருந்தில்லா வாழ்வு, இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்தலாம்

முளைக்கட்டிய பயிறு சாலட்:

முளைக்கட்டிய பச்சைப்பயறு                                          50 கிராம்
முளைக்கட்டிய கொண்டைக் கடலை                          50 கிராம்
சிறிதாக அரிந்த தக்காளி                                                      50 கிராம்
தேங்காய்த் துருவல்                                                             1 தேக்கரண்டி
இவையனைத்தையும் நன்றாகக் கலந்து,
இத்துடன் எலுமிச்சைச்சாறு                                             2 தேக்கரண்டி
மிளகுத்தூள்                                                                             1 தேக்கரண்டி
சிறிதாக அரிந்த வெங்காயம்                                            25 கிராம்
தேன்                                                                                            1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

இவைகளையும் ஒன்றாகக் கலந்து, காலை உணவாகக் கொள்ளவும், உடலுக்கு களட்டம் தரும் குறைந்த கலோரித்திறன் கொண்ட உணவாகும். இதில் கொழுப்புச்சத்து இல்லை. இதை தினசரி ஒரு வேளை உணவாகக் கொண்டால், அதிக உடல் எடை குறைந்து, சீரான, ஸ்லிம்மான உடல் எடையைப் பெறலாம்.
பழக்கலவை (சாலட்)

விதையில்லா திராட்சை                                             50 கிராம்
அன்னாசிப்பழத்துண்டு                                                 50 கிராம்
விதை நீக்கிய ஆரஞ்சுகலவை                                  50 கிராம்
கேரட் துருவல்                                                                  50 கிராம்
எலுமிச்சை சாறு                                                              1 தேக்கரண்டி

இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து, இதில்

தயிர்                                                                                       1 கப்
புதினா அரைத்த விழுது                                                1 தேக்கரண்டி
கொத்தமல்லி அரைத்த விழுது                                 1 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு
வெள்ளை மிளகுத்தூள் தேவையான அளவு

‘இவைகளையும் கலந்து வைத்துக்கொள்ளவும். அதனை மதிய உணவாகக் கொண்டால், உடல் எடை மற்றும் தொப்பையை எளிதில் குறைத்து விடலாம். இந்த இயற்கை உணவு பல்வேறு உடல் உபாதைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

வெள்ளரி பூசணி பானம்

வெள்ளரித்துண்டுகள்                                                   100 கிராம்
வெண்பூசணித் துண்டுகள்                                         100 கிராம்
வெள்ளை மிளகு                                                            10 கிராம்
ஏலரிசி                                                                                10 கிராம்
எலுமிச்சை சாறு                                                            50 மிலி
தேன்                                                                                   25 மி.லி

வெள்ளரி, வெண்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் ‘அரைத்து, அத்துடன் மேற்கண்டவைகளையும் சேர்த்து சுவையாக அருந்தவும். உடல்பருமன், தொப்பையைக் குறைக்கும். சுவையான பானம். பிரசவத்திற்குப்பின் ஏற்படும் தொப்பை நீங்க, இதனை வாரம் 3 முறை சாப்பிட மிகச் சிறந்த பலன் தரும்.
மேலும்  பெண்களுக்கு மாதவிடாயின் போது காணப்படும். வயிற்றுவலி, அதிக உதிரப் போக்கு ஆகியவற்றுக்கும் சிறந்தது.

உடல் பருமனைக் குறைக்கும் கொள்ளுப்பால்:
கொள்ளை நன்றாக ஊறவைத்து முளைகட்டி வைக்கவும். மறுநாள் இதை எடுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துப் பால் எடுக்கவும். இதனை தினசரி ஒருவேளை சாப்பிட்டுவர, உடல்பருமன், தொப்பை மற்றும் கொழுப்பு, ஊளைச்சதை கரையும்.

உடல் எடையைக் குறைக்க மாதிரி உணவுப்பட்டியல்

காலை உணவு

1. இரண்டு டம்ளர் ராகி கஞ்சி (அல்லது)
2. 4 அல்லது 6 இட்லி, கொத்தமல்லி சட்னியுடன் (அல்லது)
3.  கோஸ், பீன்ஸ், சௌ சௌ போன்றவைகளைச் சேர்த்து
‘சூப்பாகச் செய்து அருந்துதல், (அல்லது)
4.  ஏதேனும் ஒரு கீரை சூப் மட்டும்.

மதிய உணவு

1. ஒரு கப் சாதம்-மற்றும் சமைத்த காய்கறி, கீரைகள், 1
சப்பாத்தி, (அல்லது)
2. காய்கறி சாலட், பழக்கலவை

இரவு உணவு

இரவு  உணவை 7 மணிக்குள் முடித்துவிட வேண்டும்,
1.மூன்று இட்லி அல்லது இடியாப்பம் (அல்லது)
2. பப்பாளி, மா துளைப்பழம், சாத்துக்குடி, கொய்யா
மூசு, அத்திப்பழம், வெள்ளரிக்காய் இவைகளில்
தேவையான அளவு.
3. இரவு உணவை முடித்தபின், தண்ணீர் தவிர வேறெதுவும்
படியும் வரை சாப்பிடக் கூடாது.

மேலே சொல்லப்பட்ட உணவு வகைகளோடு மெது  ஓட்டம் (Jogging), நடைப்பயிற்சி (Walking) சைக்கிள் விடுதல் Cycling), B30 ugg (Swimming) CWTS/T F@TLD (Yoga). Cycling), நீச்சல் பழகுதல் (Swimming) யோகாசனம் (Yoga),
மூச்சுப்பயிற்சிகள் (Breathing Excercise) ஆகியவற்றினாலும், அதிக உடல் எடையைக் குறைக்க முடியும்.

அழகே வா! அருகே வா!

“நேற்று ஒரு பெண்ணைப் பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன், ஆகா என்ன அழகு… பளிச்சென்ற தேகம், வாகாய் வளைத்துப் பின்னப்பட்ட கூந்தல், கிறக்கத்தைத் தரும் சிரிப்பு. முத்துப்போல் பல் வரிசை… மொத்தத்தில் அவள் ரசித்து
செதுக்கிய சிலை… அவள் உருவம் இன்னும் என் கண்ணுக்குள்ளே கட்டுண்டு கிடக்கிறது.” இப்படி அழகில் மயங்கி, வருணிக்கும் வாலிபர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அல்லது நீங்களும் வருணித் திருப்பீர்கள். உண்மைதானே!

உலகில் ஒவ்வொரு பொருளிலும் அழகு இருக்கிறது. அழகான அழகு என்பது போற்றப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயங்கள் மெருகூட்டப் பட்டால் இன்னும் அழகாகின்றது. ஆக, அழகைப் பேணுவது என்பது சிறந்த கலை.
ஒரு காலத்தில் அழகுநிலையங்களுக்குப் (Beauty Parlour) பெண்கள் செல்வது ஆடம்பரத்தின் தன்மையாய்க் காணப்பட் பெண்கள் முதல், பூ விற்கும் பெண்கள் வரை, தங்களை அழகு படுத்திக் கொள்ள இத்தகைய நிலையங்களை நாடுகிறார்கள்.

இவர்கள் மட்டுமா நாமும்தான். அழகைப் பேண
முயற்சிக்கிறோம்.

நம் து உடம்பின் அழகு இரண்டு வழிகளில்
வெளிப்படுகிறது.

1.நமது உணவு, முறையான பழக்கம், நல்லெண்ணம், நற்சிந்தனை       இவைகளால் ஏற்படும், உள்ளம் சார்ந்த அழகு.

2. பிறப்பால் ஏற்படும் அழகு, அதனை முறை படுத்துவதனால் கிடைக்கும் தனி அழகு.

இத்தகைய அழகை ஆராதிக்கும் இயற்கை உணவுகள்,
மூலிகைகள், முகப்பூச்சுகள், வாசனைத் திரவியங்கள் பற்றிய
விவரங்களை அடுத்தடுத்து காண்போம்.


Related To :
48 நாளில் ஐஸ்வர்யாராய் போல் வசிகரமாகவும், சிம்ரனைப்போல் சிலிம்மாகவும் மாற ( இஞ்சி, சுக்கு, கடுக்காய் -யில் அடங்கியுள்ள அளவற்ற நன்மைகள்

48 ரூபாயில் உன்னத அழகு!

கண் அழகை மெருகேற்றும் வகையில் கண் இமை முடிகளின் அடர்த்தியையும், ஆரோக்கியத்துக்கும் மற்றும் வளர்ச்சிக்கும் சில குறிப்புகள்.

4.00 avg. rating (81% score) - 1 vote