By Mullai..
நிஜம் நிழல் ஆனது
நாம் கதையின் நாயகி இரம்மியமான காலை பொழுது … இனிமையான குயில் பாடும் சத்தம் கேட்டு …படுக்கையை விட்டு எழுகிறாள் … அவளை யாரோ திவ்யா திவ்வியான்னு கூப்பிடுகிற சத்தம் அவள் காதில் கேட்கிறது … யார் என்று பார்த்தால் அவள் மாமா .. நேரம் ஆகி விட்டது கல்லூரிக்கு ரெடியா … என்று கேட்கிறார் … ம்ம்ம் என்று சொல்லி கிளம்பினாள் திவ்யா…
யார் இந்த திவ்யா ?
இவள் சொந்த ஊர் கோயம்புத்தூர் …..இவளுக்கு
தாய் தந்தை இல்லாததால் …திருச்சியில் உள்ள அவள் பாட்டி வீட்டில் தங்கி படிக்குறாள் …அவளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு இருப்பதால் அவளின் மாமா அருண் இன்னும் திருமணம் செய்யவில்லை …அவளின் பாட்டிக்கும் வயது ஆகிவிட்டது … வரலக்ஷ்மி அவள் பாட்டியின் பெயர் …
அழகான குடும்பம் .. திவ்யா B.Sc வேதியில் 3 – ஆம் ஆண்டு அந்த ஊரில் பெயர் போன காவேரி மகளிர் கல்லூரியில் படிக்குறாள் அவள் யாரிடமும் பேச மாட்டாள் அமைதியானவள் கூச்ச சுபாவம் கொண்டவள் , அவளுக்கு அந்த கல்லூரியில் தோழிகள் 2 பேர் ஒருத்தி பவித்ரா … அவள் பட பட வென்று பட்டாசு போல பேசுவாள் இன்னொருத்தி அறிவுக்கரசி ..திவ்யாவின் துயரம் மறக்க துணையாய் இருப்பவர்கள் இவர்கள்தான் …
சரிங்க நாயகி அறிமுகம் போதும் ,இப்போது நம் கதையின் நாயகன்
அதாங்க நம்ம ஹீரோ -வ பற்றி பார்க்கலாம் .
சிங்கார சென்னை – தான் நம் நாயகனின் ஊர் … அவன் குடும்பம் கொஞ்சம் பெருசு … அம்மா, அப்பா, அக்கா, அக்கா குழந்தைகள் , இன்னும் ஒரு அக்கா, பெரியம்மா மற்றும் இவன். மன்னிக்கவும் பேர் கூற மறந்துவிட்டேன், ராஜேஷ் என்கின்ற ராஜி …வீட்டில் ஆயிரம் கஷ்டம் .. அனைத்தையும் கடந்து … பாண்டிச்சேரியில் ராஜீவ்காந்தி கல்லூரி யில் முதலாம் ஆண்டு M.CA படிக்குறான்…. குடும்பத்தை பிரிந்து வந்து ரூம் எடுத்து தங்கி படிக்குறான்….
நம்ம ஹீரோ-வின் அப்பா பெரிய பணக்காரர் இல்ல… ஆனா பசங்கள நல்லா படிக்க வைக்குறார் .. பேங்க் லோன் வாங்கிதான் ராஜி – ஓட படிப்பு ஓடிட்டு இருக்கு …
சரி இப்போ நம்ம ஹீரோயின் கதைக்கு வருவோம். நம்ம ஹீரோயின் ரொம்ப அழகு, நல்ல குணம் ஆனால் தைரியம் இல்லாத பொண்ணு. எங்கனா போகும்னுனாகூட பாட்டி இல்லனா மாமா -வின் துணையோ அவசியம்.அவளுக்கு ஒரு அண்ணா இருக்காங்க ஆனால் பேருக்கு மட்டும்தான் அவன் அண்ணா அவன் பெயர் திவாகர் …ஒழுங்கா ஒரு வேலை இல்லை நிரந்தரமா ஒரு இடத்துல இருக்க மாட்டான் அதனால் அவனை நம்பர்த்தும் , நம்பாததும் ஒன்று…….
நிழல் தொடரும்……
மேலும் படிக்க :