உங்களின் வாழ்க்கையில் பொதுவாக மனதில் எழும் 5 விதமான சந்தேகங்கள் மற்றும் அதன் விளக்கங்கள்


நம் வாழ்நாள் முழுவதும் நாம் பார்க்கும் சில விஷயங்கள் தொடர்பாக ஏதாவது ஒரு சந்தேகம் எழாமல் இருப்பதில்லை அவற்றைப் பார்க்கும்போது, இது ஏன் எதற்கு எப்படி என்பன போன்ற மனதை அரிக்கும் வினாக்கள் பல தோன்றி மறையும் என்றாலும், அவற்றிற்கான தர்க்க ரீதியான விளக்கங்களை பலரும் பெற்றிருக்க மாட்டார்கள், இவ்வாறு பலருக்கும் வரக்கூடிய சில பொதுவான சந்தேகங்களையும் அதன் விளக்கங்களையும் இப்போது பார்ப்போம்.

விற்பனை செய்யப்படும் பொருட்கள் 99 மற்றும் 199 அல்லது ஆயிரத்து 999 ரூபாய் என விற்பனை செய்யப்படுவது ஏன் :

சூப்பர் மார்க்கெட் ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் 99 மற்றும் 199 அல்லது ஆயிரத்து 999 ரூபாய் என விற்பனை செய்யப்படுவதை நீங்கள் கவனித்து இருக்கலாம், ஏன் நூறு அல்லது இரண்டாயிரம் ரூபாய் என முழுமையான தொகைக்கு விற்பனை செய்யாமல் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே குறைத்து விற்பனை செய்கிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும் இதனை psychologically pricing strategy என அழைக்கின்றனர், அதாவது ஒரு பொருளின் விலையை 200 ரூபாய் என்பதை காட்டிலும் 199 ரூபாய் என அடையாளப்படுத்தும் போது நமது மூளையானது ஒரு ரூபாய் குறைந்து 200 ரூபாய்க்கு மிக அருகில் இருந்த அதனை 100 ரூபாய்க்கு நெருக்கமானதாக வே பார்க்கின்றது இது நமது மனதில் குறைந்த விலை என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கி பொருளை வாங்கத் தூண்டுகிறது, வாடிக்கையாளர்களை உளவியல் ரீதியாக ஏமாற்றும் வியாபார தந்திரம்.

பிறந்த நாள் விழாக்களில் கேக்குகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி பின்பு ஏன் அவற்றை ஊதி அணைக்கின்றனர்

பிறந்த நாள் விழாக்களில் கேக்குகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி பின்பு ஏன் அவற்றை ஊதி அணைக்கின்றனர் என்பதற்கு பின்னணியில் பண்டைய மதச்சடங்கு ஒன்றும், மூட நம்பிக்கை ஒன்றும் இருக்கின்றது, பண்டைய கிரேக்கர்கள் ஒரு வட்டவடிவ கேட்கின் மீது மெழுகுவத்திகளை ஏற்றி கிரேக்க நிலவு கடவுளான ஆர்த்தமிஸ் வழிபடும் மரபு கொண்டிருந்தனர் கேக்கின் வட்ட வடிவம் நிலவையும் அதன் மீது ஏறிய மெழுகுவத்திகள் நிலவு ஒளியும் பிரதிநிதித்துவப்படுத்தியது, நீண்ட காலத்திற்கு முன்பு ஜெர்மனியிலும் கேக் மீது மெழுகுவர்த்தியை ஏற்றி வழிபாடு செய்வது பிரபல பாரம்பரியமாக மாறியது உயிரின் ஒளி என்பதை அடையாளப்படுத்த கேக் மீது ஒரு பெரிய மெழுகுவர்த்தியை வைத்தார்கள், நாளடைவில் இந்த பாரம்பரியமானது ஒரு மூட நம்பிக்கை உடன் பிறந்த நாள் விழாக்களிலும் பிரபலமாகத் துவங்கியது, அதாவது பிறந்தநாள் கொண்டாடும் நபர் மனதில் ஏதேனும் ஒரு விருப்பத்தை நினைத்துக்கொண்டே கேக்கின் மீதி இருக்கும், மெழுகுவர்த்திகளை ஒரே முறையில் ஊதி அனைத்தையும் அழித்து விட்டால் அவர் நினைத்தது நடக்கும் எனவும் அந்த ஆண்டு முழுமையும் அதிர்ஷ்டமாக இருக்கும் எனவும் நம்பப்பட்டது, இதைத்தான் இன்று பலரும் எதற்காக மெழுகுவர்த்தி ஏற்றி ஊதி அணைக்கின்றனர் என்று தெரியாமலேயே பிறந்தநாள் கொண்டாடி வருகின்றனர்.

தோல் பொருட்களில் Genuine leather என குறிப்பிடப்பட்டிருக்கும் ஏன் :

நாம் வாங்கும் பெல்ட் பேக் பர்ஸ் போன்ற தோல் பொருட்களில் Genuine leather என குறிப்பிடப்பட்டிருக்கும், எனவே அது சுத்தமான தோலினால் தயாரிக்கப்பட்டது என பலரும் நினைத்துக் கொள்கின்றனர், ஆனால் அது உண்மையில்லை Genuine leather என்பது தோலுடன் குறைந்த அளவில் வேறு பல பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கின்றது, இரண்டு வகையான leather – கள் Genuine leather என அழைக்கப்படுகின்றன, முதலாவது Bandar leather ஆகும், இதனை துண்டுகளாக்கப்பட்ட தோள்களுடன் பைபர் சீட்களை பசைப் போல பினைத்து தயாரிக்கின்றனர், மற்றொன்று buy cost leather அல்லது split leather ஆகும், ரோமத்திர்க்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் மெல்லிய தோலை பிரித்து எடுத்தால் அதன் பெயர் Top line leather அதற்கு அடியில் இருக்கும் பகுதியை தனியாக பிரித்து எடுத்தால் கிடைப்பது Split leather ஆகும், இதனுடன் பாலியுரத்தின் கோட்டிங் செய்து ஹை குவாலிட்டி லெதர் போன்று மாற்றி விடுகிறார்கள், எனவே Genuine leather என குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களில் கொஞ்சம் தோல் கலந்து இருந்தாலும் முழுமையாக தோலால் ஆன பொருள் அல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

கொல்கத்தாவில் மட்டும் காவலர்கள் வெள்ளை நிறத்தில் சீருடை அணிகின்றனர் :

இந்தியா முழுவதும் உள்ள காவல் துறையினர் காக்கிச் சீருடையை அணிகையில், கொல்கத்தாவில் மட்டும் காவலர்கள் வெள்ளை நிறத்தில் சீருடை அணிகின்றனர், என்ற சந்தேகம் உங்களுக்குஏற்பட்டிருக்கலாம், மேற்குவங்க மாநிலத்தை பொறுத்தவரை காவல்துறை இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது ஒரு பிரிவு மேற்குவங்க காவல்துறை எனவும் மற்றொரு பிரிவு கொல்கத்தா காவல்துறை எனவும் செயல்படுகிறது, மேற்குவங்க காவல்துறை என்பது மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் காவல் பிரிவு இவர்கள் காக்கிச் சீருடையை அணிகின்றனர், ஆனால் கொல்கத்தா காவல் துறை செயல்படும் காவல் பிரிவு இந்த இரு பிரிவினரையும் வேறுபடுத்திக் காட்டவே கொல்கத்தா காவல்துறையினரின் சீருடை வெள்ளை நிறமாக உள்ளது.

ஆபாச படங்கள் ஏன் ப்ளூ ஃபிலிம் என்று அழைக்கப் படுகின்றன :

ஆபாச படங்கள் ஏன் ப்ளூ ஃபிலிம் என்று அழைக்கப் படுகின்றன, என்று படத்தை பார்த்துவிட்டு மிரண்டு போய் உட்கார்ந்து இருக்கும் போது பலரும் யோசித்து இருப்பார்கள், இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதாவது ஆரம்ப காலங்களில் சினிமா பட போஸ்டர்கள் கருப்பு வெள்ளையாக அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டன இவற்றிலிருந்து ஆபாச பட போஸ்டர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கு ஆபாச படங்களை திரையிடும் திரையரங்குகள் நீலமும் வெள்ளையும் கொண்ட போஸ்டர்களை அச்சடித்து ஒட்டி இதனாலேயே ஆபாச படங்கள் ப்ளூ ஃபிலிம் என அழைக்கப்பட்டதாகவும் மேலும் அக்காலகட்டத்தில் படம்பிடிக்க தேவையான ரீல்களின் விலை மிகுதியாக இருந்தது எனவே தயாரிப்பு செலவினங்களை குறைக்கும் பொருட்டு ஆபாச பட தயாரிப்பாளர்கள் விலை மலிவான மூன்றாம்தர ரீல்களை பயன்படுத்தி வருகின்றனர், இத்தகைய தரம் குறைந்த ரீல்களில் பதிவு செய்யப்படும் காட்சிகள் தெளிவில்லாமல் நீல நிறக் கலவையுடன் இருந்ததாலும் Blue Flim படங்கள் என அழைக்கப்பட்டன, தற்போது ஆபாச படங்கள் எச்டி தொழில்நுட்பத்தில் தயாரித்தாலும் பாரம்பரியம் காரணமாக ப்ளூ ஃபிலிம் என்றே அழைக்கப்படுகின்றனர்.

5.00 avg. rating (91% score) - 1 vote