Speech எட்டு வகையாக பிரிக்கலாம்
1. Noun
2. Adjective
3. Pronoun
4. Verb
5. Adverb
6. Preposition
7. Conjunction
8. Interjection
இவற்றை நாம் ஒவ்வொன்றாக தெளிவாக மற்றும் சுருக்கமாக பாப்போம்.
1. Noun ( பெயர்ச்சொல் )
ஒரு நபர், பொருள் அல்லது இடத்தின் பெயர் Noun எனப்படும்.
For Ex :
The Sun rises in the East.
சூரியன் கிழக்கே உதிக்கிறது.
Bangalore is a beautiful city
பெங்களூர் ஒரு அழகான நகரம்.
பார்க்க, கேட்க, சுவைக்க , தொடத்தகுந்த இன்னும் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எண்ணுவதற்கு இயன்ற பொருட்களின் பெயரும் Noun எனப்படும்.
For Ex :
Akbar – அக்பர்
Cauvery – காவிரி
Himalaya – ஹிமாலய
Crowd – கூட்டம்
2. Adjective ( பெயர் உரிச்சொல் )
ஒரு Noun ( நபர், பொருள், இடத்தின், பெயர் ) – ன் தன்மை எண்ணிக்கை தரத்தை குறிப்பிட்டு கூறுவது Adjective எனப்படும்.
For ex :
Rengan is a brilliant boy.
ரெங்கன் ஒரு புத்திசாலி பையன் .
There are Sixty shops in the street.
இந்தத் தெருவில் அறுபது கடைகள் இருக்கின்றன
3. Pronoun ( பிரதீப் பெயர் சொல் )
Noun ( பெயர்ச்சொல் ) – க்கு பதிலாக உபயோகிக்கும் வார்த்தை Pronoun எனப்படும்.
For Ex :
I – நான் , Me – என்னிடம், My – என்னுடைய,
We – நாங்கள், Us – எங்களிடம், Our – நமது,
You – நீ, Your – உன்னுடைய,
His – அவனுடைய , He – அவன், Him – அவனிடம்,
Her – அவளிடம், Hers – அவளுடையது She – அவள்,
It – இது, They – அவர்கள், Them – அவர்களிடம் ,
Their – அவர்களுடைய,
It – உயிரில்லாத பொருட்களுக்கும், மிருகங்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்குப் பொருந்தும்.
4. Verb ( வினைச் சொல் )
ஒரு பொருளின், நபரின், செயல்வினைக் குறிக்கும் சொல் Verb எனப்படும்.
For ex :
sing – பாடுவது
play – விளையாடுவது
write – எழுதுவது
Kannan and surya are very good friends.
கண்ணனும் சூர்யாவும் நல்ல நண்பர்கள்.
I wrote a letter to my friend.
நான் என் நாபனுக்கு கடிதம் எழுதினான்.
5. Adverb ( வினை உரிச்சொல் )
ஒரு VERB , Adjective, அல்லது இன்னொரு Adverb – ன் தன்மையை இன்னும் விளக்கமாக கூறுவதே Adverb எனப்படும்.
அதாவது ஒரு வினைச்சொல் , பெயர் உரிச்சொல், அல்லது இன்னொரு வினை உரிச்சொல்லின் , தன்மையை விளக்கமாக கூறுவதாகும்.
For Example :
He reached the place quickly.
அவன் விரைவாக இடத்தை அடைந்தான்.
The flower is very beautiful.
பூ மிக அழகாக இருக்கிறது.
இவற்றில் Quickly மற்றும் Very என்பது Adverb எனப்படும்.
6. Preposition ( முன்னிடச் சொல் )
இது Noun அல்லது Pronoun – டன் சேர்ந்து வரும்.
இது ஒரு நபர் அல்லது ஒரு பொருளிற்கும் , இன்னொன்றிற்கும் உள்ள உறவைக்காட்டும் .
For Example :
There is a Lion in the Zoo.
மிருகக்காட்சி சாலையில் ஒரு சிங்கம் இருக்கிறது .
Raja sat under a tree.
ராஜா ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்தான் .
இதில் Lion மற்றும் Zoo -வை குறிக்கும் , அதாவது lion -யும் ,அது இருக்கும் இடத்தையும் குறிக்கும்.
அதே போல் Raja மற்றும் Tree -யை குறிக்கும்.
7. Conjunction ( இணைப்புச்சொல் )
வார்த்தைகள் அல்லது வாக்கியங்களை இணைக்கும் வார்த்தை Conjunction எனப்படும்.
For Ex :
Geetha and Meena are sisters.
கீதாவும் மீனாவும் சகோதிரிகள்.
I ran fast but could not meet him.
நான் வேகமாக போனேன் , ஆனால் அவளை சந்திக்கமுடியவில்லை .
For Ex :
After – பிறகு, Before – முன்
But – ஆனால் , because – ஏனென்றால்
8. Interjection ( வியப்புச்சொல் )
உடனடி உணர்வினை, வியப்பினை, ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் சொல் interjection எனப்படும்.
For Ex :
Hurrah! we have won the game.
ஆ ! ஆட்டத்தை வென்று விட்டேன் .
Alas ! The dog is dead.
ஐயோ! நாய் இறந்து விட்டது .
இதில் Hurrah! – மகிழ்ச்சி , Alas ! – வருத்தம்.