Direct and indirect speech நேர்க்கூற்று அயற்கூற்று
ஒருவர் கூறுவதை அவ்வாறே கூறுவது நேர்க்கூற்று Direct speech எனப்படும்
ஒருவர் கூறியதை அவ்வாறு கூறியதாக இன்னொருவர் கூறுவது அயற்கூற்று எனப்படும்.
Direct speech – ல் ஒருவர் கூறிய வார்த்தைகளை மேற்கோள் குறிகள் குறிப்பிடுவோம். Indirect speech – ல்
அதை மாற்றும் போது மேற்கோள் குறியை நீக்கிவிட்டு வார்த்தைகளில் சில மாற்றங்கள் செய்வோம்.
indirect statement – க்கு முன்னதாக that என்ற இடைச்சொல்லை இடவேண்டும்,
personal pronoun-ஐ உரிய முறையில் மாற்ற வேண்டும்.
1) Reporting verb – ஆனது present tense அல்லது future tense – ல் இருந்தால், Reported speech – ன் Verb மாறாது.
சரி நண்பர்களே நாம சில எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.
The teacher says “The boy was lazy”
He teacher says that the boy was lazy
He says “I am going to Delhi”
He says that he is going to Delhi
Raju says “I go to library regularly”
Raju says that he goes to library regularly
Geeta will say ” lunch is ready”
Geeta will say that lunch is ready
2) Reporting verb ஆனது Past tense – ல் இருந்தால் reported speech – ன் verb – ம் past tense ஆக மாறும்.
அதாவது
Simple present tense simple past ஆக மாறும்.
Rahul said, “I like his shirt”
Rahul said that he liked that shirt
The present continuous ஆனது Past continuous ஆக மாறும்.
He said “I am going to Chennai tomorrow”
He said that he was going to Chennai tha next day
The present perfect ஆனது the past perfect ஆக மாறும்.
he said ” I have written the letter “
he said that he had written the letter
past continuous ஆனது past perfect continuous ஆக மாறும்.
he said we were writing the scripts
he said that they had been writing the scripts
The simple past ஆனது past perfect ஆக மாறும்.
he said “I saw the picture”
he said that he had seen the picture
May, can, shall, will, என்பவை முறையே might, could, should, would, என மாறும்.
he said to me ” you may go”
he told me that I might go
he said to me ” I shall call you at night”
he told me that he should call me at night
இந்த விதிமுறைகளுக்கு விதிவிலக்காய், ‘Reported speech ‘ – ல் சில பொதுவான உண்மைகள் – Universal or habitual fact இருந்தால் reported speech – ன் simple present tense மாறாமல் இருக்கும்.
The teacher said, “honesty is the best policy”
The teacher said that honesty is the best policy
மேலும் indirect speech ஆக மாற்றுகையில் கிழ் கண்டவாறு வார்த்தைகள் மாறும்.
now – then
this – that
these – those
thus – so
here – there
ago – before
today – that day
tomorrow – the next day
yesterday – the previous day
last night – the previous night
Raghavan side ” he will come tomorrow “
Raghavan child that he would come the next day.
கேள்விகள் indirect speech ஆக மாற்றும் போது கவனிக்க வேண்டிய சில விதிமுறைகள்
1) Reporting verb னை ‘asked, enquired, demanded என மாற்ற வேண்டும்.
who, whom , whose , what , which , when, how, why, போன்ற வார்த்தைகளில் தொடங்கும் கேள்விகளுக்கு, reporting verb டன் எந்த இணைப்பு வார்த்தைகளும் சேர்க்க வேண்டியதில்லை.
எடுத்துக்காட்டு
The teacher said to me “where is your house”
The teacher asked me where my house was.
he said to me, “how old are you”
he asked me how old I was
Direct speech – ல் கேள்விகள் ‘Auxiliary verb – டன் துவங்கினால்,, Indirect speech ஆக மாற்றும் போது, Reporting verb – டன் இணைக்க if அல்லது whether என்ற இணைப்பு வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும் ‘? ‘ என்ற வினாக்குறியை நீக்க வேண்டும்.
Krishnan said to me “Do you play football?”
Krishna asked me whether I played football.
imperative sentences – ஐ indirect speech ஆக மாற்றும் விதிமுறைகள்.
told, asked, ordered, commanded, requested, advised, encouraged, invited, begged, போன்ற வார்த்தைகளை, தேவைக்கு ஏற்ப Reporting verb ஆக பயன்படுத்தலாம்.
I said to Hari “please give me your pen”
I requested Hari to give me this pen.
“Get out of the class,” the teacher said to the boy.
The teacher ordered the boy to get out the class.
Exclamation – ஐ Indirect speech ஆக மாற்ற சில விதிமுறைகள்.
The reporting verb – ஐ exclaimed, wished, prayed போன்ற வார்த்தைகளால் தேவையைப் பொறுத்து பயன்படுத்த வேண்டும்.
வியப்பினை உணர்த்தும் Alas, Hurrah போன்ற வார்த்தைகளை நீக்கிவிட வேண்டும்.
for example :
Raghu said, “May you live long.”
Raghu wished that he might live long.
She said to him, “May God bless you”
She prayed that God might bless him.
கடந்த காலத்தில் நிகழ்ந்த சரித்திர நிகழ்வை பேச்சு வழக்கில் கூறுகையில், அதை Indirect speech ஆக மாறும் ஆனால் காலத்தை மாற்றுவதில்லை.
The Teacher said, “India became independent in 1947.”
The Teacher said that india became independent in 1947.
இன்னிக்கு இது போதும் நண்பர்களே…. இதை நல்லா படித்து பார்த்து எப்படியெல்லாம் மாறுகிறது என்று பார்த்து புரிதலுடன் கற்றுக் கொள்ள வேண்டும்.
Related to…
Preposition – வேற்றுமை உருபு என்றால் என்ன?