Mood வினைச் சொல்லின் நிலை என்றால் என்ன?
Mood is the mode or manner in which the action denoted by the verb is represented
Mood : மூன்று வகைப்படும்.
1. Indicative mood – தேரி நிலை
நடப்பதை அவ்வாறெச் சொல்வது.
For Ex :
Kannan goes to Library daily
கண்ணன் தினமும் நூலகம் செல்கிறான்.
He is alive.
அவன் உயிரோடு இருக்கிறான்.
கேள்வி கேட்க………….
For ex :
Have you found your pen ?
உன்னுடைய பேனாவை கண்டாயா?
நிஜமாக பாவித்தல் ……….
For example :
If you miss the bus, you can’t attend the meeting
நீங்கள் பஸ் மிஸ் செய்தால், நீங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது.
2. Imperative mood : கட்டளை நிலை
கட்டளையிட :
For Ex :
Sit there
அங்கே உட்கார்
Come here
இங்கே வா
அறிவுரை கூற :
For Example :
Take care of your health
உன்னுடைய உடல்நிலையை கவனித்துக்கொள்
வேண்டுதலாக – பிராத்தனையாக
For Ex :
Have mercy upon us
எங்களிடம் கருணை கொள்ளுங்கள்
சாதாரணமாக, ‘ Imperative mood -னை கட்டாயமாக ‘ Second person ‘ -ல்
மட்டுமே பயன்படுத்த இயலும்.
ஆனால் First மற்றும் Third person -ல் let பயன்படுத்தி கட்டளை நிலை கொண்டு வரலாம்.
Let us go
நாம் போகலாம்.
3. Subjunctive mood – கற்பனை நிலை
விருப்பத்தை வெளிப்படுத்த :
For Ex :
Good be with you
கடவுள் உன்னோடு இருக்கட்டும்.
நிஜத்திற்கு மாறாக நிபந்தனையுடன் :
For Ex :
Had I seen him I would have advised him.
நான் அவனை பார்த்திருந்தால் அவனுக்கு அறிவுரை கூறி இருப்பேன்.
( ஆனால் பார்க்கவில்லை ),