நிஜம் நிழல் ஆனது part 6 – Nijam Nizhal Aanathu part 6


இனிமையான காதல் பயணத்தில் அடுத்த ஒரு அத்தியாயம் By Mullai :

திவ்யா : பவி சென்றவுடன், வேலை எல்லாம் முடித்து விட்டு சாப்பிட்டு படுத்தாள்.. தூக்கம் வர வில்லை, கடிதத்தை பிரித்து படித்தாள்.ராஜி : எப்படி இருக்கிறீங்க திவ்யா ? என் கடிதத்தைப் பார்த்து நீங்க என்ன நினைப்பிங்கனு தெரியல இருந்தாலும், ஒரு ஆசை உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று எழுதிட்டேன், தப்ப நினைக்க வேண்டாம் திவ்யா. இதனால உங்களுக்குப் பிரச்சனை வருமா என்ன ஏதுன்னு தெரியல திவ்யா.. நான் இன்னும் 1 Month – ல ஊருக்குப் போயிடுவேன் முன்ன மாதிரிப் பேச முடியாது. நீங்களும் போன்ல பேச யோசிக்கிறீங்க.. இனியாவது தயங்காம பேசுங்க, என்ன உங்க Friend – டா நினைக்கிறேன்னு தெரியும், இருந்தாலும் குடும்பத்துல ஒருத்தராவும் நினைங்க..


இதில் நான் சொல்லாமல் விட்டது, ராஜி தன் குடும்பத்தில் உள்ள அக்கா, அண்ணா, அம்மா, மற்றும் அப்பா பற்றி எல்லாம் எழுதி இருந்தான்…. நமக்கு அது எல்லாம் தெரிந்தது என்பதால் விட்டுவிட்டேன். என்ன கஷ்டம்னாலும் நான் இருக்கேன் மறக்காதிங்க திவ்யா சரியா. உங்க நிலைமைப் பற்றி நீங்க சொன்ன உடனே அதை கேட்டதும் ரொம்ப வருத்தபட்டேன் திவ்யா.


நான் நல்லா படிக்க, தினம் ஒரு முறையாவது போன் பண்ணுங்க திவ்யா….இப்படிக்கு பிரியமுடன் ராஜி.


திவ்யா : படித்து விட்டு சிரிப்புடன், தன் துணிகளுக்கு அடியில் மறைத்து வைத்தால், மொபைலை சுவிட்ச் ON செய்து ராஜிக்கு குறுந்செய்தி அனுப்பினால் நடந்ததை எல்லாம் சொன்னால்.


ராஜி : மன்னிச்சிடுங்க திவ்யா.. என்னால் தான் என்றான்..


திவ்யா : இல்லை பரவாயில்லை என்றாள்…. இனி எனக்கு கடிதம் இந்த முகவிரியில் போடவும் என்று பவி வீட்டு விலாசம் அனுப்பினால்….


ராஜி : சரி என்றான்…


இரவு முடிந்து காலை விடிந்தது….வழக்கம் போல்… வேலைகள் தொடர்ந்து கொண்டு இருந்தது…சில நாட்கள் சென்றது…. திவ்யாவுக்கு, ராஜியின் மேல் காதல் வந்தது….திவ்யாவுக்கு ராஜி மேல் காதல் வந்தாலும்…. அதை ராஜியிடம் சொல்லும் அளவுக்கு தைரியம் திவ்யாவிக்கு இல்லை….


ராமாயணத்துல எப்படி சுந்தர காண்டம் ஒரு முறை தான் வருமோ…. அதே போல்…


வாழ்க்கையில்.. வசந்தக் காலம் என்பதும் உண்டு… அது நமக்கு மட்டும் அல்ல.. மரம், மண், பறவை, அனைத்து ஜீவ ராசிக்கும் உண்டு… மரம்…தன் மீது உள்ள இலைகள் எல்லாம் உதிர்த்து… மறுபடியும்… துளிர்க்கும் பூவும், காயும், கனியும், செழித்து இருந்தால் அதற்கு வசந்தக் காலம், மண் மீது மழைத் துளி விழுந்தால் வசந்த காலம், பறவைக்கு உணவு, இருக்க இருப்பிடம் கிடைத்தால் வசந்த காலம், மனித இனத்துக்கு மனதில் காதல் பிறந்தால் வசந்த காலம்.


அந்தக் காலத்தைத் தாண்டி தான் வாழ்க்கை பயணம்… செல்லும்…. தன் வாழ்வில் வசந்த காலம் என்பதை, கடந்து வரவில்லை என்று ஒருவன் சொன்னால் அவன் மூளை வளர்ச்சி இல்லாதவன் ஆக தான் இருந்து இருக்க முடியும்…


திவ்யாவுக்கு காதல் வந்த நேரம்… தினமும்… போன்…. குறுந்செய்தி… அனுப்பிய ராஜிடமிருந்து…. எந்த போனும்…. மேஜ்யும்…. வரவில்லை…. 4 நாட்கள்… கடந்தது…. எங்கு அவன் போன் பண்ணினாள்…. பார்க்காமல் போயி விடுமோ என்று
போனை கையில் சுமந்தாள்…. கங்காரு…. தன் குட்டியை ஈன்ற பின்னும் மடியில் வைத்து கொண்டு திரிவதை போல்…. இப்போது தான் நினைவுக்கு வருகிறது… நானும் இப்படி ஒரு முட்டாள்… கடந்து வந்தவாள் தான்….
இது வரை தனக்காக மட்டும் கோவில் வாசலில் அடி எடுத்து வைத்தவள்….இன்று அவனுக்காக முதல் முதலாக… கோவில் படி…ஏறினாள்.. முகம் பார்த்தது இல்லை, முகவரி தெரியாது… அம்மா அப்பா… இல்ல… அண்ணனும் ஆதரவு இல்ல…. அவன் என்னிடம் பேசியதால்…. கொஞ்சம் சந்தோசமா இருந்தேன்…. அதுவும் உனக்கு பிடிக்க வில்லையா…. அவர் எப்படியாவது எனக்கு போன் பண்ணனும் என்று வேண்டி கொண்டு வீட்டுக்கு வந்தாள்…..


அருண், திவ்யாவை கவனித்தான்.. அவள் முகத்தில் சிரிப்பு இல்லை…. கலகலப்பு இல்லை…. கடமைக்கு வேலை செய்தால், மனம் என்னமோ… ராஜியிடம் இருந்தது, 4நாள்…. 10 நாள் ஆனது… அவளின் தவிப்பு குறையல…. வேறு ஒரு எண்ணிலிருந்து போன் அடித்தது, எடுத்தால்…. ஹலோ திவ்யாவ என்றார்.. ஆமாம் நீங்கள் என்றாள்.. நான் ராஜியின் நண்பன்….திலீப், உடனே திவ்யாக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை….ராஜி ஏன் எனக்கு போன் பண்ணல என்னாச்சு… அவருக்கு என்று கேட்டாள், பேசவே பயந்தவள்.. இன்று யார் என்ன என்றே தெரியாத ஒருவரிடம்…. ஒரு வேகத்தில், ஆவேசத்தில்… கேட்டாள்.


திலீப் : தங்கச்சி…. இருங்க…. ஏன்?ஏன்? என்றான்.. அவளால் தன்னைக் கட்டுபடுத்த முடியவில்லை.. அழுதாள்.. திலிப்பால் ஏதுவும் பேச முடியாமல்…. போனை அணைத்து விட்டான்.அப்படி என்னதான் ஆனது. ராஜிக்கு பார்ப்போம் வாங்க…. போனில் பேசுவதால் அவன் காதில் சிறிய கட்டி உருவானது, அது இருக்க, இருக்க… பெரியதாகவே வீட்டுக்கும், சொல்லாமல்.. மருத்துவமனையில் சேர்ந்து… சிகிச்சை பெற்று வந்தான்…. அவன் அம்மா, அப்பா விசயம் தெரிந்து அவனை… ஊருக்கு அழைத்து போயி விட்டார்கள்….இதனை தன் உடன் இருந்த நண்பனிடம் சொல்லி…. திவ்யாவிடம்…. சொல்ல சொன்னான்.


திலீப் : ராஜிக்கு போன் பண்ணி நடந்த எல்லாவற்றையும் சொன்னான்….. சரி டா மச்சி…. Thanks …. நான் பார்த்துக்கறேன்…என்று சொல்லி முடித்தான்

ராஜி திவ்யாகு போன் பண்ணி தன் நிலையை சொன்னான இல்லையா…. திவ்யா என்ன சொல்லி இருப்பாள் என்பதை வரும் வாரம் பார்ப்போம்…..

மேலும் படிக்க :

நிஜம் நிழல் ஆனது part 5 – Nijam Nizhal Aanathu -True Love Story

நிஜம் நிழல் ஆனது part 4 – True Love Story


0.00 avg. rating (0% score) - 0 votes