உங்களுக்கு தெரியாதா 5 தகவல்கள் மற்றும் அதன் விளக்கம்


TRP – Cell Tower – சாக்கடை மூடி – பச்சை மரம் எரிதல் – ராக்கெட்டுகள் ஏன்  எப்போதும் வெள்ளை நிற  வண்ணத்தில் இருக்கிறது – இது போன்ற கேள்விகளுக்கு – விடைகளையும் விளக்கங்களையும் இங்கே பார்க்கலாம்.

பார்த்த கேட்ட பல தினசரி விஷயங்கள்  தொடர்பாக பலருக்கும் எழக்கூடிய 5

பொதுவான சந்தேகங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பற்றியும் இப்போது பாப்போம்.

செல்போன் டவர்களால்  கேன்சர் வருமா?

இன்றைய மொபைல் போன் யுகத்தில் மரங்களை காட்டிலும் செல்போன் டவர்களே அதிக எண்ணிக்கையில் நடப்பட்டு வருகின்றன, இத்தகைய செல்போன்  டவர்கள்  வெளிப்படும்  கதிர்வீச்சால்   அதன் அருகாமையில் வசிப்போர்க்கு கேன்சர்  நோய்  ஏற்படக்கூடும்  என்ற  பயமும்  சந்தேகமும்  பல தசாப்தங்களாக மக்கள்  மத்தியில்  நிலவி  வருகின்றது, இது தேவையற்ற  ஒரு பயமாகும்.  மின்காந்த  இயற்பியலில் போதுமான புரிதல் இல்லாமையே இப்பயத்திற்கு  காரணம்  ஆகும்.
மின்காந்த கதிர்வீச்சு 7 வகைகள் உள்ளன அவை IONIZING மற்றும் Non IONIZING
ரேடியேஷன் என ஆற்றலின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
IONIZING  ரேடியேஷன்  என்பது  அதிக  அதிர்வென்களைக்  கொண்ட  மின்காந்த கதிர்வீச்சாகும், இவ்வகையான கதிர்வீச்சில்  புற ஊதாக் கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள் மற்றும்  காமா கதிர்கள்  ஆகியவை அடங்கும் இவை நீண்ட காலத்துக்கு உடலில் பட்டால்  அவற்றில் வரும்  ஆற்றலை திசுக்கள் கிரகித்துக்கொண்டு மரபணு  கட்டமைப்பு மாறக்கூடும் இதனால், உடலில் குறைபாடான வளர்ச்சி கேன்சர்  நோய் போன்ற தீங்குகள் விளையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஆனால் Non IONIZING  ரேடியேஷன் என்பது  குறைந்த அதிர்வெண்களைக் கொண்ட கதிர்வீச்சாகும்,  இவ்வகை  கதிர்வீச்சில் ரேடியோ அலைகள், நுண் அலைகள், இன்ஃப்ராரெட் அலைகள் போன்றவை அடங்கும். இவை மிகக் குறைந்த அதிர்வெண்களைக் கொண்ட கதிர்வீச்சு  என்பது மனித உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அளவிற்கு திறமை கொண்டிருப்பதில்லை செல்போன் டவர்கள் வெளிப்படுத்தும் குறைந்தஅதிர்வெண் கொண்ட ரேடியோ அலைகளால்  கேன்சர் நோய் உண்டானதாக  இதுவரை எவ்வித மருத்துவ சான்றுகளுமில்லை, செல்போன் டவர்கள் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாதாள சாக்கடையின் மூடிகள் ஏன் வட்ட வடிவில் இருக்கின்றது ?

பாதாள சாக்கடையின் மூடிகள் பெரும்பாலும் வட்ட வடிவமாக இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம் இது ஏன் என்பதற்கான பின்னணியாக நான்கு முக்கிய நோக்கங்கள் இருக்கின்றன, முதலாவதாக வட்டவடிவமான பாதாள

சாக்கடையின் முடியானது அதன் வட்ட வடிவ திறப்புக்குள் விழுந்து விடுவது
இல்லை ஆனால் சதுரம் மற்றும் செவ்வக முடிகள்  குறுக்காக  கையாளப்படும் போது திறப்புகள்  எளிதாக விழுந்துவிடும்,
இரண்டாவதாக  இரும்பாலான கனமான வட்டவடிவான முடியானது உருட்டி செல்லத்தக்கதாக இருப்பதால் எளிதாக கையாள முடியும் மூன்றாவதாக கனரக வாகனங்கள்  கடக்கும் போது கிடைக்கும் அழுத்தமானது வட்ட வடிவ மூடியின் அனைத்து ஓரங்களிலும் சமச்சீராக பகிரப்படுவது பாதிப்புகள் ஏதும்
ஏற்படாமல் வலுவானதாக  இருக்கின்றது. இறுதியாக வட்ட வடிவ மூடி அல்லது துல்லியமாக சீரமைக்கவும் வேண்டியதில்லை.

மின்னல் தாக்கி பச்சைமரம் எரிய காரணம்?

மழைக்காலங்களில்  மின்னல் தாக்கி  பச்சைமரம்  வெடித்ததாகவும் தீப்பிடித்து எரிந்ததாகவும் பல செய்திகளை நாம் ஊடகங்களில் காண்கின்றோம். சிலர் இதனை நேரடியாக கூட பார்த்திருக்கலாம், மின்னல் எப்படி ஒரு பச்சை மரத்தை தீப்பற்றி எரிய  செய்கிறது அல்லது பாதியாக வெட்டி ஏரிந்துவிடுகிறது என்பன போன்ற சந்தேகங்கள் பலருக்கும் தோன்றலாம்.
இந்த  சந்தேகத்திற்கான  விளக்கம் முறையே மனிதர்கள் மற்றும் மரங்களுடன் மின்னல் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதில் உள்ளது எலக்ட்ரான்களின் சக்தி, வாய்ந்த பாய்மமே மின்னல் தாக்குதல் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்  நூற்றுக்கணக்கான கிலோவாட் மின் சக்தியை தாங்கிவரும் மின்னல்  தாக்கினால் மனிதர்கள் உட்பட எந்த ஒரு உயிரினமும் பேராபத்தை சந்திக்க  நேரிடும் 70 சதவிகித நீராலான மனித உடல் ஓர் சிறந்த மின் கடத்தி  ஆகும்.
மனித  உடல் அதன் வாயிலாக ஒரு பெரிய  மின்னோட்டத்தை அதிக எதிர்ப்பு இல்லாமல் கடந்து செல்ல  அனுமதிப்பதால் மின்னோட்டத்தின் போது அதிக வெப்பம்  உருவாக்கப்படுவதில்லை, எனவே மின்னல் மனிதனை  தாக்கும்போது  மின்னோட்டமானது  ‘மனித உடல் வழியாக கடந்து தரையை அடைந்து வருகின்றது என்றாலும்  மின்னோட்டத்தின் போது மனித உடல் காட்டும் சிறிய அளவிலான எதிர்ப்பு  காரணமாக தீக்காயங்கள் நரம்புகள் சேதம் அதிர்ச்சி இதய செயலிழப்பு  போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன, சில  சமயங்களில் மரணமும்  சம்பவிக்கின்றது. ஆனால் மனிதர்களை போல் மரங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி அல்ல எனவே மரங்கள் மின்னலின் அதிக  மின்சாரத்தை தங்கள் உடல் வழியாக கடந்து செல்ல அனுமதிப்பதில்லை இதன் விளைவாக மின்னோட்டத்தின் போது உருவாகும் உயர் எதிர்ப்பு காரணமாக அங்கு கட்டுக்கடங்காத வெப்பம் உருவாவதால் மரம் தீப்பற்றி,
எரியத் துவங்குகிறது.

ராக்கெட்டுகள் ஏன்  எப்போதும் வெள்ளை நிற  வண்ணத்தில் இருக்கிறது?

ராக்கெட்டுகள் ஏன்  எப்போதும் வெள்ளை நிறம் கொண்டவையாகவே இருக்கின்றன  என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு வெப்பத்தை குறைக்கும் பொருட்டு  ராக்கெட்டுகள் மீது வெள்ளை வர்ணம் பூசப்படுகிறது, ராக்கெட்டின் உட்புறம் ஆனது ஓர் ஏர் கண்டிஷனர் அறையை ஒத்ததாக இருக்கும் ஆனால் ராக்கெட் ஏவுதள பகுதியில் வெப்பம் பொதுவாக 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருக்கும்  இந்த வெப்பமானது ராக்கெட்டின், உட்புறம் கிரகிக்கப்பட்டு உள்ளிருக்கும்  நுட்பமான கருவிகள் சேதம் அடைய வாய்ப்புகள் உள்ளன ஆனால் வெள்ளை  நிறம் வெப்பத்தை கிரகித்துக் கொள்ளாமல்  பிரதிபலித்து விடுவதால்  ராக்கெட்டின் உட்புற வெப்ப நிலையை சமச்சீராக பராமரிக்கப்படுகின்றது.மேலும் செயற்கைக்கோளை நிலை நிறுத்திய பின்னர் வெடித்துச் சிதறப்  போகும் ராக்கெட்டுக்கு அதிக செலவு பிடிக்கும் பல வண்ண அலங்காரம்  தேவையில்லை என்பது அறியேன் வெள்ளை வர்ணம் பூசப்படுகிறது.

TRP  ரேட்டிங் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

TRP  ரேட்டிங்கிற்காக தனியார்  தொலைக்காட்சிகள் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல ஒற்றுமையாக இருக்கும் மாமியார்  மருமகளை பிடாரி களாக மாற்றி  சண்டையிட சொல்லித்தரும் சீரியல்கள், கோபத்தை வரவழைக்கும் காமெடி நிகழ்ச்சிகள் ஊர் வம்பை பேசி தீர்க்க இருக்கும்  பஞ்சாயத்து நிகழ்ச்சிகள்,  போன்றவற்றை சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பில் தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக் கொள்ள  முயன்று வருகின்றனர் டிஆர்பி அதிகமானால் விளம்பரங்கள் அதிகமாக  கிடைக்கும் அதிக விளம்பரங்களால்  சேனல்களின் வருவாயை  அதிகரிக்கும்.
சரி டிஆர்பி என்றால்  என்ன அது எப்படி கணக்கிடப்படுகிறது என்பது பலரின் சந்தேகமாக உள்ளது  சுருக்கமாக டிஆர்பி எனப்படும். டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட் என்பது சேனல்கள் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் எது  பெரும்பான்மையாக பார்க்கப்படுகிறது.  என்பதனை கண்டறிய உதவும் ஓர் புள்ளிவிபரமாகும். இதற்காக peoples  மீட்டர் என்று அழைக்கப்படும். ஊர் விசேஷ கருவியானது சில ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நேயர்கள்  Tv  பெட்டிகளுடன் இணைக்கப்பட்டு பார்வையிடப்படும் நிகழ்ச்சிகள் பற்றிய புள்ளிவிவரங்கள், கணக்கிடப்படுகின்றது இதுவே ஒட்டுமொத்த தொலைக்காட்சி  நேயர்களின் புள்ளி விவரமாகும், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்  இந்த பகுதியானது.
இந்த peoples  மீட்டர் கருவியானது  ஒரு குறிப்பிட்ட  நாளில் தொலைக்காட்சி நேயர்  பார்வையிடும் நிகழ்ச்சியையும்  நேரத்தையும் பதிவு செய்துகொள்ளும்.
0.00 avg. rating (0% score) - 0 votes