should என்பது shall – ன் இறந்தகால வடிவம்
1) கடமையை வலியுறுத்தும் பொருள்பட, பயன்படுத்தும்போது principle verb ஆக வரும்.
for example :
We should obey the parents.
பெற்றோர்களுக்கு நாம் கிழ் படிய வேண்டும்.
He should keep the promise.
அவன் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
2) கடந்த காலத்தில் நின்று எதிர்காலத்தை வலியுறுத்த
for example :
I told him I should meet tomorrow.
நான் நாளை சந்திக்க வேண்டும் என்று அவனிடம் கூறினேன்.
3) நிகழும், நிகழாது என்ற நிச்சயமற்ற, அனுமானத்துடன் கூற
for example :
If it should rain she will not come.
மழை பெய்யுமென்றால் அவள் வர மாட்டாள்.
I should go if I were you.
நான் நீயாக இருந்தால் நான் போவேன்.
Would – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்
Would என்பது will – ன் இறந்தகால வடிவம்
Would என்பது Principle verb ஆகவும் Auxiliary verb ஆகவும் வரும்.
1) மன உறுதியை வெளிப்படுத்த
for example :
He would meet her.
அவன் அவளை சந்திப்பான்.
( அவன் அவளை சந்திக்க உறுதி கொண்டான் )
2) வழக்கமான நடைமுறையை வெளிப்படுத்த
for example :
After dinner, He would generally listen the radio.
இரவு உணவிற்கு பின் அவன் பொதுவாக வானொலி கேட்பான்.
3) சம்மதத்தை தெரிவிக்க….
for example :
Would you please help me?
தயவு செய்து எனக்கு நீ உதவுவாயா?
4) கடந்த காலத்தில் நின்று எதிர்காலத்தை குறிக்க…..
for example :
He said she would meet.
அவள் சந்திப்பதாக அவன் கூறினான்.
5) நிபந்தனையாக……..
for example :
Had he told me, I would have helped him.
அவன் என்னிடம் சொல்லி இருந்தால், நான் அவனுக்கு உதவி செய்திருப்பேன்.
May – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்
இவற்றை நாம் Principle verb ஆகவும் பயன்படுத்தலாம்.
சரி இவற்றை நாம் சில உதாரணங்கள் மூலம் பார்க்கலாம்.
1) சாத்தியத்தைக் கூற….
for example :
He may come.
அவன் வரலாம்.
It may be possible.
அது நடக்கலாம்.
2) அனுமதி பெற… ..
for example :
May I come in sir?
நான் உள்ளே வரலாமா ?
May I come with you?
உன்னுடன் வரலாமா?
3) விருப்பத்தைத் தெரிவிக்க…..
for example :
May God bless you.
கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக.
Can – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்
1) திறமையை வெளிப்படுத்த…..
for example :
I can write.
என்னால் எழுத முடியும்.
I can drive the car?
என்னால் கார் ஓட்ட முடியும்
2) அனுமதிக்க.. …..
for example :
You can play now.
இப்போது நீ விளையாடலாம்.
Could – ன் பயன்கள் பற்றி பார்க்கலாம்
இவை Can – ன் இறந்த கால வடிவம்.
Even as a child she could dance well.
குழந்தையாக இருந்தபோதே அவனால் நல்லா நடனம் ஆட முடிந்தது.
Could I ask you a doubt?
நான் ஒரு சந்தேகம் கேட்கலாமா?
Must – ன் பயன்கள்
1) தேவையைக் கூற…..
for example:
We must follow the rules.
நாம் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
I must finish it today
நான் இன்று இதை முடிக்க வேண்டும்
2) கடமையைக் கூற. . …..
We must not tell lie
நாம் பொய் சொல்ல கூடாது
3) திடமான உறுதியை வெளிப்படுத்த
I must have my own way
நான் என்னுடைய சொந்த விருப்பத்தில் நடக்க வேண்டும்.
4) சில நம்பிக்கைகளை நிச்சியமாக கூறுவது
for example :
He must be cruel.
அவன் கொடுமையானவனாக இருக்க வேண்டும்.
Somebody must have informed him.
யாராவது அவனுக்கு தெரிவித்திருக்க வேண்டும்.
Ought – ன் பயன்கள்
Owe என்பதன் இறந்த கால வடிவம். இது கடமையை வெளிபடுத்தும் நிகழ்கால பயன்பாட்டில் உள்ள நிகழ் காலத்தை குறிக்கும்.
for example :
We ought to love all.
நாம் எல்லோரையும் நேசிக்க கடமைப் பட்டிருக்கிறோம்.
You ought to work hard.
நீ கடினமாக உழைக்க கடமைப்பட்டிருக்கிறாய்.
Dare – ன் பயன்கள்
இவற்றை நாம் துணிவினை வெளிப்படுத்த
for example :
He dares to oppose
அவன் எதிர்க்கத் துணிகிறான்.
He dared to criticise the poem
அவன் கவிதையை விமர்சிக்க துணிந்தான்.
Need – ன் பயன்கள்
இவை தேவையை கூற பயன்படுத்த
for example :
He need not come
அவன் வர தேவை இல்லை
The Radio needs to be repaired
வானொலிப்பெட்டி பழுது தீர்க்கப்பட தேவை இருக்கிறது.