The most powerful biggest star than our sun – நமது சூரியனை விட மிக மிக பெரிய நட்சத்திர அரக்கண் எது தெரியுமா?

 
 
உண்மையில் நமது பூமி, நம்மை விட மிக மிகப் பெரியது அதேபோல நமது பூமி, புதன், வெள்ளி, செவ்வாய் போன்ற கோல்களை விட அளவில் நமது பூமி தான் பெரியது. அந்த பூமியில் தான் நாம் வாழ்கிறோம் மிகச்சிறப்பாக ஆனால் நமது பூமியை விடவும், அளவில் பெரிய கோள்கள் உள்ளது அது வியாழன் சனி, யுரேனஸ், நெப்டியூன் நமது பூமியை விட பல மடங்கு பெரியது.
 
 
இந்த கோள்கள் 1300 பூமிகளை ஒன்றாக வைத்தால் மட்டுமே வியாழன் ஜூபிட்ர் அளவை நெருங்கும் போது நமது பூமி வியாழனை விட மிக மிக சிறிய அல்லவா, உண்மையில் சூரிய குடும்பத்தில் கோள்களில் மிக மிகப் பெரியது வியாழன் தான், ஆனால் வியாழன் மிகமிகச் சிறியது சூரியனைவிட தெரியுமா வியாழன் மற்றும் மற்ற கோள்கள் எல்லாம் ஒன்றாக இணைத்தால் கூட சூரியனின் கால்வாசி அளவை கூட நெருங்க முடியாது, சுமார் பதிமூன்று லட்சம் பூமிகளை ஒன்றாக இணைத்தால் எவ்வளவு பெரியதோ அந்த அளவுக்கு இருக்கும் நமது நட்சத்திரமான சூரியன்  அப்போது நம்மை பொறுத்தவரை மிகப் பெரியது சூரியன் தான் என்று நினைத்தால் நான் சொல்ல போகும் தகவல் நமது சூரியன் எல்லாம் ஒரு சைஸ் கிடையாது என்று ஆகிவிடும், என்னை பொறுத்தவரை இந்த பெரிய பெரிய அளவை புரிந்து கொள்ளும் அளவிற்கு நமக்கு மூளை போதுமான அளவில் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை சரி பார்க்கலாம் வாருங்கள் அந்த பெரிய அரசனை யார் என்று.
 
நமது சூரியனின் விட்டம் 1.39 மில்லியன் கிலோ மீட்டர் விட்டம், பூமியின்  விட்டம்  12742 கிலோமீட்டர் மட்டும்தான், அந்த பெரிய நட்சத்திரம் VY Canis Majoris  நட்சத்திரத்தைப் பற்றி தான் பார்க்க போகிறோம். முதலில் நாம் ஒரு மில்லியன் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும், ஒரு மில்லியன் என்பது பத்து லட்சங்கள்தான் ஒரு மில்லியன், அதுபோல ஆயிரம் மில்லியன் தான் ஒரு பில்லியன், ஆயிரம் மில்லியன் என்றால் நூறு கோடிகள் அதுதான் ஒரு பில்லியன், அதுபோல 1.9 கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் கிலோ மீட்டர் விட்டம் அதாவது 200 கோடி கிலோ மீட்டர் விட்டம் VY Canis Majoris   நாம் கற்பனையாக VY Canis Majoris நட்சத்திரத்தில் ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதி செல்ல 200 கோடி கிலோமீட்டர் போக வேண்டி இருக்கும் அவ்வளவு பெரிய VY Canis Majoris.
சூரியனின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதி போக 13 லட்சம் கிலோமீட்டர் எடுத்துக் கொள்ளும் நாம் செல்ல ஆனால் VY Canis Majoris 200 கோடி கிலோ மீட்டர்,  நாம் ஒரு விமானத்தை எடுத்துக் கொண்டு பூமியில் எங்கும் நிறுத்தாமல் பயணம் செய்தால், பூமியை முழுமையாக கடக்க 40 மணி முதல் 50  மணி நேரம் ஆகும்,  அதே விமானத்தை VY Canis Majoris நட்சத்திரத்தை கடந்து செல்ல ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் போக 1100 வருடங்கள் ஆகும்,  சும்மாவா 200 கோடி கிலோமீட்டர்  அல்லவா அதனால்தான் ஆயிரத்து 500 வருடம் ஆகிறது,  இன்னும் ஒரு உதாரணம் இதோ நமது சூரியன் இருக்கும் இடத்தில் ஒருவேளை VY Canis Majoris நட்சத்திரம் இருந்தால் சூரியனிலிருந்து வியாழன் அமைந்துள்ள சுற்றுப் பாதை வரை அடைத்துக்கொள்ளும்.  நமது சூரியன் எல்லாம் மிக மிக சாதாரணமான ஒரு சராசரி நட்சத்திரம் தான் இந்தப் பால்வீதியில் என்பதுதான் உண்மை, சூரியனே இவ்வளவு சிறியது என்றால் பூமி எல்லாம் ஒன்றுமே இல்லை.
 
 பால்வீதியில் உள்ள 400 பில்லியன் நட்சத்திரத்தில் ஒரு நட்சத்திரம்தான் VY Canis Majoris அதுவே இவ்வளவு பெரியது என்றால், இந்த 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ள நமது பால்வீதி எவ்வளவு பெரியது, பால்வீதியின் விட்டம்  ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள், ஒரு ஒளி ஆண்டு  9.46 ட்ரில்லியன் கிலோமீட்டர், ஒரு ட்ரில்லியன் என்பது 1000 பில்லியன் சேர்ந்ததுதான் ஒரு ட்ரில்லியன், அப்பொழுது 9.46 ட்ரில்லியன் என்பது எவ்வளவு சொல்லுங்க இதுதான் ஒரு ஒளியாண்டு, அப்போ ஒரு லட்சம் ஒளியாண்டு எத்தனை ட்ரில்லியன்  வரும்,  அதாவது ஒரு லட்சம் ஒளி  ஆண்டில் எத்தனை பில்லியன் உள்ளது என்று யார் சரியாக பதிவிடுகிறார்களோ  அவர்கள் உண்மையில் திறமையான மனிதர் என்னை பொருத்தவரை,  ஒரு ட்ரில்லியன் என்பது ஆயிரம் பில்லியன் மற்றும் ஒரு ஒளியாண்டு என்பது 9.46 டிரில்லியன் இதை வைத்து முயற்சி செய்யுங்கள்,  அடுத்து நான் சொல்லப் போகும் கேலக்ஸி கணக்கு என் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்தாலும் வருமா என்று எனக்கு சந்தேகம் தான்.
அந்த கேலக்ஸி வேறு எதுவும் அல்ல IC 1101  கேலக்ஸி,  நமது பிரபஞ்சத்தில் உள்ள  Galaxy – களில்  மிக பெரிய  Galaxy  IC1101தெரியுமா,  இந்த Galaxy  IC 1101  – க்கு  முன்னாடியெல்லாம்  நமது milky way Galaxy மிக சாதாரணம்,  இதோ அதைப்பற்றி  நமது  Milky Way  Galaxy – யின் விட்டம்  ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள்,  IC1101  விட்டம்  எவ்வளவு தெரியுமா 3.91 மில்லியன்  Light Years  கிட்டத்தட்ட 4 மில்லியன் Light Years,  ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் அப்பொழுது 4 மில்லியன் 40 லட்சம் ஒளி ஆண்டுகள்,  40 லட்சம் ஒளி ஆண்டுகளில்  எத்தனை பில்லியன் அல்லது ட்ரில்லியன் வரும் என்று நீங்கள் நினைத்து பாருங்கள்.
பின் IC1101- னே  இவ்ளவு  பெரியது என்றால்,  IC 1101 – னோ போல 100 பில்லியன் கேலக்சிகள் வைத்துள்ள நமது பிரபஞ்சம் எவ்வளவு  பெரியது. இப்பவே தலை கிறுகிறுவென்று சுற்றுகிறது சரிதானே மற்றுமொரு உண்மை நான் சொல்லியாக வேண்டும்,  நாம் பார்த்த பூமி, சூரியன், VY Canis Majoris, மற்றும் Milky Way Galaxy, IC1101 Galaxy, அதுபோல 100 பில்லியன்  கேலக்சிகள் எல்லாம் பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டால் வெறும் 5 சதவிகிதத்திற்கும் குறைவு தான் என்கிறது ஆராய்ச்சி, அதாவது பிரபஞ்சம் நூறு சதவிகிதம் என்று வைத்துக்கொண்டால் அதில் வெறும் 5 சதவிகிதம்தான்,  நாம் பார்த்த அனைத்தும் மற்றவை என்ன இதற்கு அப்பால் பிரபஞ்சத்தைப் போல பல எண்ணிலடங்காத பிரபஞ்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவைகள் உண்மையில் உள்ளதா அப்படி இருந்தால் ஒரு பிரபஞ்சத்திற்கும் 6 பிரபஞ்சத்திற்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு என்று நினைத்து கூட பார்க்க முடியாது நண்பர்களே அதற்கும் அப்பால் என்ன தான் இருக்கும் என்று நினைத்தால் எனது மூளை எனக்கு எச்சரிக்கிறது கடைசியில் பைத்தியமாக கூட வாய்ப்பு உள்ளது என்று எனவே நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். 



page 2
page no3



Go To Next Page7


Leave a Comment