நிஜம் நிழல் ஆனது இரண்டாம் பாகம்
By Mullai :
திவ்யாவுக்கு அவள் மாமா பிறந்தநாள் பரிசு வழங்க நினைத்தார்,என்ன வேணும்னு திவ்யாவை கேட்டார் எதுவும் வேண்டாம் மாமா உங்க அன்பே போதும்-னு திவ்யா சொன்னால்…ஆனாலும் அருண் அவள் சொன்னதை பெரிதாக நினைக்காமல் மொபைல் போன் ஒன்றை பரிசாக வாங்கினான்.
அருணுக்கு திவ்யாவை திருமணம் செய்துகொள்ளும் ஆசை உள்ளது. ஆனால் அதை திவ்யாவிடம் சொல்ல தயங்கினான்…. திவ்யா மனதில் அந்த எண்ணம் இல்லை தனக்கு அப்பா இல்லாததால்… அருணை அந்த ஸ்தானத்தில் நினைத்தால், அவளுக்கு பிறந்த நாள் வந்தது, காலேஜ்க்கு போனால்… பவித்ரா அவளுக்கு கண்ணாடி வளையல் பரிசாக அளித்தாள்…. திவ்யாக்கு கண்ணாடி வலையல்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்…. அதை வாங்கிக் கொண்டு பவித்ராவை கட்டி அணைத்து கண் கலங்கினாள்.
திவ்யாவின் அண்ணன் திவாகர்…. ஊர் ஊராக சுத்துவதும்…கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி கொண்டும் இருந்தான், நடுவில் காதல் வேலையும் வேறு, அவளின் பேயர் யமுனா, அவள் வீட்டில் சொல்லாமல் வந்து திவாகரை கல்யாணம் செய்து கொண்டால்…. அதுவும் நம்ம ஹீரோயின் பிறந்த நாள் அன்று…. எப்போவும் போல்…. காலேஜ் முடிந்து வீட்டுக்கு வந்தாள் திவ்யா…. அண்ணனுக்கு வேலை கிடைத்தால் மாமாவுக்கு சிரமம் தராமல் எங்கேயாவது வீடு வாடகைக்கு எடுத்து இருக்கலாம் என்று நினைத்தாள்…. இன்றோடு அந்த நினைவும் பட்டு போனது.
ஹீரோயின் கதையை பார்த்த நாம இப்போ ஹீரோ என்ன ஆனாருனு பார்க்கலாம் வாங்க….. ஹீரோ ராஜிக்கு கேண்டீன்ல சாப்பிட்டு சாப்பிட்டு உடம்புக்கு முடியல, அதனால ஊருக்குப் போயி அம்மா அப்பா’ வ பார்த்திட்டு வரலாம்னு போனான். அவங்க அக்கா பசங்க’னா அவனுக்கு உயிர்…. அவங்க கூட விளையாட்றதும், வெளியில சுற்றுவதும், சந்தோஷமா …. 4 – கு நாள் சென்றது. மறுபடியும் காலேஜ்க்கு போனான்.. அவங்க வீட்ல அவனை பொண்ணு மாதிரி வெளில எங்கயும் அனுப்ப மாட்டார்கள்.
அதனால் நம்ம ஹீரோ காலேஜ்ல Tour கூட்டிட்டு போறாங்கனு பொய் சொல்லிட்டு தன்னுடன் UG படிச்ச பையனோட திருமணத்திற்கு. ஹைதராபாத் போயிட்டு நண்பர்களுடன் ஜாலியா Enjoy…பண்ணிட்டு மறுபடியும் காலேஜ்க்கு வந்து படிக்க ஆரம்பித்தான்.
அந்தப் பக்கம் நம்ம ஹீரோயின், அவங்க அண்ணா சொல்லாம கல்யாணம் பண்ணிட்டானு கவலையா இருந்தால், அவள் மாமா பார்த்துட்டு.. அவ மனதை ரிலாக்ஸ் செய்ய, அவங்க அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு சென்றான். அருண் அக்கா வீடு பெங்களூரு.. இதனால் இரயிலில் புறப்பட்டார்கள், இரயில் பயணம்… இனிமையாக இருந்தது…. திவ்யாவுக்கு…. முதல் முறை நீண்டத் தூரம் பயணம்… ஜன்னல் ஓரம் இருக்கை…. பயணத்தில் நகரும் மரம்…. ரயிலில்… பிச்சைக் கேட்டு வருவோர் சத்தம்…. இது எல்லாம் திவ்யாவுக்கு புதிது.
அவன் அக்கா புவனா, கணவர் கதிர், பசங்க ஆர்த்தி,கண்ணன்.. ஆர்த்தி 7ம் வகுப்பு… கண்ணன் 10ம் வகுப்பு..படிக்கிறார்கள். அவங்க எல்லாரையும் பார்த்ததும் திவ்யாவின் பாரம் கொஞ்சம் குறைத்தது. பெரியம்மா ஆறுதல் சொன்னால் அப்புறம் பீச் போனால்… அங்கு ஒரு வேலை சாப்பாட்டிற்காக ஒரு சிறுமி கழுற்றின் மேல் தன் உயிரைப் பணயம் வைத்து நடப்பதை பார்த்து… வருந்தினாள்…. அலையின் சத்தம்…. அலை கரைக்கு வருவதும்…. பின்னால் ஒரு அலை துரத்தி வருவதும்…. கண்கொள்ளா காட்சியாக இருந்தது… திவ்யாவுக்கு. இப்படி 1 வாரம் சினிமா,பார்க்,பீச்,கோவில்னு சுற்றிப் பார்த்துவிட்டு திருச்சி திரும்பினார்கள்…..என்ன தான் திருச்சி ரங்கநாதர், உச்சி பிள்ளையார் கோவில்னு போயி இருந்தாலும் இந்த அனுபவம் திவ்யாவுக்கு புதுசு தான்.
நாம வாழ்க்கைல எதையெல்லாம் நாம முதல் முதலாக பார்கின்றோமோ, சுவைக்கறோமோ,ரசிக்கின்றோமோ, அது எதுவும் நம்ம மனதை விட்டு சீக்கிரம் மறையாது… இந்த பயணமும் அப்படி தான்….
மீண்டும் நிழல் தொடரும் …….
முதல் பாகம் படிக்க :
நிஜம் நிழல் ஆனது பாகம் 1