இதெல்லாம் இந்தியர்கள்தான் கண்டுபிடித்தார்களா?

இதெல்லாம் இந்தியர்கள்தான் கண்டுபிடித்தார்களா?

இதெல்லாம் இந்தியர்கள்தான் கண்டுபிடித்தார்களா?

இதெல்லாம் இந்தியர்கள்தான் கண்டுபிடித்தார்களா? இந்தியா பல்வேறு பின்னணிகளைக் கொண்ட திறமையான மற்றும் ஆக்கபூர்வமான மக்களை கொண்ட ஒரு பரந்த நிலம், இந்தியா உலகிற்கு அறிமுகப்படுத்திய பல அற்புதமான விஷயங்கள் இருக்கின்றன, அவற்றில் 10 விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

The Zero :

Zero – க்கு, எந்தவித பாதிப்பும் இல்லை, ஆனால் zero இல்லாமல் பைனரி சிஸ்டம் இல்லை, கம்ப்யூட்டர்கள் இல்லை, மதிப்பே இல்லாத மதிப்புமிக்க ஜீரோவை கண்டுபிடித்தவர் கணித மற்றும் வானியல் திறமைகளை கொண்ட ஆரியபட்டா, இந்தியர்கள் தான் முதன் முதலில் ஹீரோவை ஒரு குறியீடாக கணித செயல்பாடுகளை கூட்டல், கழித்தல் போன்றவற்றை பயன்படுத்தினார்கள்.

The USB :

ஒரு காலத்தில் டேட்டாக்களை சேமிக்க மற்றும் ட்ரான்ஸ்பர் செய்ய சிடி, டிவிடி- க்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டன, இவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் டேட்டாக்களை சேமிக்கவும், டிரான்ஸ்பர் செய்யவும் முடிந்தது, USB flash drive – கள், வந்த பிறகு தான் மிகப்பெரிய அளவில் டேட்டாக்களை சேமிக்க, டிரான்ஸ்பர் செய்ய முடிகிறது, இன்று சுண்டு விரலைக் காட்டிலும், மிகச் சிறிய அளவில் யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவ்கள் கிடைக்கின்றன, சுருக்கமாக யூஎஸ்பி எனப்படும் யுனிவர்சல் – சீரியல் – பஸ், தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, Ajay bat – என்கின்ற இந்தியர் ஒருவர், இவர் ஒரு புகழ்பெற்ற கம்ப்யூட்டர் ஆர்கிடெக்ட் ஆவார்.

Wireless Communication :

கம்யூனிகேஷன் தொலை தொடர்பு புரட்சியை ஏற்படுத்திய ஒரு கண்டுபிடிப்பு தான் வயர்லெஸ் கம்யூனிகேஷன், வரலாற்று ஆசிரியர்கள் வயர்லெஸ் கம்யூனிகேஷன் கண்டுபிடித்ததாக இத்தாலிய விஞ்ஞானி மார்கோனி பெருமை சேர்த்தாலும், சர் ஜெகதீஸ் சந்திரபோஸ் என்ற இந்தியர் தான், மார்க்கோனி – க்கு முன்னரே 1895 ஆம் ஆண்டில் ரேடியோ அலைகளின் பயன்பாட்டை முதன்முதலாக பொதுவில் நிரூபித்தவர், ஜெகதீஸ் சந்திர போசுக்கு, இரண்டு ஆண்டுகள் கழித்த பின்னரே மார்க்கோனி ரேடியோ அலைகளின் பயன்பாடு பற்றிய அவரது டெமொவை நிகழ்த்திக் காட்டினார், வயர்கள், கேபிள்கள், எலக்ட்ரிக் கண்டக்டர்கள், எதுவும் இல்லாமல் நாம் ஒருவரை தொடர்புகொள்ள முதன் முதலில் பாதை அமைத்துத் தந்தவர் சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்.

Intel Pentium :

இன்டல் பெண்டியம் உலகப் புகழ் பெற்றதும் கம்ப்யூட்டர்களில் பரவலாக பயன்படுத்தப்படும், போதுமான Pentium chip – யை, உருவாக்கியவர் இந்தியாவை சேர்ந்த வினோத்தாத் என்பவராவார், இன்டெல் – ன், மைக்ரோ பிராசசர் வளர்ச்சிக்கு வினோத்தாத் செய்த பங்களிப்புக்காக, அவர் Pentium chip – ற்கான தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

Buttons :

இன்று உலகம் முழுக்க ஆடைகளில் கட்டாயமாக இடம் பிடித்திருக்கும் பட்டன்கள் முதன்முதலாக தோன்றியது இந்தியாவில்தான், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரீகத்தை சேர்ந்த மக்கள் கடல் சிப்பிகளில் ஓட்டை சிறிய அளவில் வட்டமாக வெட்டி அவற்றில் சிறிய துளைகளை இட்டு ஒரு அலங்கார ஆபரணமாக பயன்படுத்தினார்கள், பின்னர் மக்கள் படிப்படியாக அவற்றை துணிகளை இணைக்கும் பட்டன்களாக பயன்படுத்தத் துவங்கினார்கள்.

Shampoo :

இன்று உலகம் முழுதும் உள்ள மக்களின் குளியலறைகளில் ஷாம்பூ அத்தியாவசியப் பொருளாகிவிட்டது, இந்த ஷாம்புவை முதன் முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்தியர்கள்தான், 1760 – களில், முகலாய சாம்ராஜ்யத்தின் கிழக்கு பகுதியில் வசித்த மக்கள் குளிக்க போகும் முன் மூலிகைகள் மற்றும் இயற்கை எண்ணைகளை சேர்த்து தலைக்கு மசாஜ் செய்து கொண்டார்கள், இந்த மசாஜுக்கு இந்தி மொழியில் சாம்பு என்று பெயர், பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் சாம்போ என்ற வார்த்தை மருவி ஷாம்பூ என ஆங்கில மொழிக்குள் நுழைந்தது.

FIBRE OPTICS :

பைபர் ஆப்டிக் என்பது நீண்ட தூரத்திற்கு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் இழைகளின் மூலம் ஒளி துகள்கள் மூலம் தகவல்களை அனுப்பபயன்படும் தொழில்நுட்பம் ஆகும், இந்த தொழில்நுட்பம்தான் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு அதிவேக பைபர் ஆப்டிக் இன்டர்நெட் போன் மற்றும் தொலைக்காட்சி சேவைகளை வழங்குகிறது, இத்தகைய பயன்படுத்தச் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்தவர் நரேந்தர் சிங் கப்பானி என்னும் இந்திய ஆவார், பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கப்பானி செய்த பங்களிப்புக்காக அவர் FIBRE OPTICS – ன் தந்தை என அழைக்கப்படுகிறார்.

Board Games :

மூளை காரர்களால் விளையாடப்படும் chess எனப்படும் சதுரங்க விளையாட்டு, கிபி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியாவில்தான் தோன்றியது, பின்னர் இந்த விளையாட்டு இந்தியாவிலிருந்து, பெர்ஸ்யா வரை பரவியது, அரேபியர்கள் பெர்ஸ்யா வை கைப்பற்றியபோது, சதுரங்க விளையாட்டு இஸ்லாமிய உலகத்தின் முக்கிய விளையாட்டாக மாறியது, பின்னர் அங்கிருந்து தெற்கு ஐரோப்பாவிற்கு பரவியது. அதேபோல் Snake and ladder எனப்படும் பரமபத விளையாட்டு இந்தியாவை சேர்ந்த ஞானேஸ்வரர் என்ற மகானால் உருவாக்கப்பட்டது, கிபி 13 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பரமபதம் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் வழியில் நீதி போதனை செய்யும் ஒரு வழியாக பயன்படுத்தப்பட்டது.

AYURVEDA :

Ayurveda என்பது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய ஒரு இயற்கை மருத்துவ முறையாகும், ayurveda மருத்துவ முறைக்கு முக்கிய பங்களிப்பாளராக இருந்தவர் சாரகா என்னும் பண்டைய இந்திய மருத்துவர், தோன்றிய நாள்முதல் இன்னமும் நடைமுறையில் இருக்கும் ஆயுர்வேத மருத்துவம், அலோபதி மருத்துவத்திற்கு மாற்றாக உள்ளது. ஆயுர்வேதம் தற்போது உலகம் முழுக்க பிரபலம் அடைந்து வருகிறது.

CATARACT SURGERY :

கண்களில் ஏற்படும் புரை – யை நீக்க முதன்முதலாக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்தியர்கள்தான், பண்டைய இந்தியாவில் கண்புரை நோயாளிகளின் கண்ணின் லென்ஸ் – யை ஒரு வளைந்த கம்பியை கொண்டு, பார்வையை மறைக்கும் புரையை நீக்கினார்கள், பின்னர் நோயாளிகளின் கண்கள் மிதமான வெப்பநிலையில் உள்ள வெண்ணெயில் கழுவப்பட்டு தொடர்ந்து கட்டப்போடப்பட்டது, பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவராக Susurathaar – ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கண்புரை நீக்கம் முறையானது பிற நாடுகளுக்கும் பரவியது.

5.00 avg. rating (91% score) - 1 vote