ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியப்படுத்தும் வகையில் நமது உடல் உறுப்புகள் செய்யும் 12 ஆச்சரியமான வேலைகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?


ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியப்படுத்தும் வகையில் நமது உடல் உறுப்புகள் செய்யும் 12 ஆச்சரியமான வேலைகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நமது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் சில ஆச்சரியமான விஷயங்களை செய்கின்றன 95 சதவீதம் பேருக்கு தெரியாத அந்த ஆச்சரியங்கள் என்னைப் பற்றி இப்போது பார்ப்போம்.

இதயம்

நமது இதயம் ஒரு அற்புதமான உறுப்பு நமது உடல் முழுவதும் ஆக்சிஜன் மற்றும் ரத்தத்தை பம்ப் செய்கிறது நமது கை முஷ்டி எனவே இருக்கும் இந்த சிறிய உறுப்பு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முறை துடிக்கிறது, ஒரு நாளைக்கு 6 ஆயிரம் முதல் 2,500 லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது, ஒரு பெண்ணின் இதயம் ஆணின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது. இதயம் பற்றிய ஆச்சர்யமான விஷயம் ரத்தம் உடல் முழுதும் செலுத்தப்பட வேண்டும் என்பதால், இதயம் ரத்தத்தை மிக அதிக அழுத்தத்தில் பம் செய்கிற அதாவது இதயம் ஒவ்வொருமுறை சுருங்கும் போது இரத்தத்தை சுமார் 30 அடி தூரத்திற்கு பீய்ச்சியடிக்கும் அளவுக்கு போதுமான அழுத்தத்தை உருவாக்குகிறது.

லிவர்

நமது கல்லீரல் multi-tasking திறன் கொண்ட உறுப்பாகும், கல்லீரல் நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு சிறிய வேலைகளை செய்வதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் இப்படி கல்லீரல் பல வேலைகளைச் செய்தாலும், அதன் முக்கிய வேலையாக இருப்பது செரிமான பாதையில் இருந்து வரும் ரத்தத்தை உடலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்புவதற்கு முன்பு வடிகட்டுவதாகும், மேலும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல் ரத்த உறைவு மற்றும் பிற செயல்பாடுகளுக்கு முக்கியமான புரதங்களை உற்பத்தி செய்வது போன்ற பணிகளும் கல்லீரலில் நடைபெறுகின்றன,. கல்லீரல் பற்றிய ஓர் ஆச்சரியமான விஷயம் நமது உடல் உறுப்புகளில் வெட்டினால் மீண்டும் வளரக்கூடிய ஒரே உறுப்பு கல்லீரல் மட்டுமே ஆகும். கல்லீரலின் பெரும் பகுதி நீக்கப்பட்டு வெறும் 25 சதவீதம் மட்டுமே இருந்தாலும் கூட மீண்டும் வளர்ந்து தனது பழைய நிலையை அடைந்துவிடும்.

நுரையீரல்கள்

நுரையீரல்கள் மிகவும் லேசானவை அவற்றை நீரில் போட்டால் மிதக்கும் கூடியவை, ஒவ்வொரு நாளும் சுமார் 10 ஆயிரம் லிட்டர் காற்று நம் நுரையீரல்கள் வழியாக வந்து செல்கிறது. நுரையீரல்களில் Taste Receptor – கள் இருக்கின்றன, அவை கசப்பு சுவையை கண்டறியும் திறன் கொண்டவை நாம் பேசுவதற்கும், சப்தம் எழுப்புவதற்கும் கூட நுரையீரல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, நுரையீரல்கள் பற்றி ஓர் ஆச்சரியமான விஷயம் நுரையீரல்களை திறந்து தட்டை ஆக்கினால் அவற்றை டென்னிஸ் கோர்ட் இன் அளவுக்கு பெரியதாக பரப்ப முடியும்.

சிறுநீரகம்

சிறுநீரகங்களின் முக்கிய செயல்பாடு யூரியா போன்ற கழிவுப் பொருட்களை ரத்தத்திலிருந்து பிரித்து நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்றுவது ஆகும், இந்த செயல்பாட்டை சரியாக செய்ய ஒவ்வொரு சிறுநீரகத்திலும் நெஃப்ரான்கள் எனப்படும் சுமார் 10 லட்சம் முதல் 20 லட்சம் சிறிய வடிகட்டிகள் இருக்கின்றன, சிறுநீரகங்கள் பற்றிய ஓர் ஆச்சரியமான விஷயம் ரீனல் ஹைபொப்ளசிய வாகும். ரீனல் ஹைபொப்ளசிய என்பது இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று மிகவும் பெரியதாகவும், மற்றொன்று மிகவும் சிறியதாகவும் அதாவது குழந்தை கருப்பையில் வளரும் போது, இரு சிறுநீரகங்களில் ஒன்று முழுமையான வளர்ச்சியை அடைந்திருக்காது, இதனால் அந்த சிறுநீரகம் வேலை செய்யாது, அதேநேரத்தில் மற்றொரு சிறு நீரகம் ஆரோக்கியமாக வேலை செய்யும் மற்றும் வளர்ச்சி அடையாத சிறுநீரகத்தின் வேலையையும் சேர்த்து செய்ய அது சராசரியை விட பெரியதாக வளரக்கூடும்.

அட்ரினல்

ஆபத்தை எதிர்கொள்ளும் போது தைரியத்தோடு எதிர்த்து சண்டையிடலாமா அல்லது பயத்தில் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் புடிக்கலாமா, என்பதை நமக்காக தீர்மானிக்கிறது அட்ரினல் சுரப்பிகள் சிறுநீரகங்களுக்கு குல்லாய் போட்டது போல் அவற்றின் மேல் அமைந்திருக்கும், அட்ரினல் சுரப்பிகள் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை வெளியிடுகின்றன, ஆபத்து ஏதாவது நம்மை அணுகும் போது அட்ரினலின் நமது மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது. பின்னர் மூளையானது ஆபத்தை எதிர் கொள்வதற்கு அதிலிருந்து தப்பிக்கவும் நமது உடலை தயார்படுத்துகிறது, அட்ரினல் சுரப்பிகள் வேறு சில முக்கியமான ஹார்மோன்களை வெளியிடுகின்றன, இவை வளர்ச்சிதை மாற்றம் நோய் எதிர்ப்பு அமைப்பு ரத்த அழுத்தம் மன அழுத்தத்திற்கு பதிலளித்த மற்றும் பிற அத்தியாவசிய செயல்பாடு களை கட்டுப்படுத்த உதவுகின்றன. அட்ரினல் சுரப்பிகள் பற்றிய ஆச்சரியமான விஷயம் தான் சுரப்பிகள் சாதாரண ஒரு மனிதனை சூப்பர் மேன் ஆக மாற்றுகின்றன, அதாவது நாம் நம் தசைகளின் திறன்களில் ஒரு சிறிய சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம், ஆபத்தை எதிர்கொள்ளும் போது தசைகளின் வரம்புகளை மீறி செயல்படுகிறோம். பய உணர்ச்சியின்போது அதிகப்படியாக சுரக்கும் அட்ரினலின் நமது உடல் வலிமையை திடீரென அதிகரிக்கிறது உதாரணமாக தன் வேலையுண்டு என இருக்கும் சாதுவான குணம் படைத்த சினிமா ஹீரோ ஹீரோயினை வில்லன் தூக்கி செல்லும்போது மட்டும் சிலிர்த்து எழுந்து கொதித்து 100 பேரை தூக்கி போட்டு மிதித்து தனது சூப்பர் பவரை வெளிப்படுத்துவார், இதற்கு ஹீரோயின் கை மாறி விடக்கூடாது என்ற பயத்தினால் ஹீரோவுக்கு சுரக்கும் அதிகப்படியான அட்ரினலின் திரவமே காரணமாகிறது, சாது மிரண்டால் காடு தாங்காது என்ற பழமொழிக்கு பின்னணியில் இருப்பது அட்ரினல் சுரப்பிகள் ஆகும்.

யூரினரி பிளாடர்

யூரினரி பிளாடர் இடுப்பு அடிவாரத்தில் அமைந்துள்ள சிறுநீர்ப்பை ஓர் வெற்று தசை உறுப்பாகும், சிறுநீரகங்கள் இருந்து சிறுநீர் பையோடு இணைந்திருக்கும் இரு யுரெட்டர் வழியாக சிறுநீர் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் பைக்கு அனுப்பப்படுகிறது, வெற்றியை போல இருக்கும் சிறுநீர் பையில் 400 முதல் 600 எம்எல் அளவில் சிறுநீரை சேமித்து வைக்க முடியும், சிறுநீர்ப்பை பற்றின ஒரு ஆச்சரியமான விஷயம் சிறுநீர்ப்பை பலூனைப் போல சுருங்கி விரியும் தன்மை உடையது ஒரு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு காலியாக இருக்கும் சிறுநீர்பையானது ஒரு பேரிக்காய் அளவிலும் வடிவிலும் இருக்கும்.

பெருங்குடல் சிறுகுடல்

குடல்கள் நமது வயிற்றிலிருந்து ஆசன வாய் வரை போகும் நீண்ட தொடர்ச்சியான குழாய் ஆகும், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சுவதை குடலில் நிகழ்கிறது, குடல்களில் பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மலக்குடல் ஆகியவை அடங்கும், சிறுகுடல் சுமார் 20 அடி நீளமும் ஒரு அங்குல விட்டமும் கொண்டது நாம் சாப்பிடுவதில் இருந்தும் குடிப்பதில் இருந்தும் ஊட்டச் சத்துக்களை உறிஞ்சுவது சிறுகுடலின் வேலை, பெருங்குடல் சுமார் 5 அடி நீளமும் சுமார் மூன்று அங்குல விட்டமும் கொண்டது பெருங்குடல் கழிவுகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி மலத்தை உருவாக்குகிறது. குடலுக்குள் நுழையும் போது அங்குள்ள நரம்புகள் தூண்டப்பட்டு கழிப்பதற்கான உந்துதலை உருவாக்குகின்றன, சிறுகுடல் பற்றிய ஓர் ஆச்சரியமான விஷயம் இது சுமார் ஒரு கிலோ அளவிலான பாக்டீரியாவை கொண்டிருக்கிறது.

ஸ்டொமக்

நமது வயிறு சுமார் ஒரு லிட்டர் அளவுக்கு கொள்ளளவு கொண்டது ஆனால் வயிற்றுக்கு தன்னை விரிவாக்கி கொள்ளும் திறன் இருப்பதால் அது சுமார் நான்கு லிட்டர் அளவிலான உணவுகளை சேமிக்கவும் இடம் கொடுக்கிறது, வயிற்றை பற்றிய ஓர் ஆச்சரியமான விஷயம் வயிற்றில் சுரக்கும் அமிலம் மிகவும் சக்தி வாய்ந்தது இது நாம் உட்கொள்ளும் உணவை மட்டும் அல்லாமல் சில உலோகங்களையும் கரைக்க வல்லது எனவே இந்த அமிலத்தில் இருந்து வயிறு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள சிலர் லைனிங் அடுக்குகளை கொண்டு இருக்கிறது, இந்த லைனில் ஒவ்வொன்றும் ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளன மேலும் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் இந்த லைனிங் அடுக்கு முற்றிலும் மீல் உருவாக்கம் செய்யப்படுகிறது.

மூலை

மனித உடலில் இன்னமும் மர்மமான செயல்பாடுகளைக் கொண்ட ஒரு உறுப்பு மூலையாகும், இதில் சுமார் 100 மில்லியன் நியூரான்கள் இருக்கின்றன, நமது மூளையில் 100 டெராபைட்க்கும் அதிகமான தகவல்களை சேமிக்க முடியுமாம், மூளை பற்றிய ஒரு ஆச்சரியமான விசயம் மூளைக்கு pain Receptor – கள் இல்லை அதாவது மூலையாள், சமிக்ஞைகளை விலக்க முடியுமே தவிர வலியை உணரமுடியாது.

கணையம் ( பேக்ரியாஸ்)

நமது அடிவயிற்றின் பின்புறம் வயிற்றுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் கணையம் சுமார் ஆறு அங்குலம் நீளம் முடையது, கணையத்திற்கு தலை, உடல், வால் ஆகிய பகுதிகள் இருக்கின்றன, கணையத்தின் தலைப்பகுதி அடி வயிற்றின் வலது பக்கத்தில் உள்ளது மற்றும் ஒரு சிறிய குழாய் வழியாக சிறுகுடலின், முதல் பகுதியான டியோட்னம் இணைக்கப்பட்டுள்ளது, கணையம் நாம் உண்ணும் உணவை உடலின் செல்கள் இயங்குவதற்கு எரிபொருளாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது, கணையம் இரண்டு முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது அவை செரிமானத்திற்கு உதவும் வகையில் செயல்பாடு மற்றும் ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் செயல்பாடாகும் கணையம் பற்றிய ஓர் ஆச்சரியமான விஷயம் கணையம் இல்லாமல் நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் ஆனால் அதற்கு தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுகிறது, இல்லாவிட்டால் நீரிழிவு நோய் ஏற்படும் மற்றும் உணவை ஜீரணிக்கும் உடலின் திறனை மாற்றும் எனவே வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோய் சிகிச்சையை பெற வேண்டி இருக்கும்.

சலைவா

சலைவா என்பது மனிதர்கள் உட்பட சில விலங்குகளின் வாயில் உற்பத்தி செய்யப்படும் சர்ச்சை முறை மிகுந்த நீராகும், உமிழ்நீர் சுரப்பிகளில் இருந்து உற்பத்தியாகும் சலைவா 98 சதவீதம் நீரால் ஆனது ஆனால் அதில் Electro Light – கள் சளி, பாக்டீரியா எதிர்ப்பு கலவைகள் மற்றும் பல்வேறு நொதிகள் உட்பட பல வகையான பொருட்களும் இருக்கின்றன, சலைவா நான்கு முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது முதலாவது கெமிக்கல் டைஜஸ்சன் சலைவாவில் அமினோஸ எனப்படும் நொதிப்பொருள் இருப்பதால் நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஸ்டார்ச்சை உடைத்து செரிமானத்திற்கு உதவுகிறது, இரண்டாவது உணவை மெல்லவும் விழுங்கவும் உதவுகிறது, மூன்றாவது லூப்ரிகேட் எபெக்ட் அதாவது வாயில் உட்புறத்தை ஈரப்பதமாக்கி, மென்மையான பேச்சை உருவாக்குகிறது, நான்காவது சால்வென்ட் எபெக்ட் நாம் உண்ணும் உணவை கறைத்து நாக்கு உணவை சுவைக்க அனுமதிக்கிறது, சலைவா பற்றிய ஆச்சரியமான விஷயம் நமது வாய் நாளில் நமது நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு தலைவாவை உற்பத்தி செய்கிறது.

நாக்கு

நமது வாய்க்குள் இருக்கும் தசையால் ஆன உறுப்பு நாக்கு, நாக்கு மக்கோஸா எனப்படும் இளஞ்சிவப்பு திசுக்களால் மூடப்பட்டிருக்கும், நாக்கு சொரசொரப்பாக இருப்பதற்கு நாக்கில் பாப்பிலாக் எனப்படும் சிறிய புடைப்புகள் இருப்பதே காரணமாகும், இந்த பாப்பிலாக்களின் மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான சுவை மொட்டுக்கள் இருக்கின்றன, பேசுவதற்கும் உணவை விழுங்குவதற்கு இன்றியமையாதது, நாக்கு பற்றின ஒரு ஆச்சரியமான விஷயம் ஒவ்வொரு மனிதருக்கும் கைரேகை தனித்துவமாக இருப்பதைப்போல நாக்கின் ரேகையும் தனித்துவமாக இருக்கும்

0.00 avg. rating (0% score) - 0 votes