Active மற்றும் Passive Voice இவற்றின் வேறுபாடுகள் பற்றி பார்க்கலாம்

.

Active & Passive Voice ( செய்வினையும் மற்றும் செயப்பாட்டு வினையும் )

for example :

       Kamal opens the door
       கமல் கதவைத் திற.

       The door is opened by Kamal
        கதவு கமலால் திறக்கப்பட்டது

இதில் ‘opens’ என்பது Active voice – ல் இருக்கின்றது

இவற்றில் ‘is opened ‘ என்பது Passive Voice – ல் உள்ளது

Subject – யை கூறுகின்ற நபர் அல்லது பொருள் செய்கின்ற வினையின் வடிவம் Active Voice – ல் இருபதாக கருதப்படும்.

Subject கூறும் நபர் அல்லது பொருளுக்கு செய்யும் வினையின் வடிவம் Passive Voice – ல் இருப்பதாகக் கருதப்படும்.

Active voice – ஐ Passive ஆக மாற்ற சில விதிமுறைகள் பார்க்கலாம்.


   1)  முதலில் Subject, verb, object இவற்றை பிரித்து அறியுங்கள்.


   2)  ‘Object’ ஐ ‘ Subject ‘ ன் இடத்திற்கு கொண்டு வாருங்கள்.


   3)  வினைச்சொல்லின் Past participle – ஐ பயன்படுத்த வேண்டும்.


    4)  ‘Tense’ மாறாத Active வடிவத்தில் இருந்து Passive வடிவத்திற்கு மாற்ற வேண்டும்.


    5)  Subject – ஐ Object – ன் இடத்திற்கு மாற்றி, அதற்கு முன்னதாக ‘by’ சேர்க்க வேண்டும்.




     அதாவது I என்பது by me ஆகவும்


     We என்பது by us ஆகவும்


      You – by you ஆகவும்


       He – by him ஆகவும்


       It – by it எனவும்


        They – by them ஆகவும் மாறும்

Active voice – லிருந்து Passive Voice ஆக மாற்ற உதாரணங்கள் பார்க்கலாம்.




Simple present tense – am, is, are + past participle


for example :


I play football  – நான் கால்பந்து விளையாடுகிறேன்.


The football is played by me – கால்பந்து என்னால் விளையாடப்படுகிறது.


He signs the document – அவன் பத்திரத்தில் கையெழுத்து இடுகிறான்.


The document is signed by him –  பத்திரம் அவனால் கையெழுத்திடப்படுகிறது.

Past tense – was, were + past participle

for example :

    He kicked the ball –  அவன் பந்தை உதைத்தான்.

    The ball was kicked by him – பந்து அவனால் உதைக்கப்பட்டது.

   

Future tense & model verbs :  will, shall, can, could, may, might, should, must, would + be past participle.

for example :

     They will play cricket  – அவர்கள் கிரிக்கெட் விளையாடுவர்.

      The cricket will be played by them –  கிரிகெட் அவர்களால் விளையாடப்படும்.

     She will advise him – அவள் அவனுக்கு அறிவுரை கூறுவாள்.

      He will be advised by her  –  அவன் அவளால் அறிவுரை கூறப்படுவான்.

      You can break it  – உன்னால் இதை உதைக்க முடியும்.

       It can be broken by you  –  இது உன்னால் உதைக்கப்பட முடியும்.

Present continuous tense  – am, is, are + being + past participle.

for example :

   I am playing cricket – நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருக்கிறேன்.

   The cricket is being played by me –  கிரிக்கெட் என்னால் விளையாடப்பட்டுக்  கொண்டிருக்கிறது.

He is reading the novel  –  அவன் நாவல் படித்துக் கொண்டு இருக்கிறான்.

The novel is being read by him – அவனால் நாவல் படிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது

Past continuous tense  – was + were +being + Past participle 


for example :


   The recorder was recording the programme  – ஒரு பதிவர் நிகழ்ச்சியை பதிவு செய்து கொண்டு இருந்தது. 


    The programme was being recorded by the recorder – பதிவரால்  நிகழ்ச்சியை பதிவு செய்யப்பட்டுக் கொண்டு இருந்தது. 

Present perfect tense – have, has,+ been + Past participle 


for example :


    I have bought a new scooter – நான் ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்கி இருக்கிறேன். 


    A new scooter has been brought by me – ஒரு புதிய ஸ்கூட்டர் என்னால் வாங்கப்பட்டிருக்கிறது.

Past perfect tense  –  had + been +past participle 


for example :


    He had sent a book –  அவன் ஒரு புத்தகம் அனுப்பி இருந்தான். 


    A book had been sent by him – ஒரு புத்தகம் அவனால் அனுப்பப்பட்டு இருந்தது.