உலகத்தையே கலக்கிய நம்பமுடியாத 5 புதிய தொழில்நுட்பங்கள்


புதிய தொழில்நுட்பங்களின் மூலம் நம்பமுடியாத மாற்றங்கள்               பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் புதுப்புது கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளவும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட வகைகளில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தவும்  கடுமையான
முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் அவற்றில் சில முயற்சிகள் வெற்றி அடைந்து விட்ட சில முயற்சிகள் வெற்றி பெறும் தருவாயில்
இருக்கின்றன அப்படி பட்ட ஐந்து புதுமையான கண்டுபிடிப்புகளையும்
தொழில்நுட்பங்களையும் பற்றி இப்போது பார்ப்போம்.1 . Color X-Ray  நமது உடலுக்குள் ஏற்படுகின்ற பாதிப்புகளை கண்டறிய உதவுகின்றன இன்று  அனைத்தும் வண்ணமயமாக்கப்பட்ட நிலையில், X – Ray படங்கள் மட்டும் இன்னமும் கருப்பு வெள்ளையிலேயே இருக்கின்றன.
கருப்பு நிற X -Ray Flim – யை  வெளிச்சத்தில் பார்க்கும்போது அதில் பதிவாகி இருக்கும் உடல் பகுதிகள் வெள்ளை நிறத்தில் தெரியும் ஆனால் இன்னும் சில வருடங்களில் X-Ray- கள்  முப்பரிமான முறையில் வண்ணத்தில் படம்பிடிக்கப்போகின்றன, சுருக்கமாக CERN எனப்படும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பின் பணிபுரியும் நியூஸ்லந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்  முப்பரிமாண  வண்ண எக்ஸ்ரே படங்களை எடுக்கும்
முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.


மெடிமிக்ஸ் என்று அழைக்கப்படும் அணுதுகள்  கண்காணிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படும் இவ்வித முப்பரிமாண வண்ண எக்ஸ்ரேக்களில்  உடல் உறுப்புகளை மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் காணமுடியும். மெடிமிக்ஸ் எனப்படும் இந்த முப்பரிமாண X-Ray இயந்திரமானது ஒரு கேமராவை போன்று அணுத்துகள்களை
எண்ணிக்கை செய்து அவற்றைப் Fixel – களாக மாற்றி மிகத் துல்லியமான
படங்களை உருவாக்கித் தருகின்றது எவ்வித முப்பரிமாண வண்ண எக்ஸ்ரே
மூலமாக நம்மால் தசைகள் எலும்புகள், மற்றும் குருத்தெலும்பு ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை  எளிதாகக் காண முடியும்.  மேலும் உள்  உறுப்புகளில் உருவாகும் கேன்சர்  கட்டிகளின் அளவு மற்றும் நிலையை சுலபமாக கண்டறிய முடியும்.2. Nano Eye Drops  முன்பெல்லாம் பார்வை குறைபாட்டால் பாதிக்கப் பட்டோர்
கடினமான கண்ணாடி அணிய வேண்டிய நிலை இருந்தது அதன் பிறகு கான்டாக்ட் லென்சுகள் அறிமுகப்படுத்தப்பட்டன கண்ணாடியை அணிய விரும்பாதோர், கான்டாக்ட் லென்சுகள் அணிந்து கொண்டார்கள் ஆனால் கான்டாக்ட் லென்சுகள் அணிவதில் பல அசெளகரியங்கள் இருந்தன பின்னர்
Geo Optics எனப்படும் லேசர் அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டு எளிதாகவும், விரைவாகவும் பார்வை  குறைபாடானது சரி செய்யப்பட்டதால்
கண்ணாடி அல்லது  கான்டாக்ட் லென்சுகள் அணிய  வேண்டிய தேவையில்லாமல் போனது தற்போது கண் மருத்துவத்தில் மற்றுமொரு புதிய சாதனையாக கண்களில் வெறும் சொட்டு மருந்தை விடுவதன் மூலமாக பார்வை குறைபாட்டை சரி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள், நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சொட்டுமருந்தை முதற்கட்டமாக பன்றிகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்ததில் வெற்றி கிட்டியுள்ளது. தற்போது தொடர் ஆய்வு நிலையில் இருக்கும் இந்தச் சொட்டு மருந்து சில வருடங்களில் கண் மருத்துவத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது, கிட்ட மற்றும்  எட்டப் பார்வை குறைபாடு உடையவர்கள் கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்சுகளின் உதவியின்றி வெறுமனே இந்த சொட்டு மருந்தை கண்களில் இட்டுக் கொள்வதன் மூலம், தெளிவான பார்வையை பெற முடியும்.

3. Flying Taxi  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து
நெரிசலை சமாளிக்க வானிலும் வாகனங்களை இயக்கும் புதிய
தொழில்நுட்பம் இன்னும் சில ஆண்டுகளில் அறிமுகப்படுத்தவிருக்கிறது முதற்கட்டமாக சீனாவை சேர்ந்த econ எனும் நிறுவனம் Flying Taxi – களை
அறிமுகப்படுத்தியுள்ளது.

Airo Car  என்று அழைக்கப்படும் இது கிட்டதட்ட ஒரு Trone – யை  போலவே
வடிவமைக்கப்பட்டுள்ளது, பேட்டரியில் இயங்க  கூடிய இது இரண்டு பேர் பயணிக்கதக்கதாகவும்  சுமார் 15 கிலோமீட்டர் வரை பறக்க வல்லதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் இது ஆட்டோபைலட் முறையில் இயங்கவல்லது அதாவது இறங்க வேண்டிய இலக்கை செட் செய்துவிட்டால் போதும் இலக்கை “அடைந்ததும் இது  தானாகவே கீழே இறங்கிவிடும்.4. Gene Editing  கடந்த 2017 ஆம் ஆண்டு  உயிருள்ள ஒரு நபரின் மரபணுவில்
மாற்றம் செய்துள்ளனர் உயிரியல் விஞ்ஞானிகள் Oregon பல்கலைக்
கழகத்தை சார்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் இதயநோய் ஏற்பட காரணமான மரபணுவை நீக்கி ஒரு  கருவில் மரபணு மாற்றத்தை செய்து வெற்றி,
கண்டுள்ளனர், மேலும் மற்றொரு உயிரியல் ஆய்வு நிறுவனம்  CRISPER DIY தயாரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பன்றியின் மரபணுத் தொகுதியில் மாற்றம் செய்து செய்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது, இதன்  மூலமாக அந்த பன்றிக்கு 37 பன்னிக்குட்டிகள் எவ்வித தொற்று நோயும் இன்றி மிகுந்த ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளன, இறுதியாக ஹன்டர் சின்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட  41 வயது நோயாளி ஒருவரின்
மரபணுவில் மாற்றம் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, சிகிச்சையின் முடிவுக்கு காத்திருக்கிறார்கள், சிகிச்சையின் முடிவு வெற்றி அடைந்தாள்
இனிவரும் காலத்தில் எவ்வித தொற்று நோய்கள் பரம்பரை நோய்கள் ஏதும்
இன்றி குழந்தைகளைப் பிறக்கச் செய்ய முடியும் என்பதும் மரபணுவில் மாற்றம் செய்வதன் மூலம், நோயாளியின்  நோயை குணப்படுத்த முடியும் என்பதும் உயிரியல் விஞ்ஞானிகள்  நம்பிக்கையாக இருக்கின்றது.

5. Head Transplant  இதனை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக கூட இருக்கலாம்
மனித தலையையே  மாற்றி வைக்கும் அறுவை சிகிச்சையை வரும் காலத்தில் பரவலாக கூடிய வாய்ப்பு இருக்கின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த SERGIO CANAVERO என்ற மருத்துவ வல்லுநர் ஒரு பிணத்தின் தலையை எடுத்து மற்றொரு பிணத்திற்கு பொருந்தியதாகவும் 18| மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் தண்டுவட நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்கள் ஆகியவை வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாகும். 
இதன் மூலம் இனிவரும் காலங்களில் உயிருள்ள மனிதர்களிடத்திலும் தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் எனவும், விஞ்ஞானி SERGIO CANAVERO அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க :

நம்மளை ஏமாற்றும் நிறுவனங்களின் 5 வியாபார தந்திரங்கள் 

page 2
page no 7
0.00 avg. rating (0% score) - 0 votes