ஏசி வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் -Things to consider before buying AC


ஏசி வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்

கோடை காலம் துவங்கிவிட்டது வெறிகொண்டு தாக்கும் வெயிலை சமாளிக்க ஏசி எந்திரம் நமக்கு பெருந்துணை புரிகின்றது, ஏசி இல்லாத வீடுகளிலும் கூட வெயில் தரும் வேதனையை தாங்க முடியாமல், புதிதாகச் இயந்திரம் வாங்க
ஆலோசித்துக் கொண்டு இருப்பார்கள் ஆனால் தங்கள் வீட்டுக்கு ஏற்ற ஏசி எது,
என்பதை தீர்மானிப்பதில் குழப்பமடைவார்கள், அத்தகையோருக்கு சில ஆலோசனைகளை பற்றி இப்போது  பார்ப்போம்.
 
முதலில் ஏசி தேவைப்படும் அறையின் பரப்பளவைப் பொருத்து ஏசியின் Capacity  தீர்மானித்துக்கொள்ள வேண்டும், உதாரணமாக 120 முதல் 140 சதுர  அடி பரப்புள்ள ஒரு அறைக்கு 1 டன் திறன் கொண்ட ஏசி போதுமானது, அறையின்   பரப்பளவு  150  முதல்  180  சதுர  அடியாக  இருந்தால்  அதற்கு  1.5 Ton AC -யும் , 180 முதல் 240 சதுர அடி கொண்ட  அறைக்கு  இரண்டு Ton  திறனுடைய ஏசியும்  ஏற்றதாக  இருக்கும்.
 
குறிப்பாக  உங்களது அறை கிச்சனுக்கு நெருக்கமாகவும், சூரிய ஒளி  நேரடி தாக்குதலுக்கு  உள்ளாகும் சுவர்களையும் கொண்டிருந்தால் ஹையர் கூலி  கெபாசிட்டி உடையாய் ஏசியை தேர்ந்தெடுப்பது நல்லது.
,
அடுத்ததாக தற்போது அதிகரித்துவரும் மின்சார கட்டணத்தை கருத்தில் கொண்டு மின்சாரத்தை சேமிக்கும் திறன் உடைய ஏசியை தெரிவு செய்ய வேண்டும்.
 
இன்று  பெரும்பாலான Ac பிராண்டுகள்  ‘Bureau Of Energy Efficiency என்ற அமைப்பால் தரப்படுத்தப்பட்ட Energy Efficiency ரேட்டிங் – யுடன், வருகின்றனர் இந்த ரேட்டிங் ஆனது ஸ்டார் வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் Ac இயந்திரத்தின் மீது அதன் மின்சார சேமிப்பு திறனை பொறுத்து ஒன்று முதல் ஐந்து ஸ்டார்கள் வரை குறிக்கப்பட்டிருக்கும், அதிக ஸ்டார்களை கொண்டிருக்கும், ஒரு  ஏசி  குறைந்த ஸ்டார்களை கொண்ட ஏசியை காட்டிலும் குறைந்த மின்சாரத்தில் நிறைவாக  இயங்கும் உதாரணமாக 5 ஸ்டார், ரேட்டிங்க் கொண்ட ஒரு ஏசி மிகவும்  திறமையான முறையில் உங்கள் அறையை குளிரவைக்கும். 
 
இங்கு திறமை என்பது 5 ஸ்டார் ரேட்டிங் உடைய ஒரு  Ac  4 ஸ்டார்  அல்லது  அதற்கும், குறைவான ஸ்டார்களை  கொண்ட    Ac -களை  காட்டிலும்  உங்கள் அறையை குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி வேகமாக குளிர்விப்பதாகும் 5 ஸ்டார் ரேட்டிங்க் கொண்ட ஏசி களின் விலை சற்று  கூடுதலாகவே இருக்கும் ஏசியின் ஸ்டார் ரேட்டிங் ஒவ்வொன்றாக அதிகரிக்க  அதற்கேற்ப சுமார் 2500 ரூபாய் அளவில் விலையும் அதிகரிக்கும் நீங்கள் ஏசியை  அதிக அளவு பயன்படுத்துபவராக இருந்தால் மின்சார கட்டணத்தை,  மிச்சப்படுத்த விலை சற்றுகூடுதலாக இருப்பினும் குறைந்தது 3 ஸ்டார்  ரேட்டிங்கை உடைய ஏசியை தேர்வு செய்வது நல்லது.
 
அடுத்ததாக Warranty உள்ளிட்ட பிற கூடுதல் அம்சங்கள் மற்றும் நல்ல வாடிக்கையாளர் சேவையை வழங்கும் பேசி பிரண்டாக பார்த்து தேர்ந்தெடுப்பது அவசியம் சில  Ac  பிராண்டுகளின்  சர்வீஸ்கள்  எங்கோ ஒன்றுதான் இருக்கும் இதனால் பழுதுகளை நீக்க வேண்டி நீங்கள் சர்வீஸ் சென்டருக்கு  கால்  செய்தால்  அவர்கள்  வருவதற்குள்  வெயில்  காலம்  போய்
மழைக்காலம் வந்து விடும் எனவே  அதிக ஆண்டுகள்  வாரண்டியும் Customer Service  கேரண்டி தரும் ஏசி பிராண்டாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். 
 
அடுத்ததாக நீங்கள் வாங்கும் ஏசியின் Out Door Unit அதாவது கம்ப்ரஸர் 19 முதல் 60 டெசிபலுக்கு மிகாமல் சப்தமிடும் Ac  பிரண்டாக பார்த்து தேர்வு செய்யுங்கள் ஏனெனில் உங்கள் ஏசியின் Indoor Unit உங்களது தூக்கத்தை சுகமாக்க அவுட்டோர் யூனிட் பக்கத்து வீட்டாரின் தூக்கத்தை சோகமாகிவிடும்.
 
இப்போதெல்லாம் Ac – கள்  அறையை குளிர்விக்க மட்டுமன்றி சூடாக்கவும் உகந்ததாக தயாரிக்கப்படுகின்றன அதாவது கோடை கால அறையை குளிர்விக்கவும்  குளிர்காலத்தில் அறையை சூடாக்க ஹீட்டரை போலவும் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
 
இத்தகைய Horton Cooling   Ac -கள்  விட 35 சதவீதத்திற்கும் அதிகமான மின்சாரத்தை சேமிக்கின்றன. ஆகவே குளிர்காலத்தில் ஹீட்டரை விரும்புவோர் ஹீட்டிங் Mode வசதியுடைய இத்தகைய மாடல்களை தேர்ந்தெடுத்து  கொள்ளலாம்.
 
0.00 avg. rating (0% score) - 0 votes