வான்கோழியின் 2 வகையான இறைச்சிப் பற்றின சுவாரசியமான உண்மைகள்


எந்த நிற இறைச்சியில் சத்தானது மற்றும் ருசியானது  என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

 
அவ்வப்போது வான் கோழி அடித்து, குழம்பு வைப்பவர்கள் வான் கோழி இறைச்சியில் இருக்கும் ஓர் வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள். அதாவது இறைச்சிக்காக வான்கோழியை உறிக்கும் போது அதன் சில பகுதிகளில் இறைச்சியானது இருண்ட நிறத்திலும் சில பகுதிகளில் இறைச்சிப் வெளிர் நிறத்திலும், இருப்பதைப் பார்த்திருக்கலாம்.
 

ஒரு வான்கோழி இறைச்சி  ஏன் வெவ்வேறு நிறமாக இருக்கின்றது, இவ்விரு நிற  இறைச்சிகளில் உள்ள வேறுபாடு என்ன.

 
ஒரு வான்கோழி கொண்டிருக்கும் இருவகை இறைச்சிகளும் உண்மையில்
ஒன்றுக்கொன்று வேறுபட்ட இழைநழை அமைப்பையும் சுவையையும்,
கொண்டிருக்கின்றனர்.
 
வான்கோழின் இருண்ட நிற  இறைச்சியானது  ஈரப்பற்றுடனும்  அதிக சுவையுடன் இருக்கும், வெளிர் நிற  இறைச்சியானது குறைந்த அளவு கொழுப்புடன், உலர்ந்தும் இருக்கும் பெரும்பாலானவர்கள் இருண்ட நிற இறைச்சியைக் காட்டிலும் வெளிர்நிற இறைச்சியை கேட்டு வாங்கி செல்கின்றனர், இதற்கு காரணம் அதில் கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதால் ஆரோக்கியமானது என நம்புகிறார்கள்.
 
ஆனால் உண்மையில் இருண்ட மற்றும் வெளிர்  நிற இறைச்சிகளுக்கு இடையில் இருக்கும் கொழுப்பின் சதவிகிதம் அவ்வளவு  அதிகம் ஒன்றும் இல்லை ஒரு கம்ப்யூட்டர் மவுஸ் அளவுள்ள வெளிர்  நிற இறைச்சியில், சுமார் 146 கலோரிகளும், 4 கிராம் அளவில் கொழுப்பும், இருக்கின்றது. அதே அளவில் இருண்ட நிற இறைச்சியில் 232 கலோரிகளும், 13 கிராம் அளவிலான கொழுப்பும், இருக்கிறது. 
சரி  ஒரே வான்கோழியில்  இரு வேறு விதமான இறைச்சிகள் இருக்க என்ன காரணம். ஓர் வான்கோழி இறைச்சி அதன் தசையில் வகை மற்றும் மயோகுளோபினை பொறுத்து மாறுபடுகின்றது. மயோகுளோபின் என்பது ஓர் புரதம் ஆகும்,  இது ஆக்ஸிஜனை சேமித்து தசை இயங்கும்போது தசை செல்களுக்கு அனுப்புகிறது.
 
வான்கோழிக்கு பறக்க மற்றும் ஓட உதவும் தசைகள் loads Pitch muscles அதாவது இழுவைத் தன்மை குறைந்த தசைகள்  என அழைக்கப்படுகின்றன. நீண்ட நேரம்  இயங்கும் திறன் பெற்றுள்ள  இந்த தசைகளில் மயோகுளோபின் அதிகமாக இருக்கும் அதிகம் மயோகுளோபின் காரணமாக இறைச்சியானது இருண்ட நிறத்தில்  இருக்கும்.
 
வான்கோழிகள் சதா நடந்து கொண்டே இருப்பவை எனவே அவற்றின் கால்கள் மற்றும் தொடைகளில் அதிக அளவில்  மயோகுளோபின் இருப்பதால் அவற்றின் இறைச்சி, இருண்ட நிறத்தில் இருக்கும்.
 
வான்கோழிகள் அவ்வளவாக பறப்பதில்லை எப்போதாவதுசிறகை மட்டும் அடிக்கும் எனவே வான்கோழியின் மார்பு மற்றும் சிறகு தசைகள், Fast Pitch Muscles  அதாவது  இழுவைத்தன்மை  அதிக கொண்ட  தசைகள் என அழைக்கப்படுகின்றனர். 
 
இந்தத் தசைகள்  விரைவாக இயங்கும் தன்மை உடையவை அதே நேரத்தில் விரைவாகச் சோர்ந்து  போகக் ‘கூடியவை, மயோகுளோபின்  குறைந்த அளவில் இருக்கும் இதன் காரணமாக அப்பகுதி இறைச்சி, வெளிர் நிறத்தில் இருக்கிறது.
0.00 avg. rating (0% score) - 0 votes