நீதிமன்றங்களில் படம்பிடிக்கவோ போட்டோ எடுக்கவோ அனுமதி இல்லை ஏன் தெரியுமா?

- Unknownfacts

நீதிமன்றங்கள் சண்டை சச்சரவுகளுக்கு தீர்வு காணவும் உரிமையியல் குற்றவியல் நிர்வாக வழக்குகளில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நீதி வழங்கும்அதிகாரம் கொண்ட ஓர் அரசு சார்ந்த அமைப்பாகும். அனைத்து குடிமக்களும் தங்கள் உரிமைகளுக்காக நீதிமன்றத்தை அணுகி தங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும். குற்றவாளிகளும் கூட நீதிமன்றத்தில் தங்களது எதிர் வாதத்தை எடுத்துரைக்க உரிமை கொண்டவர்கள் இவற்றையெல்லாம் நாம் ஏற்கனவே அறிந்தவைதான் என்றாலும் கூட நீதிமன்றம் தொடர்பான சில நடைமுறைகளைப் பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை அவ்வாறான 5 இப்போது பார்ப்போம்.

நீதிமன்றத்தில்   படம் பிடிக்க ஊடகங்களுக்கு அனுமதி  இல்லை  ஏன்?இதுவரை நாம் நீதிமன்ற நடைமுறைகள் பற்றி எந்த ஒரு ஊடகத்திலும் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளியாக அல்லது புகைப்படமாகவோ பார்த்திருக்கமாட்டோம் நீதிமன்ற வெளியிடப்பட்டு இருந்ததை நடவடிக்கைகளை படம் பிடிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட என்ன காரணம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் கூட வெளிப்படையாக இருக்கும்போது, நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டும் ஏன் மறைமுகமாகவே இருக்கின்றன, என்பன போன்ற வினாக்களுக்கு பின்னணியாக சில முக்கிய நோக்கங்கள் இருக்கின்றன வழக்கு விசாரணைகள் பொது ஊடகங்களில் ஒளி பரப்பும் பொருட்டு ஒளிப்பதிவு செய்யப்படுமானால், அது நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களின் கவனத்தை திசை திருப்புவதாக அமையும், அவர்களை முன்னிறுத்தும் ஒரு விளம்பரம் ஆக மாறிவிடும் அடுத்ததாக ஒரு வழக்கு விசாரணையானது, பல கட்டங்களாக நடத்தப்படுகிறது, அதில் ஒரு குறிப்பிட்ட விசாரணையின் ஒளிப்பதிவு மட்டும் வெளியாகும், ஆனால் அது நீதிபதி ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு மாயை உருவாக்கக்கூடும். மேலும் வழக்கு விசாரணையை வீடியோவில் பார்க்கும் சாதாரண மக்களுக்கு உண்மைகளை அறியும் பொருட்டு வழக்கறிஞர் கேட்கும் கேள்விகளும்,  குறுக்கீடுகளும், கோபத்தை ஏற்படுத்தலாம், இதனால் வழக்கறிஞரின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும் சாட்சிகளும், பிறரால் தாக்கக் கூடும் என்ற பயம் காரணமாக சாட்சி சொல்ல தயக்கம் காட்டுவார்கள் மேலும் காணொளிப்பதிவு குற்றம் சாட்டப்பட்டவரின் அந்தரங்கம் வெளிப்படுவதோடு தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தி வழக்கை தாமதப்படுத்தும் காரணமாகிவிடும் இந்தக் காரணங்களினாலேயே நீதிமன்ற நடவடிக்கைகளை படம் பிடிக்க அனுமதி மறுக்கப்படுகின்றது ஆனால் வழக்கு விசாரணையின்போது பார்வைரக கலந்து கொள் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

நீதிமன்றத்தில்  ஏன்   நீதிபதி ஆர்டர் ஆர்டர்  என  சொல்கிறார் தெரியுமா?தமிழ் சினிமாக்களில் வரும் நீதிமன்றக் காட்சிகளில் இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாகனங்களால் மோதிக்கொள்ள பார்வையாளர்கள் மத்தியில் இருந்து கிளம்பும் சலசலப்பை அடக்குவதற்கு நீதிபதி ஆர்டர் ஆர்டர் என கூறுவதை நாம் பார்த்திருக்கின்றோம், நீதிபதியும் யாரிடம் எதனை ஆர்டர் செய்ய சொல்கிறார்,  என்று கூட நீங்கள் யோசித்து இருக்கலாம், ஆனால் நிஜ நீதிமன்ற நீதிபதிகள் இப்படி எல்லாம் சொல்வதில்லை, நீதிமன்றத்தில் எழும் சலசலப்பை அடக்குவதற்கு சைலன்ஸ் ப்ளீஸ் என்று மட்டுமே அவர்கள், கூறுவார்கள் சினிமாக்காரர்களின் சட்டம் படித்த நீதிபதிகள் மட்டுமே ஆர்டர் புக்கிங் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்கள், சினிமாவில் காட்டப்படும் நீதிமன்றம் நடவடிக்கைகளும் நிஜ  நீதிமன்றம் நடவடிக்கைகளும் முற்றிலும் வேறுபட்டவை சில முக்கிய குற்றவாளிகள் குற்றம் தகுந்த சாட்சியங்களாலும், தடயங்களாலும் நிரூபிக்கப்பட்ட பின் அவர்தான், குற்றவாளி என தீர்ப்பு அளிக்கும்.

தண்டனையை   அன்றே  அறிவிக்காமல்   வேறு  ஒரு   நாள்  அறிவிக்க  காரணம்?  

நீதிபதி குற்றத்திற்கான  தண்டனையை அன்றே  அறிவிக்காமல் வேறு ஒரு நாளில் தண்டனை  விவரத்தை அறிவிக்கை என்ன காரணம், என்பது பலரின் சந்தேகமாக  இருக்கலாம், இதற்கு பின்னணியாக சில முக்கிய நோக்கங்கள் உள்ளன அதாவது  நீதி  மன்றத்தால் ஒரு நபர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு விட்டால் அவருக்கு நிச்சயமாக தண்டனை உண்டு இந்த தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பாக நீண்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும்,
போலீஸ் படைகளை ஒழுங்குபடுத்த வேண்டும், பாதுகாப்பு நடைமுறைகளை
மேற்கொள்ள வேண்டும் தண்டனைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் தண்டனை தொடர்பான  எழுத்துப்பூர்வமான ஆவணங்களை அரசாங்கத்திற்கு அளிக்க வேண்டும்  இவை யாவற்றையும் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் தீர்ப்பு ஒரு  நாளிலும் தண்டனை விபரம் வேறு ஒரு  நாளிலும் அறிவிக்கப்படுகின்றது.

வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு உடை அணிகின்றனர்?

வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு உடை அணிகின்றனர் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்கள் துணை நீதிமன்றங்கள் தீர்ப்பாயங்கள்  வழக்கறிஞர்கள் தெளிவான மற்றும் கண்ணியமான ஆடை அணிந்திருக்க வேண்டும், என வழக்கறிஞர் சட்டம் 1961 கட்டாயமாக்குகிறது ஒரு வழக்கறிஞர் ஆடை  ஆனது பகட்டாக இருக்க கூடாது அதே  நேரத்தில் வழக்கறிஞர்கள் இடையேயான ஒழுக்கத்தை  வெளிப்படுத்துவதாகவும் நீதிக்காக போராடுவதற்கான நம்பிக்கையை அளிக்கும் ஆடையாகவும் இருக்க,  வேண்டும் மேலும் பிற துறையினர்  ஆடை குறியீட்டிலுருந்து  வேறுபட்டதாகவும் இருக்க வேண்டும்  என்பதாலேயே வழக்கறிஞர்கள் கருப்புக்கோட்டை அழைக்கின்றனர், மேலும் கருப்பு நிறமானது  அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தை  குறிக்கின்றது திறமை, அறிவு, நம்பகத்தன்மை, பாதுகாப்பு  உணர்வு  முதலியவற்றை உணர்த்தக்கூடிய நிறம்

என்றும், கீழ்ப்படிதலை குறிக்கும்  நிறமாகவும் கருதப்படுகின்றது,  எனவேதான் வழக்கறிஞர்கள் நீதிக்கு  கீழ்ப்படிந்தவர்கள் என்பதனைக் குறிக்க
கருப்பு கோட்டை நன்மையையும்,  தீமையையும் அடையாளப்படுத்த வெண்ணிற கழுத்துப்பட்டைகளையும்  அணிகின்றன.ஒருவர்க்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு எழுதியதும்   பேனாவின் முனை உடைத்துவிடுவது  ஏன்?பிரிட்டிஷ்  ராஜ்ய காலத்தில் இருந்தே ஒருவர்க்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு எழுதியதும்   பேனாவின் முனை உடைத்துவிடும் ஒரு வழக்கத்தை வைத்துள்ளனர், இந்த  பழக்கமானது இன்னமும் தொடர்வதற்கு, சில முக்கியக் காரணங்கள் உள்ளன  மரண தண்டனை தீர்ப்பு எழுதிய ஒரு நபரின் வாழ்வை முடித்து வைக்கும்  அந்த பேனா வேறு எந்த நோக்கத்திற்காகவும், பயன்படக்கூடாது.  மற்றொருவரின் பாடுவோம் இந்த பேனாவால் முடிவுக்கு வரக் கூடாது,  என்பதாலேயே நீதிபதி அதன் முனையை வைத்து விடுகிறார், மேலும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதி  கையெழுத்திட்டு பின்பு நீதிபதிகள் தான் அளித்த தண்டனையை மறுபரிசீலனை செய்யவோ,  தண்டனையில் திருத்தம் செய்யவும்,  அதிகாரம் இல்லை என்பதனை அடையாளப் படுத்தும் விதமாகவும், பேனா முனை உடைக்கப்பட்டு,  விடுகின்றது.Go To Next Page10


Unknown Facts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts