இன்றைய நவீன தொழில்நுட்பம் முற்றிலும் வேறு ஒரு பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம்


இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் சில ஒரு காலத்தில் வேறு ஒரு பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்டன ஆனால் இன்றோ அவை முற்றிலுமாக மற்றொரு விஷயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன,
 
ஏழு தொழில்நுட்பங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.
 
 
Microphone 1877ஆம் ஆண்டில் Emile Berliner என்பவர் முதல் மைக்ரோபோனை கண்டுபிடித்தார், அக்காலகட்டத்தில் Emile Berliner மட்டுமன்றி தாமஸ் ஆல்வா எடிசன் உட்பட வேறு சிலரும் மைக்ரோபோனை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள்,  குறிப்பாக தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கூட மைக்ரோபோனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார், இன்னும் சொல்லப்போனால் அவர் Emile Berliner – க்கு  முன்பாகவே மைக்ரோபோன் ஒன்றை உருவாக்கி இருந்தார், 
 
ஆனாலும் Microphone கண்டுபிடிப்பாளராக அலெக்சாண்டர் கிரஹாம்பெல் கருதப்படவில்லை ஏனெனில் அவரது சாதனம் நடைமுறைக்கு வரவில்லை சுவாரசியமாக கிரகாம்பெல் வேறு ஒரு நோக்கத்திற்காக Microphone – யை முயற்சியில் ஈடுபட்டார், Emile Berliner உள்ளிட்ட பிற கண்டுபிடிப்பாளர்கள் சப்தத்தை எழுப்பும் நோக்கத்தோடு மைக்ரோபோனை உருவாக்க முயன்று கொண்டிருக்க, அலெக்சாண்டர் கிரஹாம்பெல் காது கேளாதோருக்கு சத்தத்தை அதிகப்படுத்தி தரும் Hearing head ஒன்றை  உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார், இதற்கு காரணம் கிரஹாம்பெல்லின் தாயார் செவித்திறன் குறைபாடு உள்ளவர் மேலும் கிரகாம்பெல் காது கேளாதோர் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தார், தாயார் செவித்திறன் குறைபாடு உள்ளவர் என்பதால் கிரகங்களுக்கும் கூட சிறுவயதில் இருந்து ஓரளவு செவித்திறன் குறைபாடு இருந்தது.


 
 மேலும் அவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்த காதுகேளாதோர் பள்ளியில் பணியாற்றும் போது, அங்கு பயின்ற Mabel Gardiner Hubbard எனும் செவித்திறன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார், எனவே காது கேட்கும் கருவியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார் கிரகாம்பெல் ஆனால் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை ஒருவேளை அது வெற்றி பெற்றிருந்தால், Mic  முதன்முதலில் காது கேட்கும் கருவி யாக தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்,  ஆனால் கிரகாம் பெல்லின் கண்டுபிடிப்பை மற்றொரு மாதிரி மைக்ரோபோனை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்றுக்கொண்டார் Emile Berliner. 

 

 
Siren    :  இன்று Siren என்பது வரவிருக்கும் ஆபத்தை முன்னறிவிக்கும் அறிகுறியாக கருதப்படுகிறது ஆனால் உண்மையில் சைரன் எச்சரிக்கும் நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்படவில்லை, இன்றைய நவீன சைரனை ஜான் ராபின்சன் என்பவர் 1799 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்,  இன்றைய Siren களின்  அதே ஒளியை கொண்டிருந்தாலும் அவர் அதை ஒரு இசைக்கருவியாக தான் கருதினார்,  பின்னர் 1819 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரரான கார்னியக் டீல்  என்பவர் ஒரு சைரனை உருவாக்கினார், ஆனால் அவர் அதனை விஞ்ஞான பரிசோதனைக்கு பயன்படுத்துவதில் மட்டுமே ஆர்வம் காட்டினார், கொசு றெக்கைகளின் சராசரி வேகம் நீருக்கடியில் ஒளியின் வேகம் மற்றும் இசை குறிப்புகள் ஆகியவற்றை அளவிடவே சைரனை பயன்படுத்தினார், இருப்பினும் அவர் பின்னர் கப்பல்களில் சைரனை எச்சரிக்கும் சாதனமாகவும் பயன்படுத்தலாம், என்பதையும் கண்டு கொண்டார், சாதனங்கள் இரண்டாம் உலகப்போரின் போதுதான் எச்சரிக்கை செய்யும் பிரிட்டிஷ் அரசாங்கம் தனது மக்களை ஜெர்மன் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க சாதனங்களை பயன்படுத்த ஆரம்பித்தது 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் இருக்கும் டிங்கர் விமானப்படை தளத்தில் சுழன்று அடித்த ஒரு சூறாவளியினால் வழக்கங்களும் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம் ஒரு புதிய சூறாவளி எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவதற்கு பதிலாக அதனை  siren – யை  பயன்படுத்த துவங்கியது. பின்னர் 1950 களில் அமெரிக்க ரஷ்ய பனிப் போரின் போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் நிறைவேற்றிய பாதுகாப்பு சட்டத்தின் போதும் அணு ஆயுதத் தாக்குதல் குறித்து எச்சரிக்கை சைரன்களின்  பயன்பாடு நீட்டிக்கப்பட்டது,  இன்று சைரண் ஆம்புலன்ஸ், பயர் சர்வீஸ் முதல் அரசியல்வாதிகளின் வாகனங்கள் வரை பயன்படுத்தப்படுகிறது.  ஒரு காலத்தில் சைரன் ஓர் இசைக்கருவியாக கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 Air Conditioner   :  பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேதியியலில் ஏற்பட்ட முன்னேற்றங்களைத் தொடர்ந்து,  ஏர் கண்டிஷனிங் தொடர்பான ஆராய்ச்சிகள் ஆரம்பித்துவிட்டனர், முதல் பெரிய அளவிலான ஏர் கண்டிஷனிங் இயந்திரத்தை அமெரிக்க கண்டுப்பிடிப்பாளர் வில்லிஸ் கேரியர் என்பவர் 1902 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார், ஏர்கண்டிஷனர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே ஐஸ் தயாரிக்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.  உண்மையில் ஐஸ் தயாரிக்கும் இயந்திரத்தில் இருந்த ஏர் கண்டிஷனிங் பண்புகளை அறிந்த பின்னரே வில்லிஸ் கேரியர் உள்ளிட்ட கண்டுபிடிப்பாளர்கள் ஏர் கண்டிஷனர் இயந்திரங்களை கண்டுபிடிக்க ஆய்வு மேற்கொண்டனர், ஏர் கண்டிஷனிங் இயந்திரத்திற்கு அடிப்படையான ஐஸ் தயாரிக்கும் இயந்திரத்தை முதன் முதலில் கண்டுபிடித்தவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஜான் கோரி என்பவர் ஆவார்,  இவர் கம்ப்ரஸர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஐஸ் -யை  உருவாக்கும்  இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதனை தனது மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்காக காற்றை குளிர்விக்க பயன்படுத்தினார்,  மேலும் அவர் தனது  ஐஸ்  தயாரிக்கும் இந்த கட்டிடங்களின் வெப்பநிலையை சீராக்கவும் உதவும் என நம்பினார் ஆனால் கோரி கண்டுபிடித்த இயந்திரத்தில் கசிவுகள்  இருந்தாலும் ஒழுங்கற்ற முறையில் இயங்கியதாலும்   இயந்திரமாக அங்கீகரிக்கப்படவில்லை பின்னர் அவர் 1851 ஆம் ஆண்டு தனது ஐஸ் தயாரிப்பு இயந்திரத்திற்கு காப்புரிமை பெற்றார் பின்னர் 1902 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ப்ரூக்லின்  நகரில் இருக்கும் shortcut wilkins லித்தோகிராபி நிறுவன அதிகாரிகள் ஏர் கண்டிஷனிங் தொழில்நுட்பத்தில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த  வில்லிஸ் கேரியரிடம்  தங்கள் அச்சக தொழிற்சாலைக்குள் அவ்வப்போது ஈரப்பதம் உருவாக்கி அச்சிடுவதற்கு பயன்படுத்தும் வண்ணங்களை சீர்குலைத்து அதனால் தொழிற்சாலையின் வெப்ப நிலையை சமச்சீராக பராமரிக்கிறது கண்டிஷனிங் அமைப்பு ஒன்றை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள், அர்ச்சக தொழிற்சாலைக்காக வில்லிஸ் கேரியர் அப்போது உருவாக்கித் தந்த அந்த முதல் ஏர் கண்டிஷனிங் இயந்திரம் தான் இன்று வீடுகள் அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரத்திற்கான அடிப்படை.
 
 

Android    :  ஆப்பிள் ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு போட்டியாளராக இருக்கும் ஆண்ட்ராய்டு கடந்த 2003 ஆம் ஆண்டு 4 பேர் கொண்ட குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.  டிஜிட்டல் கேமராகளுக்கான  ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கும் நோக்கத்திற்காகவே ஆண்ட்ராய்ட் கண்டுபிடிக்கப்பட்டது, அதாவது போட்டோகிராபர்கள் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை எந்த ஒரு  கேபிள்  உதவியும் இன்றி கணினியில் சேமிக்கவும் அல்லது இணையத்தில் சேமிக்கவும் பொருட்டு ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டது 2004ஆம் ஆண்டு முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி உதவியை பெற தொடங்கும்வரை ஆண்ட்ராய்ட் டிஜிட்டல் கேமரா களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ற பார்வையை கொண்டிருந்தனர் அதன் கண்டுபிடிப்பாளர்கள், ஆனால் டிஜிட்டல் கேமரா சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதையும், அதே நேரத்தில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்து வருவதையும், உணர்ந்த அவர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாற்றம் செய்தனர் பின்னர் ஆண்ட்ராய்ட் கூகுள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் மாற்றப்பட்டது.
 
 ஸ்டீம் என்ஜின்   :  நீராவி என்ஜின் முதல் தொழில் புரட்சியின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று ஆகும், இன்று பழமையானதாக கருதப்படும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தொழிற்சாலைகள், இயந்திரங்கள், ஆலைகள், ஆகாயக் கப்பல்கள், ரயில்கள் மற்றும் படகுகள் என அனைத்தையும் இயக்க நீராவி என்ஜின்  தான் பயன்படுத்தப்பட்டது, இத்தகைய நீராவி எஞ்சின் ஆனது நிலக்கரி சுரங்கத்தில் தேங்கும் நீரை வெளியேற்றும் நோக்கத்திற்காகவே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. 
 
நீராவி என்ஜின் பல நூற்றாண்டுகளாக அபிவிருத்தியில் இருந்தபோதிலும் ரோபோக்களை போலவே ஆரம்பகால நீராவி இன்ஜின்கள் பயன்படுத்த சாத்தியமற்றதாகவே இருந்தன, 1706 ஆம் ஆண்டில் Jerónimo de Ayanzஎன்பவர் உருவாக்கிய நீராவி என்ஜின்  பயன்படுத்தக் கூடியதாக இருந்தது என்றாலும் அது நீராவியால் இயங்கும் ஒரு இயந்திரமாக கருதப்பட்டதே அன்றி நீராவி என்ஜின்  ஆக கருதப்படவில்லை நிலக்கரி சுரங்கத்தில் தேங்கும் நீரை வெளியேற்றும் பொருட்டு அவர் அந்த நீராவி இன்ஜினை உருவாக்கி இருந்தார், ஆனால்  Ayanz   உருவாக்கிய   நீராவி என்ஜின்  திறன் குறைந்ததாக இருந்தது அதன் பிறகு 1698 ஆம் ஆண்டு Thomas Saveryஎன்பவர் ஓரளவு திறன் வாய்ந்த ஒரு நீராவி இன்ஜினை உருவாக்கினார்,  Ayanz  போலவே Thomas Savery – யும்  நிலக்கரி சுரங்க நீரை வெளியேற்றும் நோக்கத்திற்காகவே நீராவி இன்ஜினை உருவாக்கினார் என்றாலும் Thomas Savery – யின்  நீராவி எஞ்சின் போதுமான திறனை பெற்றிருக்கவில்லை மேலும் அது ஆழமற்ற சுரங்கங்களிலிருந்து மட்டுமே நீரை வெளியேற்றியது அதோடு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடிய சாத்தியம் கொண்டதாக இருந்தது பின்னர் 1711 ஆம் ஆண்டு தாமஸ் நியூ கோமான் என்பவர் ஆழமான சுரங்கங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்டதாக நீராவி இன்ஜினை மேம்படுத்தினார் இருப்பினும், அவரது நீராவி எஞ்சின் நன்கு வேலை செய்தாலும் போதுமான திறன் பெற்றதாக இல்லை பிறகு 1765 ஆம் ஆண்டு தாமஸ் நியூ கோமான்  கண்டுபிடித்த நீராவி எஞ்சினில் ஜேம்ஸ் வாட் என்பவர் பல்வேறு ஏற்பாடுகள் செய்து மிகுந்த திறனுடைய நீராவி எஞ்சின் ஆக மாற்றினார்.  ஜேம்ஸ்  வாட்  நீராவி எஞ்சின் தான் தொழிற்சாலைகளிலும் வாகனங்களிலும் பயன்படுத்தப்பட்டது.. 
App Store  :  இன்று எந்த ஒரு ஸ்மார்ட் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு Thirt Party App – களே,  பிரதானமாக இருக்கின்றன Thirt Party App – களே,அண்ட்ராய்டு மற்றும் ios ஐ தவிர்த்து வேறு ஒரு புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதயம் ஆகாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கின்றன,  இன்று இணையத்தில் இருக்கும் பல லட்சக்கணக்கான மொபைல்  App  – கள் ,  அண்ட்ராய்டு மற்றும் ios மட்டுமே இயங்கக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளதால் புதிய மொபைல் ஓஎஸ் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருக்கிறது, சுவாரசியமாக ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஐ-போன் வெளியிட்டபோது ios app களுக்கான ஆப் ஸ்டோர் நிறுவப்படவில்லை.
 
ஆப்பிள் நிறுவனம் அப்போது  App  டெவெலப்பர்களை  mobile க்கு App  – க்கு பதிலாக web app களை உருவாக்க மட்டுமே அனுமதித்தது, இந்த ஆப்கள் சபாரி பிரவுசரில் மட்டுமே திறக்கக்  கூடியதாக இருந்தன பின்னர்  App   டெவலப்பர்கள், Web  App – கள் ,  mobile app களை போல சரியாக இல்லை என கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்  கொள்ள,  ஆப்பிள் நிறுவனம்  கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் நாள் வெறும் 500 ஆப் – களுடன் ios app ஸ்டோரை நிறுவியது. 

Programmable Robot  :  programmable robot என்பது சாப்ட்வேர் இடும் கட்டளைக்கு ஏற்ப வேலை செய்யும் robot ஆகும்,  இன்று ரோபோட்கள் தொழிற்சாலை, மருத்துவம், அறிவியல், விண்வெளி ஆய்வு, உணவு பேக்கேஜிங் போன்ற பல்வேறு துறைகளில் முக்கிய பங்காற்றுகின்றன. அறுவை சிகிச்சை செய்யக் கூட ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன அவர்களின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி செல்கிறது இருப்பினும் முதல் டிஜிட்டல் மற்றும் program செய்யக்கூடிய robot 1954 ஆம் ஆண்டு ஜார்ஜ் தேவ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஜார்ஜ் கண்டுபிடித்த முதல் programmable robot  யூனிமேட்   என்று அழைக்கப்படுகிறது.
இந்த ரோபாட் ஒரு கைத்தொழில்துறை robot ஆகும் இன்று வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் இந்த unimed  robot  வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்காக கண்டுபிடிக்கப்படவில்லை மாறாக die casting எனப்படுகிற,  உருகிய உலகத்தை அச்சுக்குள் வார்க்கும் ஆபத்தான வேலை செய்யவே கண்டுபிடிக்கப்பட்டது முதல் யூனிட் robot நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் die casting plant in 1959 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது,  அதன் பின்னர் மற்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த யூனிமேட் ரோபோட்டை  தங்கள்  die  casting  நிறுவனத்தில் நிறுவிக்கொண்டனர்.


0.00 avg. rating (0% score) - 0 votes