Have ன் பயன்கள்
Have Principle verb ஆக….
I have a pen
நான் ஒரு பேனா வைத்திருக்கிறேன்..
I have to go
நான் போக வேண்டும்
Have auxiliary verb ஆக .
for example :
I have taken my pen
நான் என்னுடைய பேனாவை எடுத்திருக்கிறேன்
Be – பயன்கள் பற்றி பார்க்கலாம்
am, is, are, was, were, been, being, ஆகியவை be – வடிவங்கள் ஆகும் மற்றும் principal verb ஆக பயன்படுத்தலாம்.
Auxiliary verb ஆக சில உதாரணங்கள்
I am respected
நான் மதிக்கப்படுகிறேன்
He was respected
அவர் மதிக்கப்பட்டார்
I am playing
நான் விளையாடி கொண்டு இருக்கிறேன்
முதல் இரண்டு உதாரணங்களில் am எண்பது passive voice வடிவத்திற்காகப் பயன்படுகிறது.
மூன்றாவது உதாரணத்தில் am என்பது continuous tense என்ற வடிவத்திற்கு பயன்படுகிறது.
Do – ன் பயன்பாடுகள் பற்றி பார்க்கலாம்
இவற்றை principle verb ஆக….
They do their duty
அவர்கள் அவர்களுடைய கடமையை செய்கிறார்கள்.
இவற்றை auxiliary verb ஆக..
Do you say so?
நீங்கள் அப்படிச் சொல்கிறீர்களா?
I do not say so ?
நான் அப்படி செல்லவில்லையா?
Shall – பயன்கள் பற்றி பார்க்கலாம்
First person – ல் உபயோகப்படுத்ப்படும்போது சாதாரண எதிர்காலத்தைக் குறிக்கும்.
for example :
I shall come tomorrow.
நான் நாளை வருவேன்.
I shall go tomorrow
நான் நாளை செல்கிறேன்.
second person – ல் அல்லது third person – ல் பயன்படுத்தும்போது… எவ்வாறு மாற்றம் பெறுகிறது என்பதை பாருங்கள்.
for example :
1. கட்டளையிட அல்லது அதிகாரமாக சொல்ல
You shall not steal
நீ திருடவேண்டாம்
2. உறுதியாக சொல்ல
You shall have my book tomorrow
நீ என்னுடைய புத்தகத்தை நாளை பெறுவாய்
3. மிரட்டுதலாக கூற
You shall be dismissed for this
நீ இதற்காக வேலைய விட்டு வெளியேற்றப்படுவாய்
4. மன உறுதியை வெளிபடுத்த
You shall obey me
நீ எனக்கு கிழ் படிய வேண்டி இருக்கும்
( நீ எனக்கு கிழ் படிய கடமை பட்டிருக்கிறாய்)
Will – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்
second மற்றும் third person – ல் பயன் படுத்தும்போது, எதிர்காலத்தில் நடப்பதையும்,நடக்கலாம் என்பதை கூற…..
for example :
he will win the game
அவன் விளையாட்டில் வெல்வான்
you will bring the lunch.
நீ மதியம் உணவு கொண்டு வருவாய்.
Anyone will tell you the way.
வழியை யாரும் உனக்கு கூறலாம்.
( first person – ல் will பயன்படுத்தும்போது சம்மதத்தைத் தெரிவிக்க…..)
for example :
I will carry your bag.
நான் உன்னுடைய பையை சுமப்பேன்.
உறுதி கூற. ….
I will try to inform you
நான் உங்களுக்கு அறிவிக்க முயற்சிக்கிறேன்.
மிரட்ட அல்லது பயமுறுத்த…..
I will punish him.
நான் அவனை தண்டிப்பேன்.
மன உறுதி கொள்ள…..
I will not accept it.
நான் இதை சம்மதிக்க மாட்டேன்.
I will not go.
நான் போக மாட்டேன்.
கேள்விகள் கேட்கும்போது, First person – ல் ‘will’ பயன்படுத்தப்படுவதில்லை.
for example :
Shall I go?
நான் போகலாமா?
கேள்விகள் கேட்கும்போது second person – ல் தேவையைச் சார்ந்து shall மற்றும் will பயன்படுத்தப்படும்.