நிஜம் நிழல் ஆனது – part 7 – True love – Nijam Nizhal Anathu


உள்ளத்தின்  ஆழத்தில்  புதைந்து   கிடக்கும்  ஒரு  அதிசயம்  காதல்…

 

By Mullai :

 

காலேஜ் – ல், அவங்க டிபார்ட்மென்ட் பசங்க எல்லாரும் Tour போனாங்க…ஆனால் திவ்யாவிக்கு விருப்பம் இல்லை அதனால் போகவில்லை, பவியும்’ , திவ்யாவைப் பார்த்து போக மறுத்து விட்டாள்…


பவி : என்னடி உன் ராஜி Call பண்ணாரா.. என்று கேட்டாள்.


திவ்யா : உனக்கு அறிவு இல்லையா… அவர் எனக்கு நல்ல நண்பர், அதை தாண்டி ஒன்னும் இல்லை என்றாள்.

பவி : ம்ம்ம் ம்ம்ம்… நம்பிட்டேன், நண்பர் பேசலானா.. யாரும் அழ மாட்டாங்க என்றாள்..

திவ்யா : உனக்கு யார் சொன்னா… நீயா எதையாவது, கற்பனை பண்ணிக்காத…. ஆமாம், அவர் எனக்கு போன் பண்ணவில்லை… என்ன ஆனது, என்று ஒன்றும் தெரியல… யாரோ அன்றைக்கு போன் பண்ணாங்க ஆன எதுவும் சொல்லலனு சொன்னாள்.

பவி : இந்தக் காலத்துல, நேர்ல பார்த்து பேசுறவங்களையே.. நம்ப முடில…. எந்த நம்பிக்கைல… நீ பேசுற என்றாள்..

திவ்யா : நீ பேசிட்டு, பேசாமல் போனா.. எனக்கு எப்படி வலிக்குமோ, அப்படி தான் வலிக்குது, என்றாள்…. சரி சாயங்காலம்… உச்சி பிள்ளையார் கோவில் போகலாமா என்றாள்..

பவி : வேண்டுதல் ‘ஓ… நடத்து , நடத்து என்றால்…

திவ்யா : வர விருப்பம், இருந்தால் வா, இல்லனா விடு என்றாள்..

பவி : சரி.. போகலாம்….

திவ்யா : சரி என்றாள்.. புன்னகையுடன்…


மாலை… வீட்டுக்கு வந்து வேலை எல்லாம் முடித்தால்….

பவியும், வந்தாள்….பாட்டியிடம்.. சொல்லி விட்டு கோவிலுக்கு போனார்கள்..


திவ்யா : ராஜி’ தன்னை விரும்புகிறாரா… என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் திவ்யா மனதில் தோன்றியது..


சரி…. என்று நினைத்து பூசாரியிடம்…. சொன்னாள்… உனக்கு என்ன வேண்டுதலோ, அதை நினைத்துக் கொள்..ம்மா… உனக்குப் பிடித்த நிறம், பூ வந்தாள் நடக்கும்… இல்லை என்றால் தாமதம் ஆகும் என்றார்.. சரிங்க என்றாள்…. பூ போட்டு பார்த்தாள்….


சுவாமியிடம்.. ராஜி மனதில் நான் இருக்கேனா…. அவரிடம் இருந்து போன் வருமா.. இப்படி நினைத்து, வெள்ளை நிற பூ வர வேண்டும்…. என்று வேண்டினாள்….


அவளும் வேண்டி பூ எடுத்தால்…. வெள்ளை நிற பூ தான்…..


சந்தோசம் திவ்யாவுக்கு.


மனதில்….பவிக்கு நன்றி சொல்லி வீடு திரும்பினாள்….


15 நாட்கள் சென்றது….காலை 7 மணி…. திவ்யாவின்…. மொபைல் மணி அடித்தது.. அருண், எடுத்தான்…. திவ்யா…. என்றான்.. ராஜி, நீங்க யார்? Sir….


திவ்யா வேலையா.. இருக்காங்க…. என்றான் அருண், ராஜிக்கு ஒன்னும் புரியவில்லை.. இவர் திவ்யாவின்…. மாமாவா.. அண்ணாவா.. என்று தெரியவில்லை…


நான், திவ்யாவின் உடன் படிக்கும்… அறிவுகரசியின், அண்ணா.. என்றான்…. பேயர் ராஜி, என்றான்.


திவ்யா…. தன்னை பற்றி எல்லாம் சொல்லியதால்…. ராஜி சமாளிக்க வசதியாக இருந்தது….


அருண், அப்படியா! என்னனு சொல்லுங்க… நான் திவ்யாவிடம் சொல்லுகிறேன்… என்றான்…


.

 ராஜி : என் தங்கச்சிக்கு…. உடம்பு சரி இல்லை… அவள் காலேஜ்’கு வர மாட்டாள் என்று சொல்லுங்கள் என்று சொல்லி முடித்தான்….


அருண், திவ்யா.. திவ்யா… என்றான்… என்ன மாமா… என்றாள்…திவ்யா..


ராஜி’னு, யாரோ உன் கூட படிக்கிற அறிவுக்கரசியோட அண்ணனாம், போன் பண்ணினாங்க என்றான்.. திவ்யாவுக்கு தெரிந்து விட்டது, ராஜி தான் அது….


வேலையை முடித்துவிட்டு போன் அடித்தால்..


ராஜி : Hey..! திவ்யா… எப்படி இருக்க….?


திவ்யா : நான் நல்லா இருக்கேன்… ஏன் போன் பண்ணல… என்னாச்சு என்றாள்.


ராஜி : நாளை எனக்கு ஆபேரஷன் திவ்யா… சுவாமி கிட்ட வேண்டிக்கோ என்றான்..


திவ்யா : என்னாச்சி உங்களுக்கு… அதனால்தான் போன் பண்ணலயா … யார் இருக்கா கூட’ னு, கேட்டா…


ராஜி : என் நண்பன் இருக்கான்… கூட ஒன்னும் இல்லை மா… காதுல, ஒரு கட்டி அதை அப்படியே விட்டா.. Problem – னு, ஆபேரஷன் பண்ணிடலாமனு, வேற ஒன்னும் இல்ல…. பயப்பட வேணாம்…. அம்மா வந்துடுவாங்க, நான் அப்புறம்… போன் பண்றேன்…. உடம்பப் பார்த்துக்கோ என்றான்..


திவ்யா : சரி…. ஆபேரஷன் முடிந்த பிறகு போன் பண்ணுங்க என்றாள்…. இருவரும் இணைப்பைத் துண்டித்தார்கள்..


திவ்யாவுக்கு மனதில் சந்தோசம்….கரை புரண்டது…. வெளியில் சொல்ல வழி இல்லை..


 ராஜி கிட்ட இருந்து போன்…. வந்ததால்…. அவள் மனம் அமைதி ஆனது…. ஆனாலும் அவன் எப்படி இருப்பான் என்று அவளின் நினைவு கற்பனை செய்ய… தொடங்கியது… வானத்தில் மேக கூட்டம் நடுவில் அவன் உருவத்தை வரைந்து பார்த்தாள்…. திவ்யா…. பாவம் அவளுக்கு தெரியவில்லை…. நாம் நினைக்கும் எதுவும் நடக்காது என்று…..


திவ்யா மறுநாள்… எழுந்தாள்…. குளித்தால்… காலேஜ்க்கு கெளம்புவது போல் கிளம்பினாள்… அவளின் மாமா… காலேஜ்- ல் விட்டவுடன்… அவள் சிறிது நேரம் கழித்து…. பவித்ராவுக்கு போன் பண்ணி வெளியில் வர வைத்தால்….


பவி : என்ன திவ்யா… உள்ள வா என்றாள்…


திவ்யா : இல்ல பவி…. ராஜிக்கு ஆபேரஷ’ னு, சொன்னாரு…. இன்னைக்கு…. நான் கோவிளுக்குப் போக போறேன்… என்னை கூட்டிட்டு போறியா..


பவி : திவ்யா… மனதைப் புரிந்துக் கொண்டு..சரி வரேன்… இரு டி..


என்றாள்….


பவி : தன் வகுப்புக்கு போய்… அறிவுகரசியையும்… அழைத்து வந்தாள்…. மூவரும்…. கோவிலுக்கு போனார்கள்…. ரங்கநாதனை பார்க்க…. காலை 9 மணிக்கு கோவிக்குள் போனவர்கள்… மாலை சரியாக… 5 மணிக்கு காலேஜ் வாசலுக்குள்…. வந்து அடைந்தார்கள், அதே நேரம்… அருனும் வந்தான்…. திவ்யாவை… கூட்டிச் சென்றான்.


இதுவரை அறிவுக்கு எதுவும் தெரியாது… ஆனால் இன்று தெரிந்து கொண்டாள்.


திவ்யா அன்று முழுவதும் சாப்பிடவில்லை…. விரதம்…. இருந்தாள்…. இந்தக் காலத்து’ ல… அடுத்தவர்களுக்கு என்ன ஆனா என்ன, நாம நல்லா இருந்தா போதும்… நினைக்குறாங்க… ஆனால்…. முகம் அறியாத… ஒருவருக்காக வேண்டினாள்….

ராஜின் போன்னுகாக…. காத்து இருந்தாள்….அன்று வரவில்லை.. காலேஜ்-ல, கடைசி வருடமும்… முடியும்… நிலைக்கு வந்து விட்டது.


ராஜிக்கு…. நல்ல படிய ஆபேரஷன் முடிந்தது. அவனுக்கு ஒடம்பு குணம் அவதற்குள், அவனுக்கும்…. பரிட்சை.. தேதி அறிவித்து விட்டார்கள்.


திவ்யாவுக்கு…. போன் பண்ணி பேச கூட நேரம் இல்லாமல் போனது…. ஒரு Message மட்டும் அனுப்பினான்…. திவ்யா மனிச்சிடு, உடம்பு நல்லா ஆயிடிச்சி, பரிட்சை நேரம்… நன்றாக பரீட்சை எழுது, நானே போன் பண்றேன்… என்று அனுப்பி இருந்தான்.

அவன் அனுப்பிய மெசேஜ்- யை திவ்யாவால் பார்க்க முடிய வில்லை…. காரணம் மறு வாரம் பார்ப்போம்….

                                                                                                         மீண்டும் நிழல் தொடரும்….
சென்ற   வாரம்   கதையைப்   படிக்க :

நிஜம் நிழல் ஆனது part 6 – Nijam Nizhal Aanathu part 6  

நிஜம் நிழல் ஆனது part 5 – Nijam Nizhal Aanathu -True Love Story

நிஜம் நிழல் ஆனது part 4 – True Love Story

 

0.00 avg. rating (0% score) - 0 votes