When – ( எப்போது )
When do you get up in the morning?
நீ காலையில் எப்போது எழுகிறாய்?
I get up at 5 o’ clock in the morning.
நான் காலை 5 மணிக்கு எழுகிறேன்.
When do you take your breakfast?
நீ எப்போது உன்னுடைய காலை உணவை சாப்பிடுகிறாய்?
I take my breakfast at 8 AM.
நான் என்னுடைய காலை உணவை 8 மணிக்கு உட்கொள்கிறேன்.
When do you play?
எப்போது நீ விளையாடுவாய்?
I play in the evening.
நான் மாலை நேரத்தில் விளையாடுவேன்.
When is your lunch time?
எப்போது உனது மதிய உணவு நேரம்?
My lunch time is between 1 p.m to 2 p.m.
எனது மதிய உணவு நேரம் 1 மணிக்கும் 2 மணிக்கும் இடையில்.
When is your friend expected to come ?
எப்போது உன்னுடைய நண்பர் வருவாரென எதிர் பார்க்கிறாய்?
My friend is expected to come at 4 pm.
என்னுடைய நண்பர் 4 மணிக்கு வருவாரென எதிர் பார்க்கிறேன்.
When are you going to library?
எப்போது நீங்கள் நூலகத்திற்குப் போகிறீர்கள்?
I am going to the library generally at 5 ‘o clock in the evening.
நான் பொதுவாக மாலை 5 மணிக்கு நூலகத்திற்கு செல்கிறேன்.
When can you complete the work?
எப்போது உன்னால் வேலையை முடிக்க முடியும்?
I can complete the work before next week.
அடுத்த வாரத்திற்கு முன்னதாகவே என்னால் வேலையை முடிக்க முடியும்.
When can you come to my house?
எப்போது நீ என்னுடைய வீட்டிற்கு வர முடியும்?
I can come to your house at 7 pm.
இரவு 7 மணிக்கு என்னால் உன்னுடைய வீட்டிற்கு வர முடியும்.
When did you come to office?
நீ அலுவலகத்திற்கு எப்போது வந்தாய்?
I came to office in the morning itself.
நான் அலுவலகத்திற்கு காலையிலேயே வந்துவிட்டேன்.
When did you meet my father?
நீ எப்போது என்னுடைய அப்பாவை சந்தித்தாய்?
I met your father one hour before.
ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் நான் உன்னுடைய அப்பாவை சந்தித்தேன்.
When will you come here?
எப்போது நீ இங்கு வருவாய்?
I will not come today.
இன்று நான் வரமாட்டேன்.
When will you go to office?
எப்போது நீ அலுவலகத்திற்கு போவாய்?
I will go to office at 9 o clock
நான் அலுவலகத்திற்கு 9 மணிக்கு போவேன்.