நிஜம் நிழல் ஆனது part 4 – True Love Story


நிஜம் நிழல் ஆனது காதல் காவியம் 

By Mullai :

திவ்யா :   யார் போன் பண்ணா..?  என்ன ஏதுன்னு  ஒன்னும் புரியல… மாமா கிட்ட சொல்லணும்னு நினைச்சாலும்  தைரியம் இல்ல…

ராஜி :   இந்தப்  பக்கம் நம்ம ஹீரோ… தெரியாம போன் பண்ணினோம்…ஆன அவங்க மறுபடியும் Message  பண்ணாங்க ….சரி யார் என்று  போன் பண்ணா  Wrong No -னு, சொல்றாங்க ….  சரி இருந்தாலும் .. Sorry – னு,  ஒரு மெசேஜ்  கடைசியாக  அனுப்பலாம்  என்று அனுப்பினான். ஆனால் அவனுக்குத்  தெரியாது, கடைசி  அல்ல  இது  ஆரம்பம் என்று….கடைசி என்பது முடிவு அல்ல… அடுத்தக்  கதைக்கு ஆரம்பம் என்று….

திவ்யா :   இரவு வேலை எல்லாம் முடித்து விட்டு, வந்து மொபைலை  பார்த்தால்… ராஜியிடம் இருந்து  Sorry  என்ற மெசேஜ்.. சிறிது நேரம் கழித்து … திவ்யா மெசேஜ்  பண்ணால் …. ஹலோ Sir… நீங்க யார் என்று எனக்குத்  தெரியாது…. நீங்க தான் முதலில் போன் பண்ணிருந்திங்க ….நான் பண்ணல Sir -னு,  பதில் அனுப்பினால்.

ராஜி  :   சரி விடுங்க… பரவாயில்லை …உங்க பேயர் என்ன? எங்க இருக்கிறிங்க  என்று கேட்டான்.
திவ்யா :   திவ்யா… என்றாள்… ஊர் திருச்சி என்றாள்….அப்புறம்  நீங்கள் என்றாள்…. இதில் ஆரம்பிக்கும் இந்த உறவு எங்கு முடியும் என்பதை காலம் தான் நிர்ணயிக்க வேண்டும்.
ராஜி  :   ராஜேஷ் என்றான்… தன்னை பற்றிய விவரம் கூறினான்….
திவ்யா  :   இரவு வணக்கம் சொல்லி விடை பெற்றால்….
ராஜி   :   காலை 5 மணிக்கே Walking  போவது ராஜிக்கு வழக்கம்…. எழுந்து காலை வணக்கம்…என்றான்…. காலை 8.30க்கு போன் பண்ணினான்…  எடுத்தால் நம் கதையின் நாயகி…. இரண்டாம் முறை …. திவ்யாவின் குரலை கேட்டான்….

திவ்யா  :  சொல்லுங்க… என்னை மன்னிக்கவும் என்றாள்…

ராஜி  :  அத விடுங்க… காலேஜ் போகவில்லைய… என்கிறான்….

திவ்யா  :  காலேஜ்ல தான் இருக்கேன்…என்கிறாள் நான் மாலை பேசுகிறேன் என்றாள்….

ராஜி  :  சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்…..
திவ்யா  :  மாலை வீட்டுக்கு வந்து… வேலை எல்லாம் முடித்து விட்டு…  மொட்டை மாடிக்குச்  சென்றால்… சில்லு சிலுக்கும் தென்னை மரக்  காற்று… வீசியது… போன் எடுத்து… Mes  அனுப்பினால்…. சொல்லுங்கள்… என்று….
ராஜி  :  அவன் ரூமில் கணினியை தழுவிக்  கொண்டு இருந்தான்….Mes -யை பார்த்த  உடன்…. எடுத்து பார்த்தான்… உடனே… போன் பண்ணினான்….
திவ்யா  :  பேசினால்.. இனிமையான குரல் என்றால்…  சுசீலாவை சொல்லுவாங்க… அப்படி ஒரு குரல் தான் நம் கதையின் நாயகி குரலும்….
இரும்பு காந்தத்தை  ஈர்ப்பது போல்…. ஈர்க்கத்தான் செய்தது… நம்  ராஜியையும்…. 10 நிமிட உரையாடல் தான்…. இனி நாம் நண்பர்கள் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர் 👍…

நிஜம் நிழல் ஆனது  – Part 1

நாமா அப்பா அம்மா கிட்ட கூட சொல்ல முடியாத… பல விசயங்களை… நம்பி சொல்லும் ஒரு இடம் நண்பர்,தோழி,…. 3 வார  இடைவெளிக்கு பின் பார்த்தால் இணை பிரியாத நண்பர்கள் ஆகி விட்டனர்… இருவரும்.
திவ்யா  :  வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தாள்… அவள் அண்ணி வந்தாள்… வாங்க என்று சொன்னாள்….
யமுனா  : ம்ம்…. எப்படி இருக்க என்றாள்…. வா நம்ம  வீட்டுக்கு போகலாம்… என்று கூப்பிட்டால்…
திவ்யா  :  இல்ல… அண்ணி மாமா வரட்டும் கேட்டுட்டு வரேன்… நீங்க போங்க என்றாள்… அவள் எவ்வளவு சொல்லியும் யமுனா விட வில்லை…. சரி என்று பாட்டியிடம்…. சொல்லி விட்டு கிளம்பினாள்…. திவ்யா போகும் அவசரத்தில்… போனை மறந்து விட்டால்  திவ்யா…..
திவ்யா  :  காலை 10 மணிக்கு அண்ணா வீட்டுக்கு போனவள்…. அவள் அண்ணி நன்றாக கவனித்து கொண்டாள்…. மீன் குழம்பு, வறுவல், சிக்கன் Fry …. என்று வகை வகையாக சமைத்து….. திவ்யாவுக்கு பரிமாறினாள் ….. அவள் அண்ணன் திவாகர்… இவளோ நாள் கண்டுகொள்ள வில்லை…. இன்றைக்கு சாப்பிடு திவ்யா…. நம் வீடு தான் சாப்பிடு என்றான்…. யமுனாவிடம் அவளுக்கு இன்னும் வை… என்று செல்லமாக மிரட்டினான்…இதை எல்லாம் பார்த்த திவ்யாக்கு ஒன்னும் புரியவில்லை…. அவளுக்குச்  சுடிதாரும் எடுத்து கொடுத்தான் அவள் அண்ணன்…. மாமா என்ன சொல்லுவரோ என்று பயந்து வேணாம் என்று கூறினாள்… திவாகர், யமுனாவும் எவளோ சொல்லியும் வாங்க மறுத்து விட்டாள்…. திவ்யா மனதுக்குள் புழல் அடித்து கொண்டு இருந்தது. அவளால் அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க
முடியவில்லை,  காரணம்….. மொபைலை  வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டால்… ஒரு வேளை ராஜி Mes அல்லது போன் பண்ணி மாமாவோ, பாட்டியோ,  எடுத்து விட்டால் என்ன ஆகும்? மாமாவிடம் சொல்லாமல் வேறு வந்து விட்டோம்…. என பல யோசனை திவ்யாவுக்கு.
மாலை 5 மணி ஆன உடன் சினிமாக்கு கிளம்பினார்கள்….அண்ணாவும் அண்ணியும்….இவளையும் அழைத்தார்கள்…..நான் வரவில்லை…என்று சொல்ல இதயம் துடித்தது…. ஆனால் யோசித்தால்… துணியும் வேணாம், என்று சொல்லி விட்டோம், இப்போது போக வில்லை என்றால், அண்ணி.. அவளுக்கு நம்மளை  பிடிக்கவில்லை என்று நினைத்துக்  கொள்வார்கள்  என்று எண்ணி…. அவர்களுடன் போக முற்பட்டால்…. நேரம் ஆக ஆக திவ்யாவின் பயம் அதிகரித்து கொண்டே இருந்தது…. வீட்டுக்கு போகலாம்  என்று  சொல்லும் தைரியமும் அவளுக்கு இல்லை….சினிமாவிலும் நாட்டம் இல்லை, அவளுக்கு… என்ன நடக்குமோ…. ஏது  நடக்குமோ… என்று மனதுக்குள்… புலம்பி தவித்தாள்…. ஒருவழியா  படம் முடிந்தது…. திவாகர்… திவ்யாவிடம்  நேரம் ஆகிவிட்டது… வீட்ல தங்கிட்டு நாளைக்கு போலாம் என்றான்.

நிஜம் நிழல் ஆனது – Part 2 

திவ்யா  :  இல்ல அண்ணா, நான் வீட்டுக்கு போறேன் என்ன கூட்டிட்டுப்  போயி விடு என்றாள்.

அண்ணன்…. சரி வா போலாம் என்று இருவரும்…. அவள் அண்ணியை வீட்டில் விட்டுட்டு நடக்க ஆரம்பித்தார்கள்…….

                                                                                                                                                                        நிழல் தொடரும் ……….


மேலும் படிக்க :

நிஜம் நிழல் ஆனது  – Part 1

0.00 avg. rating (0% score) - 0 votes