தர்பூசணி பழம் வாங்கும் முன் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்


தர்பூசணிப் பழம் தேர்வு செய்வது எவ்வாறு ?

கோடைகாலம் வரத் துவங்கி விட்டதால் சாலையோரங்களிலும் சந்தைகளிலும் தர்பூசணிப் பழங்கள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன கடும் வெயிலினால் உருவாகும் தாகத்தை சமாளிக்க பலரும் தர்பூசணி பழங்களை வாங்கி செல்வார்கள் அப்படி வாங்கி வந்த பழத்தை வீட்டிற்கு வந்ததும் சாப்பிடும் போதுதான் தெரியும் அது தரமில்லாத தர்பூசணி என்று, எனவே இனிப்பும் சுவையும் மிகுந்த தர்பூசணி பழங்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை பற்றியும் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட தர்பூசணி பழங்களை எவ்வாறு அடையாளம் காண்பது. என்பதைப் பற்றியும் இப்போது பார்ப்போம்.
நீங்கள் வாங்கும் தர்பூசணி பழத்தைக் கையில் எடுத்து உருட்டி பாருங்கள் தர்பூசணி பழத்தின் ஒரு பக்கத்தில் மஞ்சள் திட்டு காணப்படும், இதனை field spot  என்று அழைக்கின்றார்கள். field spot என்பது தர்பூசணி செடியில் இருக்கும்போது அதன் ஒரு பகுதி தரையை தொட்டுக் கொண்டிருக்கும்.
அப்படித் தொட்டுக்கொண்டிருக்கும் இடமானது நாளடைவில் மஞ்சள் நிறமாக மாறும் அந்த இடமே field spot  பாட்டு என்று அழைக்கப்படுகிறது. நன்றாக பழுத்த ஒரு தர்பூசணி பழத்தின் field spot  மஞ்சள் நிறத்தில் அல்லது ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் சற்றே பிசுபிசுப்புடன், இருக்கும் மாறாக field spot பகுதி வெள்ளை நிறத்தில் இருந்தால் அது முழுமையாக பழுக்காத தர்பூசணி பழம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தர்பூசணி பழத்தின் மேல் வலைப்பின்னலாக பழுப்பு நிற கோடுகள் இருந்தால் அந்தபழம் அடிபட்டு காய்ந்து , விட்டதாக கருதி பலரும் அதனை வாங்க மாட்டார்கள் ஆனால் உண்மையில் அது ஒரு நல்ல  பழமாகும். ஒரு தர்பூசணி பூவாக இருக்கும்போது, மகரந்தத்தை சேகரிக்கும் பொருட்டு தேனீக்கள் மற்றும் பிற பூச்சி இனங்கள் பல முறை அணுகுவதால் தழும்புகள் ஏற்படுகின்றன, இப்படி வந்த தழும்புகள் பூ காயாகி  கணித்தாலும்  அதன் மீது ஒரு வலைப்பின்னலை ஒத்த வடிவத்தில் காய்ந்து இருப்பதைப் போல பழுப்பு
நிறத்தில் காட்சியளிக்கும் இதனை Webbing  என்று அழைக்கின்றார்கள்.
 இந்த Webbing – யை அதிகமாக கொண்ட தர்பூசணி பழங்கள் அதிக சுவையுடன்
இருக்கும். தர்பூசணி பழங்கள் ஆண் பெண் என இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன, ஆண்  தர்பூசணி பழங்கள் பெரியதாகவும்  சற்றே நீள் வட்ட வடிவத்திலும் இருக்கும் இத்தகைய பழங்கள் சுமாரான இனிப்பு சுவையுடனும், அதிக நீர் திறனுடனும், இருக்கும் ஆனால் பெண் தர்பூசணி பழங்கள் முழுமையான வட்ட வடிவத்திலும், அதிக இனிப்பாகவும் இருக்கும் இது தெரியாத பலரும் பழம் பெரியதாக இருப்பதாக கருதி அதிக இனிப்பில்லாத தர்பூசணி களை வாங்கி செல்கின்றனர்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் தர்பூசணி பழம் மிகவும் பெரியதாகவோ, அல்லது சிறியதாகவோ இல்லாமல் ஒரு சராசரி அளவு இருக்கும் பழமாகப்  பார்த்து தேர்ந்தெடுங்கள் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பழம் அதன் அளவுக்கேற்ற கணத்துடன் இருக்கிறதா, என்பதை உணர்ந்து அதன் பிறகு வாங்குங்கள் இத்தகைய பழங்களே அதிக இனிப்புடன் இருக்கும்.
இறுதியாக தர்பூசணி பழத்தின் காம்பை கவனியுங்கள் காம்புகள், காம்பு காய்ந்து  இருந்தால் அந்த பழம் கிழம் ஆகி விட்டது என்பது அர்த்தமாகும், காம்பு பச்சையாக இருப்பின் அந்த பழம் பூரணமாக பழுப்பதற்கு முன்பே பறிக்கப்பட்டது  என்பதை புரிந்து கொள்ளலாம். இத்தகைய பழங்களை வழங்குவதை தவிர்த்து விடுவது நல்லது.
சரிஒரு தர்பூசணி பழம் அதிக அளவு நைட்ரேட் ரசாயனத்தை கொண்டுள்ளது என்பதை எவ்வாறு கண்டறிவது தாவரங்களின் வளர்ச்சிக்கும் விளைச்சலுக்கும்  நைட்ரேட்  சார்ந்த உரங்கள்  முக்கிய அங்கமாக இருக்கிறது என்றாலும் தர்ப்பூசணி பயிரிடும் சில விவசாயிகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக நைட்ரேட் உரங்கள் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு செய்வதால் சுமார் மூன்று வரங்களில் தர்பூசணிப் பழங்கள் அதிக எடையுடன் வளர்ச்சி அடைந்து விடுகின்றனர், இப்படி கூடுதலான நைட்ரேட் உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்களை வாங்கி உண்ணும் போது உடலில் நைட்ரேட்டின் நச்சுக்  கலந்துவிடுகிறது.
ஆகையால் நீங்கள் ஒரு தர்பூசணி பழத்தை வாங்கியவுடன் அதனை Cut  பண்ணி பாருங்கள் பழத்தின் தோல் பட்டை வெள்ளையாக அன்றி மஞ்சள் நிறமாகவும், பழத்தில் வெள்ளைக் கோடுகளும் இருந்தால் அது நைட்ரேட் ரசாயனத்தின் செறிவு அதிகம் உள்ள பழம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அடுத்ததாக தர்பூசணியை கையில் எடுத்து நன்றாக உருட்டி பாருங்கள் பழத்தின் மீது எங்காவது ஓட்டை இருந்தால் வாங்குவதை தவிர்த்து விடவும் ஏனெனில்அப்பழத்தில்  நைட்ரேட் ஊசி மூலம் செலுத்தப்பட்டு இருக்கலாம், அடுத்து நீங்கள் தேர்ந்தெடுக்கும் தர்பூசணி பழத்தின் ஒரு பகுதியை வெட்டி பாருங்கள் பகுதியில் பெரிய அளவிலான  பள்ளம்  இருந்தால் அதனை வாங்குவதை அல்லது உண்பதை தவிர்த்து விடுங்கள்.
ஏனென்றால் அப்பழம் அதிகமாக பழுத்து இருக்கலாம் அல்லது வளர்ச்சி ஹார்மோன்கள் செலுத்தப்பட்ட பழமாகவும்  இருக்கலாம் அதிகமாக பழுத்த தர்பூசணி பழம் சற்று கசப்பு, சுவையுடன் இருக்கும் வளர்ச்சி, ஹார்மோன் செலுத்தப்பட்டதாக இருந்தால் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் தர்பூசணிப் பழத்தில் லைசோபைன் மற்றும் செறிவு அதிகம் உள்ளதா என்பதை அறிய பழத்தின்  ஒரு சிறிய துண்டை சுத்தமான தண்ணீரில் போட்டு பாருங்கள் பழம் ஆபத்தானதாக இருந்தால் தண்ணீரானது பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும், அப்படி மாறினால் அந்த தர்பூசணி பழத்தை சாப்பிடாமல் தவிர்த்து விடுவது நல்லது

Related Articles :

ஏசி வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் -Things to consider before buying

page 2
pagr no 6
0.00 avg. rating (0% score) - 0 votes