உலகம் அறிந்த மொழி ஆங்கிலம் ஆகும் .25 எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஆங்கிலமொழியின் வாயிலாக உலகம் முழுக்க உரையாட முடியும் .உலகில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு அழகு இருக்கிறது .ஆங்கிலமும் அதற்குரிய தனி அழகுடன் உலகெங்கும் மிளிர்கிறது ..
எனவே உலகத்தை அறிந்துகொள்வதற்கும் உலகத்தின் அணைத்து மொழி இலக்கியங்களின் வல்லமையை அறிந்து கொள்வதற்கும் ஆங்கிலம் இன்றியமையாத மொழியாகும் .
எனவே ஆங்கிலம் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம் .அவற்றை எளிய முறையில் பாப்போம் ..
முதலாவதாக sentence பற்றி பாப்போம் :
SENTENCE :
sentence is a group of words which make complete sense.
சென்டன்ஸ் என்பது முழுப்பொருள் தரக்கூடிய வார்த்தைகளின் தொகுப்பாகும்.
எடுத்துக்காட்டு (for example ):
Rama has a good knowledge.
ராமா நல்ல பொது அறிவு பெற்றிருக்கிறான் .
The Earth is round.
பூமி உருண்டையானது .
வணக்கம் நண்பர்களே இன்று நாம் sentences type பற்றி பார்க்கலாம் .
Kinds of Sentence:
There are four kinds of sentences.
Sentence நான்கு வகைப்படும் .
- Declarative or Assertive sentence.
- Interrogative Sentence (?)
- Imperative Sentence.
- Exclamatory Sentence.(!)
Declarative or Assertive sentence.
A sentence that makes a statement or assertion is called a Declarative or Assertive Sentence,
ஒரு அறிவிப்பினைக் கூறும் வாக்கியம் Declarative Sentence எனப்படும் .
எடுத்துக்காட்டு (for example)
The Sun sets in the west.
சூரியன் மேற்கே மறைகிறது .
India is our country.
இந்தியா நமது நாடு .
Interrogative Sentence(?):
A sentence that asks a question is called an Interrogative sentence.
ஒரு கேள்வியினை கேட்கும் வாக்கியம் interrogative sentence எனப்படும் .
எடுத்துக்காட்டு :
what is your name?
உன்னுடைய பெயர் என்ன ?
Dose he go?
அவன் போகிறானா ?
What is your age?
உன்னுடைய வயது என்ன?
Imperative Sentence :
A sentence that expresses a command or an entreaty is called an Imperative sentence.
கட்டளை ,விண்ணப்பம் ,விருப்பம்,போன்றவற்றை வெளிப்படுத்தும் வாக்கியம் imperative sentence எனப்படும் .
எடுத்துகாட்டு :
Get my pen.
என் பேனாவை எடு
Please help me
தயவு செய்து எனக்கு உதவுங்கள்
Exclamatory sentence(!):
A sentence that expresses strong feeling is called an Exclamatory sentence.
உடனடியாக வலுவான உணர்வினை வெளிப்படுத்தும் வாக்கியம் Exclamatory sentence எனப்படும் .
எடுத்துக்காட்டு :
How bright the star is!
நட்சத்திரம் எவ்வளவு பிரகாசமா இருக்கிறது!
What nonsense!
என்ன முட்டாள்தனம் !
அவ்வளவுதான் நண்பர்களே Sentence type …
நாளைக்கு SUBJECT AND PREDICATE பற்றிப் பாப்போம் நண்பர்களே ..