தீராத தலைவலி, ஒற்றை தலைவலி மற்றும் தலைசுற்றல் அனைத்தும் நொடிப்பொழுதில் குணமாக அற்புதமான தீர்வு

 

தலைவலி

 
தேவையான பொருட்கள்:
 
மிளகாய் 200 கிராம்
 
மிளகு 100 கிராம்
 
பால் 1/2 லிட்டர்
 
நல்லெண்ணெய் 1/2 லிட்டர்
 
செய்முறை:
 
மிளகாய், மிளகு ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உபயோகிக்கும் முறை:

 
வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வரவேண்டும்.
 
தீரும் நோய்கள்:
 
எவ்விதமான தலைவலியும் குறையும்.
 

ஒற்றை தலைவலி

 
அறிகுறிகள்:
 
ஒற்றை தலைவலி.
தேவையான பொருள்கள்:
 
1, கேரட் சாறு.
 
2. வெள்ளரிக்காய் சாறு.
 
3. பீட்ரூட் சாறு.
 
 
செய்முறை:
 
ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.
மேலும் சில தீர்வு 

ஒற்றை தலைவலி

 
ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படும் இஞ்சியானது தலை வலியைக் குணப்படுத்தும் தன்மையுடையது. எனவே தலை. வலிக்கும் போது, உண்ணும் உணவில் சிறிது இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால், தலைவலியை குறைக்கலாம்.
 
பாலிலும் தலைவலியை குறைக்கும் தன்மை உள்ளது. அதிலும் பாலில் உள்ள வைட்டமின் பி என்னும் ரிபோஃப்ளேவின், உயிரணுவின் ஆற்றலை அதிகரிக்கும். உயிரணுவின் ஆற்றலானது குறைவதால் தான் ஒற்றை
தலைவலியே உண்டாகிறது.

 

 
 
தலைவலிக்கு வாழைப்பழ தோல்
 
தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க கடைகளில் விற்கப்படும் தலைவலி பாம்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் சரிசெய்ய முடியும்.
 
தேவையான பொருட்கள்:
 
1. வாழைப்பழத்தின் தோல்
2 .ஐஸ் கட்டிகள்
3 .ஒட்டும் டேப்
 
செய்முறை:
 
வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒட்டும் டேப் கொண்டு தோலுடன் சேர்த்து ஒட்டி, பின் தரையில் படுத்து, நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக கையில் ஒரு துணியை வைத்துக் கொண்டு, நெற்றியில் இருந்து வழியும் நீரை துடைத்துக் கொள்ளுங்கள்.
 
 

தலைச்சுற்றல்

 
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
 Go To Next Page11


0.00 avg. rating (0% score) - 0 votes