நிஜம் நிழல் ஆனது – Nijam Nizhal Aanathu – True Love Story


அன்பைப் புரியவைக்கும் ஓர் அழகான காதல் காவியம் 

By Mullai  : 


திவ்யா      :   ராஜி உடம்பு சரி ஆகிவிட்டதா என்றாள்…
 
ராஜி       :   திவ்யா… நல்ல இருக்கேன்… Sorry பரீட்சை ஆரம்பம் அதனாலதான் … போன்   பண்ண    முடில   என்றான்…
 
 
திவ்யா    :    பரவாயில்லை விடுங்க…. exam முடித்து விட்டதா என்றாள்..
 
 
ராஜி          :  இன்னும் 1 இருக்கு திவ்யா… என்றான்…
 
 
திவ்யா      :   சரி நல்ல படிங்க… என்றாள்…
 
 
ராஜி           :    உங்க கிட்ட ஒன்னு கேட்கவா என்றான்…
 
 
திவ்யா      :    என்ன கேட்பரோ… என்று மனதில் பயம்…. கேளுங்க என்றாள்…
 
ராஜி            :     என்னைப்   பார்க்கணும்னு   ஆசை  இல்லையா… என்றான்…
 
 
திவ்யா   :   மனதுக்குள் சிரித்துக்  கொண்டு, அப்படி இல்ல ராஜி… என்னால்… தனியாக   வர   முடியாது,   அவ்ளவுத்   தூரம்  என்றாள்….
 
 
 
ராஜி           :    இரு… இரு…
உன்னை   யார்   வர   சொன்ன   இப்போ… நீ சொன்ன… நான் வரேன்… என்றான்…
 
 
திவ்யா    :   திவ்யாவுக்கு  சந்தோசத்தை  சொல்ல  முடில… சரி  சொல்லறேன்… என்றாள்…
 
 
ராஜி        :   நான்,  உன்  ஊருக்கு.  வந்தா   கோவிலுக்குக்  கூட்டிட்டுப்  போக மாட்டியா  என்றாள்…
 
 
திவ்யா      :   கண்டிப்பாக போகலாம்… என்றாள்…
 
 
ராஜி            :     உன் போன் என்னாச்சு… ஏன் கால் போல என்றான்…
 
 
 
திவ்யா    :  Repair, ராஜி… வேற போன் தான் வாங்கணும் எவளோ நாள் ஆகணும்னு  தெரியாது,   மாமா  கிட்ட  கேக்கணும்   என்றாள்…
 
ராஜி       :  வேணாம்… திவ்யா… உன் போன் பவி கிட்ட கொடு… சரி பண்ணி கொடுப்பாங்க… நான் பார்த்துறேன் என்றான்…
 
 
திவ்யா     :  சரி ராஜி, வீட்ல எல்லாரும் இருக்காங்க… நான் உங்க கிட்ட பேசினதே  சந்தோசம்… போன் சரி பண்ணிட்டு, போன் பண்றேன்… உடம்ப பார்த்துகோ   என்றாள்…
 
 
ராஜி        :   ராஜிக்கு, போனை வைக்க  மனசு வரல… ஆனாலும் திவ்யாவின் சூழலை… நினைத்துக்   கொண்டு  சரி  என்றான்….
 
 
திவ்யா தனக்கு உடம்பு சரியில்லைனு ராஜியிடம் சொல்ல வில்லை… வருத்த படுவான் என்று மறைத்தாள்.
 
ராஜியும்,   தனக்குத்   தெரிந்ததாகக்  காட்டிக்  கொள்ள   வில்லை.
 
பவியிடம்… எப்படி அவர் உனக்கு போன் பண்ணினார்… என்று திவ்யா கேட்டாள்…
 
 
பவி        :    நடந்ததைச்  சொன்னால்… ஆனால்… வீட்டில் அவனுக்கு போன் பண்ணி பேசினதை… பவி சொல்ல வில்லை… அதான் இங்க வந்து போன் பண்ணிக்   கொடுத்தேன்…. என்றாள்…
 

 

திவ்யா     :   ரொம்ப… Thanks  என்றாள்…
 
 
பவி          :     சரி  உன்  போன்  எடுத்து  வா…நான்  கிளம்புறேன் … என்றாள்..
 
 
திவ்யா     :     எடுத்து வந்து கொடுத்தாள்…. பவி வீட்டுக்கு சென்றாள்.. பவி வீட்டுக்கு சென்று ராஜிக்கு போன் பண்ணினாள்.
 
ராஜி     :   திவ்யா போனை எனக்கு பார்சல் அனுப்புங்க… பவி நான் அதே மாறி போன்   வாங்கி  அனுப்புறேன் … திவ்யா  கிட்ட  கொடுங்க  என்றான்…
 
 
பவி        :   சரி  என்று  சொல்லி  வைத்தால்…
 
ராஜி    :   மொபைல் வாங்கி அனுப்பினான்…ஆனால்… திவ்யா பெங்களூரு சென்று விட்டாள்…
 
 
திவ்யா… ஒரு நாள் டி.வி பார்த்து கொண்டு இருந்தாள்… அதில்… அழகு நிலவு என்ற பாடல்… ஒரு பெண் பாடினாள்.. இது வரை பாட்டு என்றாள் என்னவென்றே தெரியாதவள்.. முதல் முறை… அந்தப்  பாடல் எந்த படம்… அப்பாடல்  வரிகளை  கேட்க  வேண்டும் ,  என்று  தேடத்   தொடங்கினாள்…
 
 
அதிகமா  கவிதைகளை… படிக்க ஆரம்பித்தாள்… அதில் அவளுக்கு பிடித்த கவிதை…
 
அவள்   என்னிடம்   கூறி  பல  நாட்கள்  ஆனதால்  மறந்தது.. என்  நினைவில் உள்ள  வரை  சொல்லுகிறேன்…
 
வைரமுத்துவின்  வைர  வரிகள்  தான்…
 
 
நீயும் பெண் தானே….
நினைவு என்ன இருக்காதா….
தேயும் இரவுகளில்…. சுக ஏக்கம் பிறக்காத…
காட்டு முனிவனுக்கு காவல் புரிவதற்கு…
தோட்ட புது மலரே…
துயவளே நீ எதற்கு…
பூ அடியில் ஒட்டி இருக்கும் புழுதியும் கலங்கி அழ….
நீ வடித்த கண்ணீர்… நிலம் கழுவ தங்க முனை…
நீயே அழைத்து இருந்தாள்… நெஞ்சு வெடித்து இருப்பேன்… தாயே அழ வேண்டாம்… தவறு என்ன உன் மேலே…தேவடியல் ஆக்கி தெரு தெருவாய் அலையவிட…. பவடித்து விட்டான் பாவி தமிழ் கம்பன்…. என்று முடியும்.
 
இந்த கவிதை… இதில் தலைப்பு அகலிகை…
அகலிகை… என்பவள்… முன்பு ஒரு காலத்தில்… முனிவரால் சாபம் பெற்று… கல் ஆகி… பின்பு ராமானாள்… சாபம் நீங்கி… பெண்ணாய் மாறினாவாள்….
இந்த கவிதை திவ்யாவை மிகவும் பிடித்தது… எனக்கும் இந்த கவிதை என்றாள்… கொள்ளை பிரியம்…
 
இப்படி…உலகை இரசிக்க… ஆரம்பித்தாள் … திவ்யா… காணும் காட்சி அனைத்தும்… அவளுக்கு ராஜியை, நினைவுப் படுத்தியது… இதுவரை மௌனமே வடிவாய் இருந்தவள்… பேச… சிரிக்க… பாட… என்று மாறினாள்… மெல்ல மெல்ல…
 
 
திவ்யாவின் … மாற்றம் அனைவருக்கும் வியப்பைத்  தந்தது… ராஜியிடம் பேசாமல் பல நாட்கள் கடந்தது… அவனை நினைக்காமல்.. ஒரு நிமிடம்… நகரவில்லை…
 
 
அருணின்… அக்கா… அருணுக்கும், திவ்யாவுக்கும்… திருமணம் முடித்து விடவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தாள்…
 
 
திவ்யா… ராஜியிடம்… காதலை சொன்னாளா… இல்லை? அருண்கும் திவ்யாவுக்கும்… திருமணம்  முடிவு  ஆனதா  இல்லையா ?  வரும்   வாரம்  பார்ப்போம்…

சென்ற   வார  கதையைப்  படிக்க :

nijam nizhal aanathu part 8 – நிஜம் நிழல் ஆனது காதல் கதl

0.00 avg. rating (0% score) - 0 votes