பெண்களைத் துரத்தும் மாதவிடாய்க் கோளாறுகள் அதற்கான தீர்வுகளைப் பற்றிக் காண்போம்,

பெண்களைத் துரத்தும் மாதவிடாய்க் கோளாறுகள் அதற்கான தீர்வுகளைப் பற்றிக் காண்போம்

இன்றைய வாழ்வியல் சூழலில் நோயில்லா மனிதரே இல்லை எனலாம். நாளொரு பொழுதும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடாக, நோய்களும் வளர்ந்து கொண்டுதான் வருகிறது. திட்டமிடாத உணவு முறைகள், நாவின் ருசிக்கு
அடிமையாகிவிடுதல், முறையற்ற பழக்க வழக்கங்கள், நெருக்கடியான வாழ்க்கைப் பாங்கு இவையே நோய்களுக்குக் காரணமாகிறது.

பெண்களின் பூப்பெய்தும் தன்மையைக் கொண்டாடி மகிழும் பண்பாடு, இந்தியர் அனைவருக்கும் உள்ள தனிச்சிறப்பாகும். தன் மகள், ‘பூப்பெய்தவில்லையே’ என ஏங்கும் பெற்றோர் மனநிலை மிகவும் ஏக்கத்துக்கு
உரியது.

பூப்பெய்தும் பெண்களுக்குத் தனியாக உணவுகளைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு ஊட்டமான உணவுகளைக் கொடுத்து நல் ஆரோக்கியத்திற்கு வித்திட்டு, மாதாந்திர சுழற்சிப்படி, மாதவிடாய்த் தொடர்ந்து ஏற்பட வழி ஏற்படுத்திக் கொடுக்கும் பெற்றோர்கள் போற்றலுக் குரியவர்களே.

குமரிப் பருவமுற்ற மங்கையருக்கு மாதவிடாயானது 28 நாட்களுக்கு ஒரு முறை வெளிவந்து, தொடர்ந்து சுழற்சி கொண்டிருக்கும். மாதாந்திரச் சுழற்சி திடீரென நின்றுவிடுவதையே, மாதவிலக்கற்ற நிலை (Secondary menorrhoea)
என்கிறோம். பெண்கள் கருத்தரிக்கின்ற வேளையில் மாதவிடாய் முற்றிலும் நின்றுவிடும். ஆனால் கர்ப்பமில்லாமல் மாதவிடாய் நின்று விடுவதே நோய்க்குறைபாடாகும்.

நோயுற்ற சில பெண்களுக்கு மிகவும் குறைந்த அளவில் மாதவிடாய் வெளியேறும். இன்னும் சிலருக்குச் சில துளிகள் மட்டுமே வெளியேறும். வேறுசிலருக்கோ, மாதவிடாயில் ஒரு துளிகூட உதிரப்போக்கு இராது. இன்னும் சில பெண்களுக்கு மாதவிடாய் அதிக அளவில் வெளியேறும். ஐந்து முதல் பத்துநாட்கள் கூட உதிரம் படும், சில பெண்களின் மாதாந்திரச்  சுழற்சி (Menstrual Cycle) மாதம் இருமுறை கூட இருப்பதுண்டு.

மாதவிடாய் அதிக உதிரப்போக்குடைய பெண்களுக்குக் கர்ப்பப்பை சரியாக வளர்ச்சியடையாமலோ, கருப்பை முனையில் நார்க்கழலைக் கட்டிகள் (Submucos Fibroid) வளர்ந்தோ அல்லது கருப்பையில் புற்றுநோய் (Uterine cancer)
பாதிப்போ இருக்கக்கூடும்.

உடல் முழுவதும் அழகு தரும் சில அற்புதமான இயற்கை உணவுகள் மற்றும் பானங்கள் ( healthy juice and beauty juice)

கீழ்க்கண்ட காரணங்களால் மாதவிடாய் வராமல் போகலாம்

1. நாளமில்லா சுரப்பிகள் பாதிப்படைவதனால்,
மாதவிலக்கு நின்றுவிடலாம்.

2. கர்ப்பப்பை கோளாறுகளினால் மாதவிலக்கு நின்று
போகலாம்.

3, கருமுட்டைகள் பாதிப்படைந்து, மாதவிடாய் வராமல்
இருக்கலாம்.

குறைந்து விடுவதாலும், அடிக்கடி பட்டினி கிடத்தலாலும் மாதவிடாய் வராமல் இருக்கலாம்..

இன்றைய உணவு முறைப் பழக்கங்கள், மன அழுத்தம் மிகுதியாகிப்போன வாழ்வியல் சூழல், உணவு முறைகளில் விழிப்புணர்வில்லாமை ஆகிய காரணங்களால், பெண்கள் பெரும்பாலும் இக்குறைபாட்டிற்கு உள்ளாகின்றனர்,

பெண்களைத் துரத்தும் மாதவிடாய்க் கோளாறுகள் சரி செய்ய எளிய வழிகள் :

மாதவிடாய் குறைவு, மாதவிடாயின் போது ஏற்படும் வலி, வயிற்றுப்பொருமல், அதிக இரத்தப்போக்கு ஆகிய குறைகளை நீக்க கீழ்க்கண்ட உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்! (மாதவிடாயின் போது)

1. மாதவிடாயின் போது, உணவில் எண்ணெயில்
வேகவைத்த, வறுத்த உணவுகளை அறவே நீக்க வேண்டும்.

2. வாயுவை மிகுதிப்படுத்தும் நொறுக்குத் தீனிகளான வடை, போண்டா, பஜ்ஜி, மிக்ஸர், கடலைப் பருப்பு, காராமணி, மொச்சைக் கொட்டை, உருளைக்கிழங்கு, வாழைக்காய், கருணையுடன் கூடிய அனைத்துக் கிழங்குகளுக்கும் மொத்தமாய் ஒரு ‘தடா’ போடுங்கள்.

3. ஊறுகாய், புளிசாதம், தக்காளிசாதம், எலுமிச்சைப்பழம், சப்பாத்தி, மைதாவில் செய்யப்படும் உணவுகள் கூடாது.

4. மாதவிடாயின்போது, முட்டை உட்பட அனைத்து அசைவ உணவுகளையும் அறவே நீக்கவேண்டும்.

5. மாதவிடாயின் போது உடல் களைப்புறுவதால் உடலுறவைக் கண்டிப்பாய் தவிர்க்க  வேண்டும்.

Related Article

அந்த 3 நாட்களுக்கு வேண்டிய உணவுகள் Ladies! A few tips that emerge from the level of blood in menstruation


0.00 avg. rating (0% score) - 0 votes